மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 14 டிசம்பர், 2017

"புத்தாண்டு"


இயற்கைப் பேரிடர் அற்ற 
இரண்டாயிரத்து பதினெட்டு 
இனிதே துவங்கட்டும் 
இகத்தில் உள்ள எல்லா உயிர்களும் 
இன்புற்று வாழட்டும் !
எல்லை கடந்து ஒளிரும் 
எம் இந்திய தேசத்துள் 
மனிதம் சிதைக்கின்ற  
மதவெறி ஒழியட்டும் !
மக்கள் நலம் மறந்தோரின் 
மகுடங்கள் வீழட்டும் !
பணத்தாசை பிடித்த 
பச்சோந்தி அரசியலை 
பாருலகோர் கூடி பாழ்பட சபிக்கட்டும் !
புரட்சி செய்யாது புதுமைகள் நிகழ 
வறட்சி இல்லாத 
வான்மழை பொழியட்டும் !
இனியாவது வக்கிரம் இல்லாத 
வர்க்கமாய் வாழ மனிதர்கள் பழகட்டும்! 

புத்தாண்டே வருக, புதுப் பொலிவு தருக! 
 >>>:இவன்: பிரியமுடன் பிறைத்தமிழன்...

புதன், 29 நவம்பர், 2017

"கொசுவுக்கு பஞ்சமில்லை "

பெண்ணாக பிறந்தால்  மதிப்பில்லை
பிறக்கின்ற குழந்தைக்கு பாலில்லை
ஏழைக்குக்  கல்வி  எளிதில்லை
கற்கின்ற கல்வியில் தரமில்லை
கற்றவனுக்கு உரிய வேலையில்லை
திறமைஇருந்தும் பலன்இல்லை
கொசுவுக்கு பஞ்சமில்லை
கொள்ளை நோய் குறையவில்லை
மருத்துவத்தில் உண்மையில்லை
மக்களிடம் பணமில்லை
வாழ வழியில்லை
வழுவிலே சாகும் துணிவில்லை
தலைவிரித்தாடும் மணல் கொள்ளை
தமிழக நதிகளில் உயிரில்லை
பெய்கின்ற  மழைநீரை
பேனத் தெளிவில்லை
காவிரி நீர் வரத்தில்லை
கர்நாடகமும் திருந்தவில்லை
நீட்டுக்கு விலக்கில்லை
நீதிக்கும் மதிப்பில்லை
மதுவை ஒழிக்கும் மனமில்லை
மது விற்பனையில் புதிய  எல்லை
குற்றங்கள்  குறைந்த பாடில்லை
வெற்று அறிக்கைக்கோ குறைவில்லை
வேடிக்கை பார்ப்பவனுக்கு வெட்கமில்லை
சட்டத்தில் சத்தியமில்லை
அதை காப்பவரிடம் கண்ணியமில்லை
அச்சடித்த புதுநோட்டு உளரவில்லை
ஆட்சியாளர் தவிர நாடு இன்னும் வளரவில்லை
உலகம் சுற்றும் தலைவர்களால்
ஒரு  பலனும் கிடைக்கவில்லை 
ஊரை அடித்து உலையில் போடும்
உச்ச பணக்காரர்கள் மட்டுமே
அவர்களின் செல்லப் பிள்ளை
செத்துப்போன பின்னாலும்
குற்றவாளியை கொண்டாடுவது
குறையவில்லை அந்த மூதேவி
செய்த புண்ணியத்தால்
முதல்வர்களுக்குப்  பஞ்சமில்லை
=====================================
   இவன்: பிறைத்தமிழன்..

திங்கள், 20 நவம்பர், 2017

"விவசாயி"


கானி  நிலத்திலும் 
கற்களை விதைத்து-உயர்
கட்டிடம்  வளர்த்தோம் !

ஒருதுளி நீரையும்  உறிஞ்சி
விற்க  உத்தமர் தமக்கு       
ஒப்புதல் தந்தோம் !

உரம் என்ற பெயரில்
உயிர் கொல்லி தெளித்து
உச்ச மகசூல் கண்டோம் !

அதில் விளைந்து வந்த
விஷத்தின்  பலனை
விளங்க மறுத்தோம் !

நுகரும் காற்றில்
பகரும் தொற்றால்
நுரைப்பை சிதைந்தோம் !

இனி இறைப்பை நிறைக்க
எங்கு சென்றால்  நாம்
இறப்பை தவிர்ப்போம் ?

நெற்றி வியர்வையை
நிலத்தில் வடித்தவன்
நிரந்தரத் தொழிலாளி !

அவன் செத்துமடியக்
காரண கர்த்தா
வங்கிக்கடன் மேலாளி !

குளு குளு அறையில்
கோடிகள்  சுருட்டும்
கொடுங்கோல்  அரசாட்சி !

அது திருந்தாவிட்டால்
தேர்தல் காலத்தில்
திருப்பி அடிப்பான் இந்த
தமிழக விவசாயி ...!
=========================
  இவன்;பிறைததமிழன்



  

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

"மூச்சுக்காற்றின் முகவரி"


மலரும் ,மணமும் 
மகரந்தத் துகளும் !

படரும் கொடியும் ,
பனிப்புல் நுனியும் !

தேனும், தினையும் 
தெளிந்த நீரும் ! 

சோலையும், வனமும்
சுகந்தத் தென்றலும் !

சாரலும், மழையும் 
சங்கேத அருவியும் !

பாடும் பறவையும், 
பளிர்வெண் கொக்கும் !

வெட்டுக் கிளியும்
சிட்டுக் குருவியும்

தாது மணலும், ததும்பிடும் 
அணை, குளங்களும்!

மீதமின்றி  மேய்ந்துவிட்ட 
மனித மிருகமே ....இனி 

மூச்சுக்  காற்றின் 
முகவரி தேடி........? 
முணங்கி மடிவாய்  
இது திண்ணமே ........!!!! 
================================
>>>>இவன் :பிறைத்தமிழன் ....
  

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

"பிறைத்தமிழன்"

காலத்திற்கு ஏற்புடை ,
கருத்துப் பதிவுடை !

களிப்பு மேலிடை ,அதில் 
கவிதை  மிளிருடை !

சமுதாயச் சார்புடை
சமூகப்பொறுப்புடை !

தீதெனத் தெரிந்திடை ,
தீயெனச் சுட்டிடை !

எளியவர் கண்டிடை ,
இளகும் மனத்துடை !

படிப்புப் பண்புடை ,
துடிப்புத் துணையுடை !

மெத்தப் பணிவுடை,
மேண்மைச் சிறப்புடை !

மேதினி போற்றிடை,
மிளிரும் வாழ்வுடை !

பிரியம் மிகைப்புடை ,
பிறைத்தமிழன் கவிநடை !!!
==================================== 

ஞாயிறு, 25 ஜூன், 2017

"வண்ணமிகு ரமளானே"


 மரணம் என்னும் மறுசுழற்சிக்கென
 மக்கிக்கொண்டிருக்கும்
 மனிதக்குப்பைகளை

 உயிருள்ளபோதே  ஒழுங்குணர்த்தி
 உன்னதம் செய்ய ஆண்டுதோறும்  வந்து
 அரவணைக்கும்  அற்புத  ரமளானே

கண்ணியமிகு இரவாம்
லைலத்துல் கத்ரில்
புண்ணியமிகு  போர்வையாய் பூமிக்கே

வானவர்கள் சோபனம்
வந்திறங்கும்  நிகழ்வது
வாய்க்கவல்ல வண்ணமிகு ரமளானே

எங்கள் உள்ளங்கள் ஒன்றிணைந்திருக்க
உயர் ஈகை எங்கும் பொழிந்திருக்க
உலகம் ஒரு குடையின் கீழ் நிலைத்திருக்க

 இறை மறைதன்னை
   இகம் சிறக்க இறங்கப்பெற்ற
       இனிய காலமிது ரமளானே

பகலெல்லாம் பசித்திருந்து பண்புற்று
இரவெல்லாம் விழித்து  இறைவனைத்தான்
தொழுது   உன்னை    பொருந்திக்கொண்ட

எத்திக்கும் வாழுகின்ற
முத்தக்கீன்கள் யாவருக்கும்
பிறைத்தமிழனின் இதயம் கனிந்த
ஈகைத்திருநாள்   வாழ்த்துக்கள்
======================================
                     இவன்: பிறைத்தமிழன். 

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

"ஜல்லிக்கட்டு"


தடைசெய் , தடைசெய் ,
பீட்டா என்னும் பிசாசு கூட்டத்தை
தடைசெய்..

ஏகாதிபத்திய எகத்தாள கொள்கையை,
எட்டி உதைக்கும் எங்கள் கூட்டம்..!

விரட்டுவோம் , விரட்டுவோம்
ஆதிக்க சதியை அடித்து விரட்டுவோம்

வேணடும் , வேண்டும் ஜல்லிக்கட்டு,   
நிரந்தரமாய் வேண்டும் ஜல்லிக்கட்டு !

எறுதுகள் என்றும்  எங்கள் உறவு ,
ஏறு தழுவுதல் எங்கள் மரபு..!

ஜாதி ,மத,  பேதம் இல்லை ,
ஜல்லிக் கட்டில் தீமை இல்லை..!

கூடிக்கலந்து கொண்டாடுவதெல்லாம்,
கலாச்சார மரபு காத்திடத்தானே..!

தொன்மை வாய்ந்தது தமிழர் கூட்டம் ,
தோற்றுப்போக விடவே மாட்டாம்...!

களம்கண்டது காளையர் கூட்டம் ,
கரை புறலுது கடற்கறை முற்றும்..!

மத்திய , மாநில அரசுகள்  யாவும்,
நாட்டுமக்களின் சேவகர்களே யாகும்..!

வீறுகொண்டது தமிழ்  இளைஞர்கூட்டம்
இனி உரிமைதனை வென்று காட்டும்..!

தமிழ் இனத்தின் வீர வரலாற்றை ,
இனி உலகநாடுகள் உற்றுநோக்கும்..!

அலங்கா நல்லூர் ,அவனியாபுரம் ,
பாலமேடுகள்   இனி
சீறிப்பாயும்  காளைமாடுகள்.!

வாடிவாசலில் வரிந்து கட்டுவோம் ,
காளை தழுவி களிப்புற்றிடுவோம்..!
===================================
போராட்டக்களத்தில்  இன உணர்வுடன்
  >>>>>இவன்;    பிறைத்தமிழன் <<<<<<
======================================================
ஒன்றாய்  உணர்வு கொண்டாய் தமிழா  !
நன்றாய் நமதுரிமை வென்றாய் தமிழா  !
தடைகள் யாவயும்   தகர்த்தாய்  தமிழா   ! -இனி
பிறக்கும் தலைமுறை பெருமை கொள்ளும் தமிழா .!!!

                        

வெள்ளி, 13 ஜனவரி, 2017

"வறட்சிப் பொங்கல்"

          "காளைதழுவி முத்தமிட"
ஏழை விவசாயி
எத்தனை நாளைக்கு
எலிக்கறி திண்பான் ?

கூன்விழுந்து குடல் சிறுத்து வறுமை
குப்புறத் தள்ளிய போதும்
நான் உழுது   தான் விதைத்து
நானிலம் வாழ
அறுவடை செய்தான்

காலமெல்லாம் கிடைப்பது
பட்டுத்துணியா? இல்லை
பகட்டுடைய வாழ்வா ?
கழனி நீரும் கால்வயிற்று கூழும்,
ஓலைக் குடிலும்
ஒட்டுக்கோமணமும் தானே ,

இது   போதுமே !  என
பெருமூச்சு விட்ட
விவசாயி   இப்போது
கை சேதமே ! என
கண்ணீர் வடிக்கிறான்  ஏன் ?

டிஜிட்டல்  கணவான்களும்,
ஒற்றைவிரலில்
உலகப் பொருளாதாரம்  பேசுவோரும்
கண்களில்  என்ன
கருப்புத்துணியா கட்டியுள்ளனர் ?

இந்திய தேசத்தின்
இதயத்துடிப்புக்கள் எங்கள் [விவசாயி ]
மாநிலம்தோறும்
மாண்டுபோனால்  மண்  நிலமெங்கும்
மலடாய்ப் போகுமே

சோலையாய் விளைவித்த நம்
சொர்க்க பூமி   வறண்டு
பாலையாய் போனபின்னும் என்
காளையைத் தழுவி கட்டியனைத்து
முத்தமிடத்தான்ஆசையாய்......
   ~~~~~{ஜல்லிக்கட்டு}~~~~~~

பீட்டா என்னும் பித்துப் பிடித்த
பிசாசுக்கூட்டமே  நீங்கள்
உண்ணும் உணவை
ஊட்டி வளர்க்க உழவு செய்தவை யாதென தெரியாதா ?

காட்டு மிருகமும்
காளைக்கூட்டமும் ஒன்றா ?

கனிம வளங்களை
களவாடிய கூட்டமே
கணினி கலாச்சாரம் கடவுளாகிபோனால்
இயற்க்கைதனை
எட்டி உதைப்பீரோ ?

வானமும் வஞ்சிக்க,
வழியேது கஞ்சிக்கே !

சட்டத்தின் ஓட்டைக்குள்ளே
சட்டைத்துணிகளை
சலவையிட்டு வெளுப்பவர்கள்
பொய் வாக்குறுதி விதைத்து
நிஜ வாக்கு அறுவடைக்கு
பணநாயகம் செய்கின்ற
அரசியல் அயோக்கியர்கள்

அரிச்சுவடி தெரியாமல்
அரியணை  ஏரியபின்
அதிகாரச் சண்டையில்
ஆண்டவனை மறந்தவர்கள்,
விவசாய மக்களை வேதனையில் தள்ளி
உழவுத்தொழிலை ஒழித்துக்கட்ட
ஓரணியில் திரண்டவர்கள் யாரென

இனங்கண்டு இடித்துறைப்போம்
இரும்புத் தடம் பதித்து
எழுந்து வருக  என்
இன்பத் தமிழினத்தின்
இனமானச் சிங்கங்களே

உதடுகள் சிரிப்பது பேருக்கு,
நம் உள்ளங்கள் அழுவதோ
தமிழ்நாட்டு உழவர்களின் "சாவுக்கு"
இனிவரும் சந்ததிக்கு
எடுத்துச்சொல்லும் முகமாக
வலிய கொண்டாடுவோம் வலி நிறைந்த
வறட்சிப் பொங்கலை !!!!!!!!!!
==================================
                 இவன்; பிறைத்தமிழன்.