மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 30 அக்டோபர், 2012


>         " சில்லரைப்பசி "            
>   பிணம்  தின்னும்   கழுகுகளும்   தன்
>   இனம்    தின்னா  திருக்கக்   கூடும் !
>   பணம்   பண்ணும்   பாருலகோர்
>   பசி   என்றடங்  கிடுமோ  ?                          
>   இதயம்  இருன்டிருக்க,
>   இதழ்கள்  வறண்டிருக்க,
>   செயற்கைச்  சிரிப்பாலே
>   செருக் கங்கே    மறைந்திருக்க !
>   வஞ்சம் வளர்ப்பதிலே
>   வல்லமை  பெற்றோரின்
>   சில்லரைப்  பசி
>   சிறிதேனும்  குறையாதோ ?
>   கல்லறைப்  பயணமும்
>   காசொடுதான்  போவாரோ ?
>   பணத்தை  பையில் வைத்து ,
>   பலபேர்  கையில்  வைத்து !
>    உழைப்பே  ஒன்றுமில்லா ,
>   தொழிலொன்று தேர்தெடுத்து !
>   வருமைச் சுமை  கொண்டு ,
>   வருவோரை இனம் கண்டு !
> தேவைகளை தீர்த்துவைக்கும் ,
> தெய்வப்பிறவி தானென
>    வரவுமட்டும்  கணக்கிட்டு .
>    வட்டிஎன்ற பெயருமிட்டு !
>   சொத்துகளை  குவித்திடுவார் ,
>   செத்தபின்பும்  சீரழிய !
>   கட்டுகின்ற  கூத்துகளும் ,
>   கொட்டுகின்ற  மேளங்களும் !
>   பச்சை  ஓலையிலே ,
>   படுக்கையினை  செய்த பின்னே !
>   பட்டுச்    சரிகை என ,
>   பகட்டான  ஆடைகளும் !
>   விட்டுப்  பிரிந்திடுவார் ,
>   வேறு வழி  இல்லையென !
>   ஒட்டுத்   துணிகூட ,
>   ஒருவருக்கும்  சொந்தமில்லை !
>   உலகைவிட்டுச் செல்லும்முன் ,
>   உணர்ந்துகொள்  மானிடனே !
>   உயிர் குடிக்கும்  வட்டியினை,
>   உண்டு   நீ  வாழாதே  !
>   பிணம்  தின்னும் கழுகு என்ற ,
>   பெயரேதும்  வாங்காதே !!!
===============================================
   இது ஒரு
   வட்டியில்   மூழ்கி  வாழ்வை   தொலைத்தவனின்
   வயிற்றெரிச்சல்  ....................................................!
===============================================
>> இவன் :~  பிறைத்தமிழன் .