மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 29 ஏப்ரல், 2020


"கங்கை"
இப்படி இருந்த கங்கை நதி 
தற்போதுஊரடங்கின் பயனாக 
40% விழுக்காடுமாசு 
குறைந்துள்ளதாம் காரணம் 
எறியூட்ட வசதியில்லா 
பிரேதங்கள் அகோரிகளுக்காக அரைகுறையாய்
எரிபட்ட சடலங்கள்,சாம்பல்கள்
பக்தர்களின் யாத்திரையில்
பயன்படுத்தப்பட்ட கழிவுகள் 
இல்லாதது போன்ற பல 
காரணங்களால் கங்கையின் 
மாசு குறைந்துள்ளதாம்

வியாழன், 23 ஏப்ரல், 2020

"கிருமி யுத்தம்"

கொரோனாவே கொஞ்சம் நில்
யிர்கள்   உன்னால் 
உருவப்பட்டு   உடல்கள் 
கொத்துக் கொத்தாய்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது

வாண்டு முதல் வல்லரசுவறை
அகில உலகமே அஞ்சி நடுங்கி
கண்னுக்கு தெரியா கிருமி உன்னை
கட்டுப்டுத்தவே  "முயல்கிறது


கொங்சம் விட்டுக் கொடுத்து
விலகித்தான் போ கொரோனாவே
இல்லையேல் பட்டினிச் சாவின்
பலி, பாவம் உன்னைச் சேரும்

எங்களை வீட்டுக்குள் முடக்கிய
நாட்டுத்தலைவர்களுக்கு பசிக்காது
ஏனென்றால் அவரகள் இந்த
நா(ஓ)ட்டுக்காவே வாழ்பவர்கள்

பசியுள்ள  பாமரன் விடியலுக்கு
விளக்கேற்றி விழித்திருக்கிறோம்,
"கை" தட்டியும்  காத்திருக்கிறோம்
கருணையாளன் கிருபை வேண்டி.
===============================
இவன்:பிறைத்தமிழன்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

"கிருமி யுத்தம்"


பிரபஞ்சத்தையே பெயர்த்து
பெருங்கேடுகளை விதைக்க
இயற்க்கை சிதைக்கும்-இந்த
மனித வர்கத்தின் மீது

உலகலாவிய கிருமியுத்தம் 

யுத்தத்தை சித்தப்படுத்திய
அண்ட சராசரங்களின் அதிபதி
அனைத்துலக ரட்சகனே

மனித நேயமுள்ள மா
மனிதர்களின் பொருட்டால்
கொரோனாவை ஒழித்து
அதன் கோரப்பசி தனித்து

உயிர் உருகாமல் தடுத்து

உலகோரின் கண்ணீர் துடைத்து
மனிதகுலம் காத்தருள் புரிவாய்
மாட்சிமை மிகுந்த இறைவா
=============================
இவன்:பிறைத்தமிழன்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

"சீதனம்"




பணத்திற்காக திருமணம்
செய்துகொண்டவனைப் போல்
ஒரு அயோக்கியனும் இல்லை ,

காதலுக்காக கல்யாணம்
செய்துகொண்டவனைப்போல்
ஒரு முட்டாளும் இல்லை ,

பணத்தையும் ,பகட்டையும்
நேசிப்பவன்-
செல்வத்தையும் ,செருக்கையுமே
தன் செல்ல மகளுக்கு
சீதனமாய் தருவான்....
==========================
இவன்:பிறைத்தமிழன் ..

சனி, 4 ஏப்ரல், 2020

"நீதி"


மனிதன் எப்பொழுதும்
தான் செய்த தவறுகளுக்கு
வக்கீலாகவும்,
பிறர் செய்த தவறுகளுக்கு
நீதிபதியாகவும்
இருக்கவே விரும்புகிறான்
எல்லாம் தெரிந்த மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெறியவில்லை
ஆம்-அவன் மனிதனாய்
வாழமட்டும் தெரியவில்லை..
============================
இவன்:பிறைத்தமிழன்.

"இழி நிலை"


இயற்கைச்சீற்றத்தின்
எத்தகைய கோபமும்
ஏழைகளின் மீதுதான்
விதியாக்கப்பட்டுள்ளது
நோயும்,பேயும்
நோகாமல் காசுபார்க்கும்
மருத்துவமும், மருத்துவனும்
இதில் ஏகபோக அங்கம்
இத்தனை இழிநிலைகளை
கடந்து  இயல்பாக
இந்ததேசத்தில் வாழவேண்டி
விழித்தே இருக்கிறேன்
விடியல்தான் வரவேயில்லை.
=========================
இவன்:பிறைத்தமிழன்.


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

"வறுமை"

வறுமையின் 
கொடுமைபற்றி
வாழ்ந்து உணர்ந்தவன்
வயிறுபுடைக்க 
உண்ணமாட்டான்
தான் உண்ணும் 
இன்னொரு பிடி 
உணவையும் 
பிறருக்கென ஈந்து
பேரின்பம் கொள்வான்....
====================
இவன்:பிறைத்தமிழன்.

புதன், 1 ஏப்ரல், 2020

"நம்பிக்கை"

"நம்பிக்கை"

நேசிப்பவர்கள் 
எல்லோரும்  நம்மோடு 
நிலையாக தங்கிவிட்டால்
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமலே போய்விடும்-எனவே
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யாரிடமும் மண்டியிடுவதில்லை
எவரிடத்தும் 
கையேந்துவதும் இல்லை
தன்னைப் படைத்த
புகழுக்கு உரிய வல்லமை மிக்க
அல்லாஹ்வைத் தவிர....
===========================
இவன்:பிறைத்தமிழன்.