மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 நவம்பர், 2010

மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ"


புலரும்   பொழுதின்   பூபாளமும் ,
தெளிர்ந்த   நீரின்  தெள்லோட்டமும் ,
குளிர்ந்த  காற்றின்  குதியாட்டமும் ,


விரிகின்றது  காட்சியாய்  கண்ணெதிரே !
   இசைக்கின்றது , மெல்லிசையாய்  காதருகே !!

என்னவளோ  இதற்க்கு  எதிர்மறை..!

சிந்தையை   செந் தனலாக்கி,
சிரிப்பதுவை   செவ் விதழில்  காட்டி!


வண்ணம் தோய்த்த வெண்ணை மீது ,
கூர் தீட்டிய கொடுவாள் பாய்த்து !


அவள்  வாழ்த்தும்  மொழி  வசை  போல்  இருக்கும்!
என்னை  வீழ்த்தும் விழியோ  வேல் போலிருக்கும் !


பூசும்  மஞ்சள்  அந்தி  வெயிலாய் ,
சூடும்  குங்குமச்   சுடு  நெருப்பாய் ,
வாடும்   என்னை   வன்மை  தகிப் பாள் !

பள்ளியறை  காணாத  மெல்லிறகு   மேனியவள் ,
மகரந்தம்  சிதறாத " மல்லிகைப்பூ"  கன்னியவள் !

புதிதாய்  புலரும்   பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு   வருகிற   பொற்க்கதிர்  போலே !

அமைதி  காக்கும்  ஆழ்கடல்  மேலே ,
ஆர்ப்பரிக்கும்  அலைகளி னாலே ,
  ஆடியடங்கும்   நுரைகளைப் போலே
என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
                               நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !..                                ============================================
இவன் >>   >  பிறைத்தமிழன்

4 கருத்துகள்: