மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டுப் புலம்பல்


       ஏகாதிபத்தியத்தின்  எகத்தாள கொள்கைகளை  ஏத்திப்பிடிக்கின்ற
            எத்தர்களை இனங்கண்டு
         இடித்துரைக்க முனைவோமே

                   ஏழைகளே இல்லாத
    டிஜிட்டல் இந்தியா என்பதெல்லாம்
      ஏமாற்று மோ{ச}டி வித்தையென
                 எடுத்து உரைப்போமே

              ஏழை ,நடுத்தர ,சாமான்ய
         மக்களுக்கு எதிராக விடப்பட்ட
  பொருளாதார போர்ப்பிரகடனமென
           பொங்கித்தான் எழுவோமே

               வங்கிகளின் வாசலிலே
           வடிக்கின்றோர் கண்ணீரை
       துடைக்கின்ற முகமாக சிறுசிறு
                 சேவைகள் புரிவோமே

                  மதத்தின் பெயராலே
            மற்றோரை வதைக்காமல்
                   மனித வக்கிரத்தை
        மண்தோண்டிப் புதைப்போமே

                பொதுஜன பொறுப்பை
                  புறந்தள்ளிப் பாராமல்
               வெகுஜன விரோதத்தை
                 வேரோடு சாய்ப்போமே

               பிறக்கின்ற புத்தாண்டில்
           பிறைத்தமிழன் வாழ்த்தோடு
                    பிரபஞ்சம் எங்கிலும்
              பிரியத்தைப் பகிர்வோமே ...
   ====================================
                  இவன் :பிறைத்தமிழன் .....

ஞாயிறு, 20 நவம்பர், 2016

"பணம் மட்டுமே எல்லை'



மரணம் எனும்
மறு சுழற்சிக்கென
மக்கிக்கொண்டிருக்கும்
மனிதக் குப்பைக்குள்-

உயிருள்ள போது மட்டும்
எத்தனை ஏற்றத்தாழ்வு !

வறுமையோடு
போராடுபவனுக்கு '
வயிறு மட்டுமே எல்லை  !
வளர்ந்துவர
போராடுபவனுக்கு '
பணம் மட்டுமே எல்லை !

வானம் தொட்ட பணக்காரனுக்கு  '
வளைத்துப்போடுவதெல்லாம்
எல்லை  !     இவர்களின்-
உதடுகள் சிரிப்பது பேருக்கு !
உள்ளங்கள் அழுவது யாருக்கு ?
====================================
         > இவன் ;பிறைத்தமிழன் ..

புதன், 16 நவம்பர், 2016

"பூனை நடை "

                      "பூனை நடை " 
        
     காலச்சக்கரத்தை                                    
     கணினி  மயமாக்கி ,                              
     கலாச்சாரத்தை                                        
     காலில் மிதித்தபடி,                                
     உலகத்தரத்தை  ஒடிப்பிடிக்க   ?      
      மகத்துவமிக்க                                          
     மனித அடையாளத்தை                        
     தொலைத்துவிட்டு                                  
     மாயைமிகுந்த  உலகைத்தேடி         
     அலைந்துகொண்டிருப்பவர்கள்     
                                     ...........இவர்கள்..!!       
                     இவன் ;பிறைத்தமிழன்.       

திங்கள், 7 நவம்பர், 2016

"பசித்தபின் புசி"

        



          ஊக்கம்           கொழுத்தவனை
                                                     ஓரம் கட்டி
         உன்னில்       இளைத்தவனிடம்
                                        கருணை காட்டு
         புசிக்கக்     கொடுத்து       நீ ........
                               பசித்தபின்  சாப்பிடு
        ஏழையை     குறிவைத்து     உன்
                          சேவையை   தொடங்கு
         ஏகத்துவக்    கொள்கை  தனை
                             ஏந்திப்பிடி  அப்போது
          வாழ்வின் வசந்தங்கள் யாவும்
          வசப்படும்     தருணங்களாகும்
==========================+==========
                        இவன்; பிறைத்தமிழன்

சனி, 15 அக்டோபர், 2016

"ஐயா அப்துல் கலாம்"


தந்தை படகோட்டி - அவர்
தமிழால் உனை தாலாட்டி
அறிதலே உன் ஆராய்ச்சி !
அணுவை மெருகூட்டி -அதற்க்கு
அக்கிணிச் சிறகுபூட்டி !
அகிலத்தை அதிர வைக்க
வின்னில்தேரோட்டிய
விந்தை மனிதரே- 
உச்ச பதவிகள் உனைவந்து சீராட்டி !
இருந்தும் துச்சமென நினைத்து
தொடர்தே  பனியாற்றி !
அரசியல் சாயத்தை 
அப்புறப் படுத்திய  எதிரி இல்லா
இந்திய தேசத்தின் இனிய மனிதரே
இருந்தது  கனவா ?  நீ
இறந்தது  கனவா ? வெற்றியை நோக்கி
விழி திறந்து கனவு  கானும்
வித்தையை விதைத்தவரே- இன்று
இளைஞர்களின் இதயத்தில் நீ - என்றும்
இந்தியாவின் உதயத்தில்  நீ !!!......
====================================
இவன் ; பிறைத்தமிழன்




வியாழன், 15 செப்டம்பர், 2016

"டாஸ்மாக்"



  கோரைப்பல்,
  கோடாரிக்காம்பு,
  கொடுவாள்,
  கொதிக்கும் கண்கள்
  கொக்கரிக்கும்  ஒப்னையில்
  சீசாவில்  சிரிக்கும்
  சீமைச்சாராயம்தான்
                 "டாஸ்மாக்"
  மது அடிமைகளை
  மண்ணுக்குள் தள்ளும்
  மாபெரும் அரக்கன்தான்
                 "டாஸ்மாக்"
  தமிழகத் தலைவர்களின்
  தனிப்பெரும் ஆசி பெற்ற
  தமிழனின் தலைவிதிதான்
                 "டாஸ்மாக்"
====================================
                 இவன்;  பிறைத்தமிழன்...

சனி, 10 செப்டம்பர், 2016

"காலச்சுவடு "


                   திப்புசுல்தான்
=========================
  இனபேதமற்ற இந்திய வரலாறு
 அதில்
 சுயநலமற்ற சுதந்திரப் போராளியின்
 இருட்டடிக்கப்படும் எண்ணில்  அடங்கா
 உண்மை வரலாறு   அவை
 கற்பனையிலும் சாத்தியமில்லா
 நிகழ்வுகள்   இன்று   காலத்தால்
 அழிந்துவரும்  சுவடுகள்
---------------------------இவன் : பிறைத்தமிழன் .

   
        ஆ றறிவுள்ள மனிதன்
பே றறிவாளன்  கட்டளைக்கு
பெருமையுடன் கீழ்படிந்து
பெரும் தியாகம் செய்து
பேருவகை கொண்ட நாள்....
        "ஹஜ்ஜுப் பெருநாள்"
இபுறாஹீம் நபியவர்கள்
எத்தி வைத்த தியாகத்தை
எந்நாளும் மறவாத
         சத்திய மார்கத்தின்
         சந்ததிகள்  யாவர்க்கும்
"பிறைத்தமிழனின்"ஹஜ்ஜுப்
பெருநாள்  நல் வாழ்த்துக்கள்
===============================
    இவன்;  >>   பிறைத்தமிழன்....






ஞாயிறு, 29 மே, 2016




காலச்சக்கரத்தை கணனி மயமாக்கி
கலாச்சாரத்தை காலில் மிதித்தபடி
அனாச்சாரத்தை தேடி 
அலைவதுதான் சுதந்திரமா ?
இல்லவே இல்லை  பெண்களிடம் 
அறம் மிளிரவேண்டும்   அதுவே 
ஒட்டுமொத்த சமூகத்தின்உண்மையான 
வாழ்கை முறையாகும்.
−−−−−−−−−−−−−−−−−−−
"தீன் குலப்பெண்"
 −−−−−−−−−−−−
கனவனின் கண்களிலே
நிறைந்து வாழுவாள் , பிறர்
கண்களுக்கு என்றைக்குமே
மறைந்து வாழுவாள் !
கடல்கிழித்து கதிரவன் 
உதிக்கும் முன்   தன்
உடல் குளித்து" ஒழுவெடுத்து
சுபுஹு தொழுவாள் !
மடல் தாழை கரங்களிலே
மறையை யேந்துவாள் , தன்
மனம் வாக்கும் நிறைந்திருக்க 
ஏக இறையை வேண்டுவாள் 
அவளே  "தீன் குலப்பெண்"
(முஸ்லிம் பெண்)
======================
இவன்: >> பிறைத்தமிழன்...

வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவர் திருநாள்

  "உழவர்  திருநாள்" 
    நாத்துப்பாவ    நல்ல   விதை இல்லே
    நமத்து போன  நெல்லு விக்க  நாதியில்லே
     மூனுபோகம்   விளைச்சலுக்கு  கனவு கண்டு 
    ஆமைவேக  அறுவடைக்கு   காத்திருந்தா
     அசுரவேக வெள்ளம் வந்து  அழிஞ்சிருச்சே
   உசுர    கொடுத்து   உழைச்ச தெல்லாம் 
ஒன்னில்லாமே   மடிஞ்சிருச்சே
   ஏர் பிடித்த  எங்களுக்கு  
என்ன    மிச்சம் ?   காச்சுப்போன  
கை யை  தானே சாட்சி வச்சோம்
 ஊரு வாழ உழவு செஞ்ச   எங்களுக்கு    
இப்ப ஏறு  தழுவ   ஏத்த  காலம்   வந்துருச்சா  ?
இல்லை  வீரத்துக்கு  வேலிகட்டி வச்சுருக்கா ?
ரத்தத்திலே    உள்ள  சூடு கொறஞ்சிருசா ?
தமிழன்  சேத்துவச்ச  
பெருமைகளும்  செதஞ்சிருச்சா?
விடிஞ்சு எந்திரிச்சு   
வேட்டி சேலை    கட்டிக்கிட்டு 
   செங்கரும்பு  மஞ்சளையும் ,
சேத்து கட்டி,  சீருவச்சு ,
    புதுப்பானை  பச்சஅரிசி 
போட்டு  நல்ல   பொங்க  வச்சு ,
    ஊர் உறவு   ஒன்னுசேந்து   
கூடி  குலவை   வச்சு  ,
    பேருக்கொரு  நாளை  மட்டும் 
பெருமையோட  கொண்டாடி
    காணல்    நீரைபோல      
கஷ்டங்களை    தூராக்கி
    கண்ணுக்குள்   நீர்பெருக்கி  
கடுஞ்சுமைகளை  இறக்கிவச்சு ,
   எலிக்கறி   தின்ன தெல்லாம்   
எப்படியோ  மறந்து  போச்சு , இனி      
   கலப்பையில்  தொங்குரத   
கட்டாயம் விட்டுருவோம் 
      உழவர் திருநாளை    
உண்மையாய்   கொண்டாடும்
         உலகத்  தமிழரையே    
உளமாற வாழ்திடுவோம்..!!
       >>> இவன்; பிறைத்தமிழன்..