மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 31 டிசம்பர், 2012


 தினசரி   கிழித்ததினால்  
தினசரியும்    தீர்ந்தது -அதனால்

இன்னொரு   வருடத்தின்
இனிய  முகவரி யாய்
ஜனவரியும்   பிறந்தது

ரணங்கள்   மறைந்தாலும்
வடுக்கள்  வலிக்கிறது
இனியாவது

புரட்சி    செய்யாது
புதுமைகள்   நிகழ

வறட்சி    இல்லாத
வான் மழை   பொழியட்டும்

   வக்கிரங்கள்   இல்லாத
   வர்க்கமாய்   வாழ    
   மனிதர்கள்  பழகட்டும்
 
என -
 2013- ஐ  வரவேற்கும்

 பிறைத்தமிழனின்   பிரியமான குரல்
பெருமையுடன்   பதியட்டும்
 பேதமைகள்    ஒழியட்டும் ...!!!
 
=============================================== 
 இவன் >>> பிறைத்தமிழன் <<<

சனி, 29 டிசம்பர், 2012

தங்கமழை பொழியாதோ ?



    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !


    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து !

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !


    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !


    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !


     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீ மட்டும்   நிரந்தரமா ?
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?
================================
       இவன்       >>>   பிறைத்தமிழன்   <<<                                  

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

விசத்தை ருசி பார்த்து ,

     விசத்தை   ருசி  பார்த்து ,   
     விசமத்தை   வேரறுக்க  !   


   அளவில்லா   ஆனந்தம்  பெருக ,              
   அன்பினால் இரு கண்களும்   உருக !      

   என் சிந்தை யது  சிறக்க ,                               
   செந் தமிலே   நீ     வருக !                               

    உன்னை    ஊரு     செய் ,                                
    உன் மத்தர்    தம்  ஒழிக !                                

    புசத்தை    நே ருயர்த்தி ,                                
     ஒரு  புயலைத்தான்  கிளப்பி !                    

   விசத்தை   ருசி  பார்த்து ,                                
    விசமத்தை   வேரறுத்து !                               

    இனி  விடியல்  நமக்கென்று ,                       
    வெற்றியை     நிலை நாட்டு  !                      

   என்   தமிழே   உன் போலே ,                           
    அமுதும்        கிடையாது !                                

    மொழிப்போர்        அறியாது ,                          
     உனை   மோதி   அழிப்போர்                           

     கரம்  தரியாது     என் ,                                        
     அலுவல்   இனி   ஓயாது !                                 

    எம் மக்கள்    தோள்  மீது  ,                                
     எகத்தாளமாய்   தான் அமர்ந்து  !                  

 

     அவர்தம்   இன்பத்தில்                                        
    இருள்         தெளிக்க ,                                            

    இடுகின்ற  கட்டளையில் ,                                
 
  இறுமாப்பு     குறையாத !                                   

     எங்கள்   பகைவர்          யாரென்று ,               
    இனங்  கண்டே         வேரறுக்க !                       

    தமிழா   பொங்கிப்        புரையோடி ,              
    நமக்குள்ளே    நாறுகின்ற ,                               


    சாதிகள்    ஒழியட்டும் !                                       
    சமத்துவம்     பிறக்கட்டும் ! !                            

    சுட்டெரிக்கும்   சூரியனாய் ,                              
    சுய மரியாதை     ஒளிரட்டும் ...!                      

   ========================================   
           >>> இவன்   :   பிறைத்தமிழன்  <<<           
    =======================================    

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

                          தீரா  நோயும் , ஆறா  துயறும் !  
-------------------------------------------------------------------------------------
    >>  இது யாரையும்  புண்படுத்த என்னாத ,
       புண் பட்டவனின்  ( கற்பனை ). <<<
------------------------------
-------------------------------------------------------

  சீருடை  அணிந்த   சிறப்புக் கொள்ளையர் !
                                                        அவர்  வாழ்வில் ,


 காக்கியும் , வெள்ளையும்   கலந்த  கும்மாளம் !
                                                                        அதெற்கென ,


சிவப்புக்  கோட்டையில்   செதுக்கிய  சிம்மாசனம் !
                                                                 அங்கே நடப்பது ,


  ஆயுள் முழுதும்  அதிகாரப்  பிச்சை ! அதை ,
                                                                   செயலாக்க ,


  கடைத் தெருவெல்லாம்     கப்பம்   வசூல் !  
                                                                                இந்த ,
  

அலுவலுக் கென ,புதுக் காரிலும் ,வேனிலும்   
   
                                                     கடமை  ஊர்வலம் !

  வெள்ளைத் துணிகளின்  வெகுஜனக் கரைகள் , 
                      சொல்லைக் கேட்டு  சுறு சுறுப்பாகி !

   கொள்ளை   என்ற        கொள்கைக்காக , 
     இல்லை  வரம்பு    இவர்களுக் கென்றும் ! 

   தினமும்  தேரும் ,எக்கச் சக்க  எச்சைத் தீனி !    
                                                                                    அதை

   உண்டு   பெறுவார் ,  ஓர்  ஆயிரம்   சாபம் ! 
                                                                       அதனால் ,


    வயிறு முட்ட  வளர்ந்திடாதோ  வஞ்சப்  புற்று ? 
            இப்படி    சந்தி  சிரிக்க,   தன் சந்ததி  சிறக்க ,


     சேர்த்து  வைத்த     செல்வம்    தானே ,
                    தீரா  நோயும் , ஆறா  துயறும் !  


    இவர்   தா னன்றோ   சீருடையணிந்த ,
                            சிறப்புக் கொள்ளையர் .....!!!
=============================================================
        >>> இவன் : பிறைத்தமிழன்                                                    
==============================
===============================

செவ்வாய், 30 அக்டோபர், 2012


>         " சில்லரைப்பசி "            
>   பிணம்  தின்னும்   கழுகுகளும்   தன்
>   இனம்    தின்னா  திருக்கக்   கூடும் !
>   பணம்   பண்ணும்   பாருலகோர்
>   பசி   என்றடங்  கிடுமோ  ?                          
>   இதயம்  இருன்டிருக்க,
>   இதழ்கள்  வறண்டிருக்க,
>   செயற்கைச்  சிரிப்பாலே
>   செருக் கங்கே    மறைந்திருக்க !
>   வஞ்சம் வளர்ப்பதிலே
>   வல்லமை  பெற்றோரின்
>   சில்லரைப்  பசி
>   சிறிதேனும்  குறையாதோ ?
>   கல்லறைப்  பயணமும்
>   காசொடுதான்  போவாரோ ?
>   பணத்தை  பையில் வைத்து ,
>   பலபேர்  கையில்  வைத்து !
>    உழைப்பே  ஒன்றுமில்லா ,
>   தொழிலொன்று தேர்தெடுத்து !
>   வருமைச் சுமை  கொண்டு ,
>   வருவோரை இனம் கண்டு !
> தேவைகளை தீர்த்துவைக்கும் ,
> தெய்வப்பிறவி தானென
>    வரவுமட்டும்  கணக்கிட்டு .
>    வட்டிஎன்ற பெயருமிட்டு !
>   சொத்துகளை  குவித்திடுவார் ,
>   செத்தபின்பும்  சீரழிய !
>   கட்டுகின்ற  கூத்துகளும் ,
>   கொட்டுகின்ற  மேளங்களும் !
>   பச்சை  ஓலையிலே ,
>   படுக்கையினை  செய்த பின்னே !
>   பட்டுச்    சரிகை என ,
>   பகட்டான  ஆடைகளும் !
>   விட்டுப்  பிரிந்திடுவார் ,
>   வேறு வழி  இல்லையென !
>   ஒட்டுத்   துணிகூட ,
>   ஒருவருக்கும்  சொந்தமில்லை !
>   உலகைவிட்டுச் செல்லும்முன் ,
>   உணர்ந்துகொள்  மானிடனே !
>   உயிர் குடிக்கும்  வட்டியினை,
>   உண்டு   நீ  வாழாதே  !
>   பிணம்  தின்னும் கழுகு என்ற ,
>   பெயரேதும்  வாங்காதே !!!
===============================================
   இது ஒரு
   வட்டியில்   மூழ்கி  வாழ்வை   தொலைத்தவனின்
   வயிற்றெரிச்சல்  ....................................................!
===============================================
>> இவன் :~  பிறைத்தமிழன் .

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

சிதைந்தது


பார்த்தேன்
               பலமுறை !

சிலிர்த்தேன்  
             சிலமுறை !

சிரித்தாள் 
              ஒரு முறை !

   சிதைந்தது   
         என் தலைமுறை !


படித்தேன்
    அவள் அழகினை !


வடித்தேன்
   ஒரு சிலையினை !


மொழிந்தால்
        தன் உறவினை !


வண்ணம் சூழ்ந்தது
      என் வாழ்வினை !


தொடுத்தேன்
               கணைகளை !


தொகுத்தேன்
                கலைகளை !

வகுத்தாள்
    வறை யறைகளை !

வாழ்ந்தோம் வாழ்வு
      அது பெருங்கலை......!!!


>>>>>>இவன் 
                      பிறைத்தமிழன்  <<<<<<


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

புத்தாடை பூணி ,


  இதயம் கனிந்த ஈகைத்திருநாள் 
                   "வாழ்த்து ""
=================================
உள்ளங்கள்   
                       ஒன்  றிணைந் திருக்க !
 உயர்  ஈகை   
                      எங்கும்  பொழிந் திருக்க !
 உலகம்  
     ஒரு  கொடியின் கீழ்   நிலைத் திருக்க !
 வல்லோன்   வகுத்த  
          வான்  மறை   எங்கும்  செழித் திருக்க !
 மனித  னெனும்  
                              பிறவிக்  கடன் தீரா  திருக்க !
 மாநபி  உம்மத் தெனும்  
                                மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ  
                                         ஏந்தல்  நபி  வழிநடக்க !
புத்தாடை  பூணி ,  ஃ பித்ராவை  பேணி  !
பிரத்யோக   வணக்கதிற்கே  இன்று
திரளுதாம்   தீன்குலப்  பேரணி !
-------------------------------------------------------------------------
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர் , 
அல்லாஹு  அக்பர்  !
லாயிலாஹ  இல்லல்லாஹு ,
அல்லாஹுஅக்பர்  !
அல்லாஹு  அக்பர்  ,
வலில்லாஹில்  ஹம்து   !!!
----------------------------------------------------------------------------
இவன்;பிரியமுடன் பிறைத்தமிழன்.........
நேர்  கொண்ட வழியில் ,
சீர்  பெற்றுச் செழித்து  , சிறப்புற்று  விளங்க

சிகரோனிடம்  சிரம்தாழ்த்தி , கரம் உயர்த்தி ,
வரம் கேட்டவனாக ( து ஆ செய்தவனாக )
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்களை 

தீனுலகோருக்கு  தெரிவிப்பது
பிரியமுள்ள  :~  இவன்  >> பிறைத்தமிழன் <<----    

சனி, 21 ஜூலை, 2012

ஈருலக இரட்சகனை ,



===============================================================
 வாழும்  வழிதேடி ,
 வறுமையை  சுவைத்தபடி ! 
 வெற்று  காலோடு 
 விரைந்து ஓடுகின்றேன் 
 வேறெந்த  வழியுமின்றி ! 
 உழைக்கும்  கைகளை  
     உயர்த்திப்  பிடித்தபடி !   
     கண்ணியமிக்க  இரவது 
     காணக் கிடைக்கின்ற 
     புண்ணியமிகு ரமளானின் 
     பூரிப்பில் திளைத்தபடி!  
     ஈருலக   இரட்சகனை  , 
    என்னுடைய எஜமானை , 
    இறைஞ்சி  கேட்கின்றேன் , என் 
    இன்னலை  தீர்க்கும்படி!!!
=============================================================
இவன் >>> பிறைத்தமிழன் ;

புதன், 20 ஜூன், 2012

தொலைந்து போ துக்கமே !

                                                                                    
இன்பம்  எங்களின் எல்லை  கடந்து 
எளிதாய்ச்  செல்லும் போது
எரிக்கத்தெரிந்து  , எதிர்க்கத் துணிந்த
எங்களிடம்  "துன்பம் "

எத்தனை காலம்  இடிந்து  போகா திருப்பு க் 
கொள்ளல்  முடியும் ?
                                                                                             
தொலைந்து  போ  துக்கமே  !
மடிந்து போவோம் என
மனக்கோட்டை  கட்டாதே  !

உறுதியாய்  உன்னைத்  துரத்த
உண்ண மறுத்தும் , உறங்க  மறந்தும்
சடுதியாய்  அடைவோம்  விடியலை !
                                                                                               
உள்ளம்  அழுகின்ற  போது ,
உதடு சிரிக்கும்   போட்டியில்
உச்சப்பரிசு  பெற்றவர்கள்  நாங்கள்
!
எங்கள்   சட்டைப் பைகளில் ,
சில்லறை சேரா  சல்லடைக் கிழிசல்கள்
சகஜம்தான்  !        இருந்தும்  ,
                                                                                                         
எம் மக்களென்றும் ,
மக்கள் பெற்ற  மழலை என்றும் ,
உள்ளம் நிறைத்து  ஒய்யாரமாய்  அமர்ந்தபடி,

எங்கள் வீடு ,    வாசல்   நிறைத்து
வசந்தங்களாய்  வலம் வருது , அதில்
பல  வண்ணங்கள்  நிலை பெருது !
                                                                                                        
வறட்சியிலும்  வாழ்க்கை   இனிக்கிறது ,

வறுமையிலும்  பொறுமை  சிறக்கிறது !
இறுதியில்  நெறி நிறை  சீமானாக   இருந்து ,
இறைநெறி  ஈமானோடு  இறப்போம்  என்ற  

 நம்பிக்கை    பிறக்கிறது  ....! 
                                                                                                           
-------~: இவன் > பிறைத்தமிழன் :~------

சனி, 5 மே, 2012

பொறுமை >

  
தீங்கை  தீண்டாமல்  களைவது
============================================
  பண்பு >         அது ,  
பிறரிடத்துப் பேணும்  மனித  ஒழுக்கம் ...! 
பார்வை       அது ,    
பிரபஞ்சத்தை உருவகப்படுத்துவது ...!
 பிறப்பு >     அது ,     
இறப்பதற்கான  இன்றைய தயாரிப்பு ..!
பீதி >             அது ,     
அச்சத்தின் அடுத்தசகோதரன்...!
  புன்னகை >   அது 
 சத்தம் குறைந்த சந்தோசம்.....!
   பூக்கள் >       அது , 
தாதுக்களையும் , தாவரங்களையும் வேறுபடுத்துவது....!
    பெண் >          அது ,
ஆணில்    தோன்றிய  ஆணுக்கான  அற்ப்புதம் ...!
பேதமை >     அது ,  
 தாழ்வு தனை தனித்துவத்துடன் வேறுபடுத்துவது.... ! 
பைந்தமிழ்  >  அது ,
  மொத்தமாய்  செறிந்து , சிறந்த  முத்தமிழ் ...! 
பொறுமை >   அது , 
 தீங்கை தீண்டாமல்  களைவது ...!
 போர் >          அது  ,     
செயற்கைப் பேரழிவின்   செல்லப் பெயர் ...!
 பெளத்தம் >     அது ,
கடவுளுக்கான மனித முயற்சி ...! 
=============================================================
        >>   இவன்  >>   பிறைத்தமிழன் ..........!
-------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கானல் நீர் >

                                        கானல் நீர்                                            
                                                                                                        
கற்ப்பு >     அது  ,
 பவித்திரத்தை பறைசாற்றும் கலாச்சாரம் ..............!
கானல் நீர் >  அது ,
ஒருங்கிணைந்த உயர் வெப்பம் .....................................!
கிளர்ச்சி >     அது ,
அடங்கமறுக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு..........!
கீழ்ப்படிதல் >  அது  
அதிகாரங்களை ஆமோதிக்கும் செயல் .....................!
குடை  >         அது ,
கைக்குள்  அடங்கிய  காருண்யம் ..................................!
கூப்பாடு >     அது ,  
செய்வதறியாச் சொல்லும் சேதி ....................................!
கெடுதல்  >     அது ,     
பிறருக்கென பெற்ற குழந்தை ..........................................!
கேள்வி  >      அது ,  .
அறிதலைச் செய்யும் ஆராய்ச்சி .....................................!
கைமாறு  >     அது ,        
நன்றிக் கடன் ..............................................................................!
கொள்கை  >    அது ,  
மாற்றத்திற்கு  உட்படாத   விருப்பம் .............................!
கோட்டை >  அது ,
நினைவுகூரும் பெயரிடப்பட்ட பிரம்மாண்டம் .......!
கெளரவம்  >  அது ,
உயர்த்தப்பட்ட  பெருமைமிக்க தனித்தன்மை ........!
க் >>இது ,  
பொருள்பட்ட   புள்ளியல்   நிறுத்தம் ............................!
                                                                                                                                    
                                                                                                                                    
                                     இவன் >>     பிறைத்தமிழன்                                         

சனி, 3 மார்ச், 2012

நட்பென்றும் , கற்ப் பென்றும் ,


   தூசி ,  புகை   துளியுமின்றி , ஒரு 
   துயில்  கலைந்த  தூரத்து கிராமம்  !
                                                ...........அங்கே 
   பனித்துளி     போர்த்திய 
   பசும்புல்       நுனி   !
                                        .....................அதில்  
   பரவசம்    பொங்க  
   பாதம்  பதித்தேன்  !

  ஒவ்வ   மறுத்த 
   உள்ளுருப்  பனைத்தும் ,

   சில்லென்று   சிலிர்த்து  ,
   சேதி  யொன்றைச் சொன்னதே !
                                          ......................ஆம் 

நகரத்து    வீதிகளில்   ,    
நான் நடக்கும் போதெல்லாம்  !     

தகிக்கின்ற  சாலைகள் ,    
தார்ப்  பாலை  போலன்றோ !     

அல்லும்  ,   பகலும்  ,    
அனல்  காற்று  வீச !     

உள்ளும் ,  புறமும்   ,    
உருகிய   மேனி  !     

 சொல்லும் , செயலும்   ,    
சோர்ந்தே  போக !     

வாழும்    வாழ்வில்   ,    
வசந்தங்கள்  யாவும் !     

வந்து  , வந்து  போகின்ற  ,    
வண்ணக்கனவே  !    
...............என     

சில்லென்று   சிலிர்த்த மேனி   ,   
சேதி  யொன்றை  சொன்னதே  !    

   சொர்க்கமாய்    நகரத்தைச்  சமைத்து   ,    
சுலபமாய்   நரகத்தில்   வாழ்வதை   விட  !    

சுமைகளில்  இருக்கின்ற  ,    
சோகத்தை  தாங்கி  !    
கடமைகள்   நிறைவேற்றும் ,    
கனவுகள்   வேண்டி !    
     
   கானகமும்  ,காடுகளும்     
விதை  இட்டு   மிதிக்கின்ற ,    
தடமாகும்  !      
............. அதில்   ,      


நட்பென்றும்   ,  கற்ப்  பென்றும்  ,     

விளைகின்ற  நாற்றுக்கு      
  இடுகின்ற   உரமாகும்  !     
.............அதுவே      
   
தேவையும்   , தேடுதலும்  ,    
கிடைக்கப்     பெறுகின்ற      
உயர்   கிராமத்துக்      
களமாகும்  ..........!!!      
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இவன்   >>>   பிறைத்தமிழன்   
       
  

சனி, 18 பிப்ரவரி, 2012

சீற்றம் >

 
ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை 
                           இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .
            ========================================================                         
         சக்தி > அது        
         வலிமை   கூறும்   திறன்   ..............................................!
         சாந்தம் >  அது   
         கருணையின்  காந்தக்  குறியீடு ................................!
         சினம் > அது  
         ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை ...............!
         சீற்றம் >  அது  
         இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .!
         சுழற்ச்சி > அது  
         மாற்றங்கள் , மாறாமல்   நிகழ்வது.........................!
         சூழ்ச்சி > அது       
         பிறரை  தாக்கும்  பேராயுதம் .....................................!
         செருக்கு >  அது  
         செல்வத்தால்   சிறப்புற  வல்லது ...........................!
         சேவகம் >  அது  
         ஊதிய  வரம்பைக்  கடந்த  ஊழியம் ........................!
         சைகை > அது  
         உலக  மொழியின்   உயர் இலக்கணம் ..................!
         சொர்க்கம் > அது  
         சொல்லிலடங்கா  இன்பத்தைச்  சுகிப்பது...........!
         சோதனை > அது  
         நெறிப்படுத்த  நீட்டப்படும்  விரல் ...........................!
          செளவ்கர்யம் > அது  
          வசப்படுத்தப்   பட்ட   வசதி .........................................!
         (இ )ச்சை  > அது  
         ஈடற்ற   சுய   விருப்பம் ..................................................! 
---------------------------------------------------------------------------------------
            இவன் >>   >>>பிறைத்தமிழன்

சனி, 4 பிப்ரவரி, 2012

என்ன தவம் செய்தோமோ ,


{லாஇலாஹ   இல்லல்லாஹு    முஹம்மதுர்  ரசூலுல்லாஹி }
=============================================================
            உள்ளங்கள்   ஒன்றிணைந் திருக்க !
            உயர்  ஈகை  எங்கும்  பொழிந் திருக்க \ 
உலகம்  ஒரு  கொடியின் கீழ்        
உறுதிபெற   நிலைத் திருக்க !      
           வல்லோன்   வகுத்த  வான் - 
           மறை   எங்கும்  செழித் திருக்க !
ஆலங்களின்  அதிபதியாம்  வல்ல ,  
அல்லாஹ்வின்  தூது   வராய் !            
          அழகிய  முன்  மாதிரியாய் ,
          அற்புதத்தின்  பொற்பயனாய் !
 நேர்த்தி மிகு    தலைவருமாய்  ,   
நீதி மிகு     அரசருமாய்  !                  
           காடுகளில்  பாலைகளில் ,
           பணி  படர்ந்த  நாடுகளில் !
சோலைகளில்  தீவுகளில் ,             
சொல்லாற்றும்   நாயகராம் !          
           அறிவு   மலர்ச் சோலை ,
           அறவழி     சாலை ! நபி 
அஹமதை  அள்ளித்   தந்தது ,         
அரபு   மணர்ப்  பாலை !                        
            வல்லோன்   வகுத்த  வான் -
            மறை ,  எங்கும்  செழித் திருக்க !
மனித  னெனும்  பிறவிக்  கடன் ,  
தீராதென    மிகைத் திருக்க !            
            மாநபி  உம்மத் தெனும் உயர் ,
            மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ ,          
ஏந்தல்  நபி  வழி  நடக்க !                   
           உத்தமத்   திரு நபியின் ,
           உதய  தின   செய்தியாய் !   இது 

உலக  மக்களின்  உணர்வோடு ,
ஒன்றாய்  கலந்திருக்க --> பிரியமுடன் 
------------>> பிறைத்தமிழன் <<--------------

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

* முடிவற்ற சுழற்ச்சி *

      மகரந்தம் சிந்தா மலர்      
 ======================
    மமமமமமமமம         
மமமமமமமமமம
    மமமமமமம    
    மமமமமமமமமம   
    மமமமமமமமமம    
    மமமமமமமமமம    
   மமமமமமமமமமம  
======================================
மல்லிகை > அது 
மகரந்தம் சிந்தா மலர் .................................!
மார்கழி > அது
மணம் சிலிர்க்கும் குளிர் ..........................!
மின்னல் > அது
மேகம் கிழிக்கும் வாள் ...........................!
மீன் > அது
வான் அளக்கும் கோள் ............................!
முகம் > அது
முன்னவர்களின் அடையாளம் ................!
மூப்பு >;அது
முடிவுக்கான முடிவற்ற சுழற்ச்ற்சி.............!  
 மெட்டு >:அது
சங்கீத  ஒலிகளின்  சாரம்..............................!
 மேன்மை > அது
மெருகுடை பொருளின் மிகைத்தல் ..........!
மையல் > அது
சிதறலற்ற உணர்வுக் குவியல் ..................!
மொட்டு > அது
மலர்களின் மகரந்தக் கருவறை ................!
மோகம் > அது
அளவற்ற ஆசைச் சிதறல் .............................!
மெளனம் > அது
பிணக்குகளை பிற்ப்படுத்தும் யுக்தி .........!
ம்................> அது
இதழ் பிரியா இசைவு...................................!
----------------------------------------------------------------------
இவன் :பிறைத்தமிழன் .