மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 29 மார்ச், 2011

" மரணம் மட்டுமே மாறாத ஓய்வு "


மனித     உடலுக்கு    ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

பார்வைப்படலம்   மறைந்திடலாம்
செவிப்  புலனும்     அடை படலாம்

உறக்கமும்    ஒரு   வேலைதான் 

மனித   உடலுக்கு   ஓய்வில்லை
மரணம் அவனை நெருங்கும்வரை

செயற்கரிய       சிறப்புகளை
செதுக்குகின்ற    சிந்தனையை

செறிகின்ற      மூளை யதும்
சுருங்கி விரியும்   சுவாசப்பை ,

சுத்தகரிப்பு    இரத்த   கேந்திரம் ,
மொத்த உறுப்புக்கும்  மூல காரணம் 

துளி   மணித்துளி     தும்மலில்   தவிர ,
தூங்கா  உழைப்பில்  தொடர்ந்து  இயங்கும்

உன்னத   உறுப்பாம்   இதயத்தின்   ஓசை ,
ஒலித்துக்  கொண்டிருக்கும்  காலம்  வரை ,

உறக்கமும் ஒரு வேலைதான்

மனித  உடலுக்கு       ஓய்வில்லை !
மரணம் அவனை  நெருங்கும் வரை

ஊ ரற்று ,  உற வற்று    ஊ ணற்று ,
உணர் வற்று     உயி ரற்றுப்   போய் !

உடல் தரையில்  ஒடிந்து விழும்வரை ,
உறக்கமும்    ஒரு    வேலைதான் !

இகத்தில் சிறந்த  இறைவனுக் குகந்த  
நேசத்திற்   குரிய     தோற்றத்தி லான ,

மனித     உடலுக்கு    ஓய்வில்லை ,
மரணம் அவனை நெருங்கும்வரை !!!
===================================
  இவன் >>    >>  பிறைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக