மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

" இரவின் மடியில் நானும் "

விடிந்து   விட்ட  போதும் ,
விழிக்க   இமை  மறுக்கும் !
கடந்து   சென்ற    வயதும் ,
கனவில்  வந்து  இனிக்கும் !
=================================
இரவின்   மடியில்  நானும் ,
இதமாய் , எனது  பிடியில்  நீயும் !
இன்பத்தின் ,எல்லைப்  படியில்   நாமும் !

விடியும்   வரையில்   தானும் ,
விபரீ தங்கள்    ஏதும் ,
விளையா திருத்தல்   வேண்டும் !

நிலவின்    ஒளியில்   நீயும் ,
நிலை    குலைந்து    நானும் !
நின்னால் ,அலைக்  கழிந்த  நேரம் !

விரல்கல்    தீண்டுத ளாலும் ,
விரக    தாபம்    ஏறும் !
வியர்வை ,  ஆறாய்   ஓடும் !

உச்சக்  கட்ட  வெப்பம் ,
உதடு  வெடிக்கும்  காலம் ,
உன்  இதழ்   பட்டுக்    குளிரும் !
உறை   பனியும்  அங்கு  தோற்க்கும் , 
உடல்  கூடிக்    கள மிறங்கும் !
உயிர்ப்  பதிவு   அங்கே    நிகழும் !!!  

விடிந்து விட்ட போதும் ,
விழிக்க இமை மறுக்கும் !

   காரனத்தைச்   சொன்னால் ,
" கற்பனை " யை   மிஞ்சும் ,
  கனவு     என்று    புரியும் ........!
========================================
           இவன்   >>     >  பிறைத்தமிழன்

திங்கள், 18 ஏப்ரல், 2011

ஆடியடங்கும் நுரைகளைப் போலே!

                               மகரந்தம் சிதறாத " மல்லிகைப்பூ

புலரும்   பொழுதின்   பூபாளமும் ,
தெளிர்ந்த   நீரின்  தெள்லோட்டமும் ,
குளிர்ந்த  காற்றின்  குதியாட்டமும் ,

விரிகின்றது  காட்சியாய்  கண்ணெதிரே !
   இசைக்கின்றது , மெல்லிசையாய்  காதருகே !!

என்னவளோ  இதற்க்கு  எதிர்மறை..!

சிந்தையை   செந் தனலாக்கி,
சிரிப்பதுவை   செவ் விதழில்  காட்டி!

பொய்மை  மிகைத்த  பூமியின்  மேலே ,
கூர்  தீட்டிய   கொடு வாள்   கொண்டு ,
நேர்   நின்று    நீதி   வழுவா !

அவள்  வாழ்த்தும்  மொழி  வசை  போல்  இருக்கும்!
என்னை  வீழ்த்தும் விழியோ  வேல் போலிருக்கும் !

பூசும்  மஞ்சள்  அந்தி  வெயிலாய் ,
சூடும்  குங்குமச்   சுடு  நெருப்பாய் ,
வாடும்   என்னை   வன்மை  தகிப் பாள் !

பள்ளியறை  காணாத  மேல்லிறகு  மேனியவள் ,
மகரந்தம்  சிதறாத " மல்லிகைப்பூ"  கன்னியவள் !

புதிதாய்  புலரும்   பொழுதிலிருந்தே ,
புறப்பட்டு   வருகிற   பொற்க்கதிர்  போலே !

விழியில்  விழுந்து  இதயம்  நுழைந்து ,
என்னுள்  கலந்து  இகத்தை  வெல்ல !

அமைதி  காக்கும்  ஆழ்கடல்  மேலே ,
 ஆர்ப்பரிக்கும்  அலைகளி னாலே ,  
 ஆடியடங்கும்   நுரைகளைப் போலே!

என்றாவது ஒருநாள் சாந்தமுருவாள்
                               நிச்சயம் அதிலே நான் சாந்தி பெறுவேன் !..                                ============================================
இவன் >>   >  பிறைத்தமிழன்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வசீகரக் " காதல் "


     =============வசீகர க்   " காதல்  "  ================
   வசீகரத்தை    அடிப்படையாகக்  கொண்டது  " காதல் "
   வசீகரத்தால்  மட்டுமே இன்ப  உணர்வு தூண்டப்பட்டு
   இதயத்தில்  ஆண், பெண்   என்ற பால் பாகுபாடுகளின்
   இயற்கையான   அதிர்வுகள்   ஏற்ப்படுகிறது
   வசீகரமற்ற   ஆணிடம் 
   ஒரு  அழகான  பெண்ணும் ,
   அழகற்ற  பெண்ணிடம் 
   ஒரு   வசீகரமான  ஆணும் ,
   எளிதில்  காதல்   வயப்படுவதில்லை
   காதல்  உணர்வுகளை  கையாள்வதில்கூட 
   வசீகரம்   பெரும்  பங்கு  வகிக்கிறது
   அழகு  வசீகரத்தின்     வாற்ப்பிடம் !
   வசீகரம்    காதலின்    பிறப்பிடம் !
   அழகில்   சிறந்த , மனதைக் கவரும்  பெணிடம்
   காதலுடன்   நெருங்க  தகுதி   இல்லை    என்று
   தாழ்வு    மனப்பான்மையுடன்    ஒருவன்
   எப்போது   தனக்குள்  தீர்மானிக்கிறானோ  அங்கே
   நட்பு   எனும்   நாகரிக   முத்திரை     குத்துகிறான் .
   இவ்விடத்தில்   பெண்கள்   சற்று   மாறுபடுகிறார்கள்
   வசீகரத்தின்   பொருளும்  இவர்களிடம்  வேறுபடுகிறது
   தன்னை  பாதிக்கக்கூடிய  சிறப்புகளுக்கு  உரிய  ஒரு
   ஆணின்  வசீகரம்  பெண்ணினத்தை மிகவும் ஈர்க்கிறது
   வசீகரமற்ற  சிறப்புகள்   சிலநேரம்  
   வாஞ்சையை    உருவாக்குகிறது 
   ஏழ்மை , மற்றும்  இயலாமை   நிச்சயம்
   பரிதாபத்தையே    உருவாக்குகிறது
   " வசீகரம் " காதலை   எதிர்  நோக்கி !
   " வாஞ்சை "  நடப்பை எதிர்  நோக்கி !
   " எழ்மை, இயலாமை, பரிவு "  இவை  மூன்றும்   
   கருணையை   எதிர்  நோக்கியே ,  பெண்ணின்
   மனதில்  முதல்  தடம்   பதிக்கிறது !
   வாஞ்சையில்    மலரும்   நட்பு ,
   ஏழ்மை மற்றும்  இயலாமையில்  பிறக்கும்  பரிவு ,
   பரிவுகளால்    செதுக்கப்படும்    கருணை ,
   ஸ்பரிசத்தால்   ஏற்படும்  தொடு   உணர்வு ,
   இவைகளால்  சந்தர்ப்பத்தின்   உதவியுடன் ,
   காதல்  உருவகப் படுகிறது
   அப்படி  உருவாகும்  காதல்
   வயது   வரம்பை   கடந்தும் கூட
   வாய்க்கும்படியாகும்
   மாறாக   வசீகரம்    என்பது
   காந்த   சக்தியைப் போன்றது
   அதன்   ஈர்ப்புவிசை   கண்களாகும்
   இதயத்தை   கொல்லையிடுவதா அல்லது
   கொள்முதல் செய்வதா   என்பதை
   தீர்மானிப்பது    கண்களாகும்  அந்த
   கண்களைக்   கவர்வது    வசீகரமாகும்
   எனவே    இப்பதிவுகளின்  
   தன்மையை   பொருத்தே
   " காதல் "    பிறப் பதனால் ,
   காதலே     வசீகரமானது !!!
==============================================
   { இந்த இடுகை என் நண்பனின் வாழ்வில்
   வளம்   வந்து  வடுப்பெற்றதன்   நினைவாக }
==============================================
            இவன் >>   > பிறைத்தமிழன்