மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 நவம்பர், 2010

மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ"


புலரும்   பொழுதின்   பூபாளமும் ,
தெளிர்ந்த   நீரின்  தெள்லோட்டமும் ,
குளிர்ந்த  காற்றின்  குதியாட்டமும் ,


விரிகின்றது  காட்சியாய்  கண்ணெதிரே !
   இசைக்கின்றது , மெல்லிசையாய்  காதருகே !!

என்னவளோ  இதற்க்கு  எதிர்மறை..!

சிந்தையை   செந் தனலாக்கி,
சிரிப்பதுவை   செவ் விதழில்  காட்டி!


வண்ணம் தோய்த்த வெண்ணை மீது ,
கூர் தீட்டிய கொடுவாள் பாய்த்து !


அவள்  வாழ்த்தும்  மொழி  வசை  போல்  இருக்கும்!
என்னை  வீழ்த்தும் விழியோ  வேல் போலிருக்கும் !


பூசும்  மஞ்சள்  அந்தி  வெயிலாய் ,
சூடும்  குங்குமச்   சுடு  நெருப்பாய் ,
வாடும்   என்னை   வன்மை  தகிப் பாள் !

பள்ளியறை  காணாத  மெல்லிறகு   மேனியவள் ,
மகரந்தம்  சிதறாத " மல்லிகைப்பூ"  கன்னியவள் !

புதிதாய்  புலரும்   பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு   வருகிற   பொற்க்கதிர்  போலே !

அமைதி  காக்கும்  ஆழ்கடல்  மேலே ,
ஆர்ப்பரிக்கும்  அலைகளி னாலே ,
  ஆடியடங்கும்   நுரைகளைப் போலே
என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
                               நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !..                                ============================================
இவன் >>   >  பிறைத்தமிழன்

திங்கள், 15 நவம்பர், 2010

தியாகம்


மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டு அதில்..
         மனித இனம் தோற்றுவிக்கப்ப்படுமாயின் அப்போதும்..
                           நிலைத்து நிற்கும் தியாகம்
                               நிகழ்ந்த நாள் இன்று..
              இப்ராஹீம் நபியின் கடினமிக்க இச்செயலை ..
                          கருணை மிக்க இறைவனால்..
                      ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று..
        மனித இனம் உள்ள வரை மாறாது நிலைத்திருக்கும் ..
       அளப்பரிய தியாகத்தை நினைவு கூறும் மக்களுக்கு..
      என் இதயம் கனிந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்..

                                                                                                     இவன் பிறைத்தமிழன்

வியாழன், 11 நவம்பர், 2010

இரவு



           ஓய்வதனை உணர்த்தி ..
ஓய்வின்றி.. சுழன்று கொண்டிருக்கும்..
        பூமியின்   சுழற்சியே..இரவு

                                              இவன் பிறைத்தமிழன்

புதன், 10 நவம்பர், 2010

பவித்ரம்


தரித்திரத்திலும் ..சரித்திரம் படைப்பவனே..
பவித்திரத்தின் ..பாத்திரதாரி..

                                             இவன்  பிறைத்தமிழன்

செவ்வாய், 9 நவம்பர், 2010

இயற்கை



இயற்றியவனால்..இயக்கப்படும்..

இன்றியமையா..கவிதையே
                                                   "இயற்கை "

                                                    இவன் பிறைத்தமிழன்