மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 25 ஜனவரி, 2012

* இரும்ம்புத் தடம்பதித்து *


          அறுபத்தி மூன்றாவது கொடிமுழக்கம்            

பசுமைமிக்க பாரதத்தின் ,
உரிமைமிக்க சமுதாய ஒன்றிணைந்த 
குடியரசுதின கொள்கை முழக்கம் !

உறக்கம் திரையிட்டு ,
உணர்வைக் கூர்தீட்டி ,
* இரும்ம்புத் தடம்பதித்து *

எழுந்துவரும் இளஞர்களால் ,
எம்  இந்திய தேசமே 
எல்லைகடந்து ஒளிரட்டும் ...!!!
--------------------------------------------------------------------
  இவன் >>   >> பிறைத்தமிழன் 

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

*ஒடிந்த சிறகுகள் *



                             தூங்கா    இரவுகளில் ,
                             துடிக்கும்   பறவையின்
           
ஒடிந்த   சிறகுகளிள்  

               உதிரும்   இறகுகளே..........

               என்   நினைவுகள் ...!
                           முகிலில்   சிக்கிய  !
                           முழு  நிலவைப்போல் 
                           மூடிய   இரவில் , முகவரி   தேடி ,
                           முகம்  தொலைத்த  பின் !

                           இயக்கத்தை  வெறுக்கும்
                           இறுகிய   இதயம் ,
                           இளகிப்  பூரிக்காதோ  ?
                           இடியும் , மின்னலாய்
                           இரைச்சலோடு   இன்பம் 
                           இன்றே  துவங்காதோ   ?

                           களங்கிய  விழிகளில்
                           கசிகின்ற  நீரால் ,
                           காயங்கள்  ஆற்றி
                           கவலைகள்  கரையாதோ  ?
                           காலத்தின்   கை விரல்
                           கண்ணீர்   துடைக்காதோ ?

                           தன்னுடல்  வறுத்தி
                           வெண் குருதி  புகட்டி
                           கண்ணென  காத்து 
                           என்னுயிர்  வளர்த்த
                           மன்னகத்  தூடே
                           மானிட   சொர்க்கம் 

                           அமைதியின்  வடிவே
                           அன்னையின்  மடியே
                           என்னைத்  தாங்கிட , 
                           இனிமேல்    வாராதோ  ?
                           இடர் மிகு   துயர்கள்
 
                           என்னில்     முழுதாய்
                           என்றென்றும்     தீராதோ  ? 

    இவன்  >>>    >>>  பிறைத்தமிழன்.........!!!!

சனி, 14 ஜனவரி, 2012

வெற்றிகளும் , விருதுகளும்


 

            
                                           உழவன் வாழ்க  

   வான் அழ  மண் சிரிக்கும் ,
   மண்  செழிக்க  மனு  சிறக்கும்  !
   ஊன்  தர  உழவு  செய்யும் ,
   நான் போற்றும்  நல்    உழவன்  வாழ்க  !
   மழையில்   நனைந்து ,
   வெயிலில் உலர்ந்த போதும் ,
   கூன்  விழுந்து , குடல்  சிறுத்து , வறுமை
   குப்புறத்  தள்ளிய போதும் ,
   தேகம்   உருக்கி , த்யாகம்  நிகழ்த்தி ,
   முப் போகம்  பெருக்கிடும்  தமிழா
   இவ் வுலகம்  உய்யுது  உன்னத மிக்க
   உயரிய தொழிலாம்  உன்தன்  உழவால் !
   உழவனும் ,தமிழனும்  ஒன்று  ! இதை
   உலகம்  உறக்கச்  சொல்லனும்  என்று
   உழவுக்கான  தொழிலுக்கே  வந்தனை  செய்வோம் ,
   உழவற்ற  தேசத்தை  நிந்தனை  செய்வோம் !

             வெற்றிகளும் ,    விருதுகளும் 
            விழாக்களாய்   வியாபித்திருக்கும்  சமூகத்தில் 
             வலிகளையும் , வடுக்களையும்  சுமந்து கொண்டு 
             வாய்க்காலும் , வரப்புமாய்   வகைப்படுத்தி , 
             வயல் வெளியெங்கும்   வாழ்வாதாரப் படுத்தும் 
             வண்ணத்தமிழ்    உழவன்  
             விண்ணைத்தொடும்  சிறப்புடன்                     
              வாழ்க !வாழ்க!! வாழ்கவே !!!
                எனச் சூளுரைக்கும் பிறைத்தமிழனின் 
                உலகனைத்  தமிழர்களுக்கு உளமார்ந்த , 
                உழவர்  திருநாள்  வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------           

                          இவன்  >  >> பிறைத்தமிழன்