மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 18 மே, 2011

" எளிமை நிறுத்தி "


முகம் தெரியா  முதிர் கன்னிகள்  !



செல்வந்தர் களின் 
வீட்டுத்திருமணம்
ஏழைக்  குமர்களுக்கு  
எதிராக  விடுக்கப்பட்ட 
போர்ப்  பிரகடனம் !
 
இந்த   யுத்தத்தில்   
இன்னும்   ஏராளமான  ,
முகம்    தெரியா ,
முதிர்   கன்னிகள்  !
 
மூவாறு   வருடங்கள் , 
முத்தாய்   வளர்த்த   மகளை ,
 
முந்தானால்   வந்தவன்    
கொத்தாய்   அள்ளி   செல்ல ,
 
பத்தாய்   சில   லட்சங்களும்,  
பகட்டாய்   பல   ஆபரணங்களும்...!.
 
என்ன   கொடுமை..
ஏன்  இந்த   மடமை ?

பணத்தையும் ,  
பகட்டையும்   நேசிப்பவன்,  
செல்வத்தையும்   செருக்கயுமே ,
செல்ல  மகளுக்கு  
சீதனமாய்    தருவான்  !

இளைஞனே   விற்க்கப்படுகிறாய்..  
இதற்க்கு   நீ   வெட்கப்பட வில்லையா  ?
 
இறுதியில்   இட்டு  செல்வது  ஒன்றுமில்லை..
நீ   விட்டு  செல்பவை .. யாவும்   உனதில்லை  !
 
ஆழங்களை   அழகாய்  படைத்தவன்,
பெண்ணினத்தின்   பெருமையினை ,
சொல்ல    வில்லையா ?
 
இறைவன்   படைத்த    உயிரனம்,
இல்லறம்   காணும்போது .. 
பிறவியின்  பயனை   அடைகிறது !
 
ஒரு   மனிதன்   முழுமை  பெறுவதற்கு , 
பெண்    தேவை !
 
அந்த  பெண்ணை   பெருமைப்படுத்த , 
பொருள்   தந்து  மணம்  கொள் !
 
அவள்   உன்  வலக்கரங்களுக்கு  சொந்தமாவாள் ! 
இல்லையேல்.. 
இயற்கையின்  இலக்கணங்களுக்கு  நீ  எதிராவாய்  !

கருணை   மிக்க   சமூகம் 
களங்க மற்ற  சமுதாயத்தை   உருவாக்கும் !

எனவே      மானிடனே.. !!  
எளிமையை    நிறுத்தி ,
வறுமை துரத்தி ...!!
இளமை  வாழ்வை ,
இனிதே   ஏற்ப்பாய் ....!!!
===============================================
                                   இவன் >>   > பிறைத்தமிழன்                                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக