கரன்ட்டு கட்டு காத்து  வரட்டும்  கதவைத்திற... 
கதவு , ஜன்னல் . கட்டில் , மெத்தை ,
 கண்ணாடி , சுவர்  என 
 தொட்ட   இடமெங்கும்  சுட்டது  வெப்பம்
   
  மீதமின்றி  மின் விசிறி  கூட்டி 
அரை மனதாய்   அறைக்கதவு   சாத்தி  
 படுக்கை யறையில்  பக்கத்தில்  கணவன்  
கைவைத்ததும்   கணவன்  மார்பில் 
கண் யர்ந்து  கனவில்    நுழைந்தேன்
 நிலம்  தேடும்  நேர் உச்சி  வெயில் 
வெயில்  தோற்கும்  விரிந்த  மரங்கள் 
விரிந்த  மர  நிழல்களுக்கு  உள்ளே   
மனதைக் கவரும்  மழை    நீர்ச் சுனை 
என் னுருவை எனக்கே காட்டும்
தேனை  யொத்த  தெளிந்த நீர்  கண்ணாடி 
 ஆடை  களைத்து   பாதம்  பதித்தேன்   
பாத  ரசம்போல்   பட்டும் படாமல்  
மோதி தெறித்து முழுதாய் மறைய
மோதி தெறித்து முழுதாய் மறைய
மண்டியிட்டு மார்பு நனைத்தேன்
இலவம்  பஞ்சு  போல்  இதயக் கூட்டை 
இலேசாய்  தூக்கி   என்னுடல்   மிதந்தது 
மொட்டு விரிந்த ஒற்றைத் தாமரை
சற்றுத் தொலைவில்  சாய்ந்த  நிலையில்  
கொட்டிப் பரவிய கூலாங் கல்லில்
பட்டும் படாத என் பாதம் தரையில்
தொட்டும்  தொடா  நீர்   தாமரை   இலையில்
 
எட்டிப் பறிக்க இரு கை நீட்டி
ஈரத்தில் அமிலா இறகது போலே
எத்த னித்த என் தோள் தட்டி
எட்டிப் பறிக்க இரு கை நீட்டி
ஈரத்தில் அமிலா இறகது போலே
எத்த னித்த என் தோள் தட்டி
ஒட்டுமொத்த உலக இன்பமும்
உனக்கே ,உனக்கே சொந்தம் உனக்கே     என
காதருகே  யாரோ    சொல்ல    
காரனர்  காண   கண்  விழித்தேன் ......
சொன்னது  கணவர் !
கரன்ட்டுகட்டு   காத்து   வரட்டும்   கதவைத்திற...... 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~
காசில்லாமல் வந்த கனவும்
கரண்டில்லாமல் களைந்து போனதே
உஷ் ..........வெப்பம் தனிய
காசில்லாமல் வந்த கனவும்
கரண்டில்லாமல் களைந்து போனதே
உஷ் ..........வெப்பம் தனிய
வேண்டினேன்  இறைவனை !!!
============================== ==================
இவன் >>   >பிறைத்தமிழன் 

