உஸைர் பின் ரஷீத்
உள்ளம் ரணப்பட்டு உதிரம் கசிகின்றது
சிந்தனையின் செயல் திறன் சீர் குறைகின்றது
உதடு உஸைர் எனும் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் நெற்றிப் பொட்டினை நெறித்துக்கொண்டு கண்களில் நீர் சுரக்கிறது
நீர் வற்றி விழி வறண்டு போனாலும் பார்வைப் படலம் பழுதாகி எதிரில் இருண்டு போனாலும்
உஸைர்
என் அன்புப் பேரனே உன்னை எண்ணிய போது
என் இதயம் வலிக்கிறது நீ இல்லை என்பதை ஏற்க என் இதயம் மறுக்கிறது .நீ இல்லா இப் பிரபஞ்சம் முற்றிலும் வெற்றிடமாய் தெரிய
இனி எஞ்சிய காலம் யாவும் உன் நினைவை மட்டுமே சுவாசித்து என் நுரைப்பையின் முகவரி
நீயே என எண்ணி ,எண்ணி என் இதயம் துடிக்கிறது..
====================================================================
இவன் :பீர்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக