மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவர் திருநாள்

  "உழவர்  திருநாள்" 
    நாத்துப்பாவ    நல்ல   விதை இல்லே
    நமத்து போன  நெல்லு விக்க  நாதியில்லே
     மூனுபோகம்   விளைச்சலுக்கு  கனவு கண்டு 
    ஆமைவேக  அறுவடைக்கு   காத்திருந்தா
     அசுரவேக வெள்ளம் வந்து  அழிஞ்சிருச்சே
   உசுர    கொடுத்து   உழைச்ச தெல்லாம் 
ஒன்னில்லாமே   மடிஞ்சிருச்சே
   ஏர் பிடித்த  எங்களுக்கு  
என்ன    மிச்சம் ?   காச்சுப்போன  
கை யை  தானே சாட்சி வச்சோம்
 ஊரு வாழ உழவு செஞ்ச   எங்களுக்கு    
இப்ப ஏறு  தழுவ   ஏத்த  காலம்   வந்துருச்சா  ?
இல்லை  வீரத்துக்கு  வேலிகட்டி வச்சுருக்கா ?
ரத்தத்திலே    உள்ள  சூடு கொறஞ்சிருசா ?
தமிழன்  சேத்துவச்ச  
பெருமைகளும்  செதஞ்சிருச்சா?
விடிஞ்சு எந்திரிச்சு   
வேட்டி சேலை    கட்டிக்கிட்டு 
   செங்கரும்பு  மஞ்சளையும் ,
சேத்து கட்டி,  சீருவச்சு ,
    புதுப்பானை  பச்சஅரிசி 
போட்டு  நல்ல   பொங்க  வச்சு ,
    ஊர் உறவு   ஒன்னுசேந்து   
கூடி  குலவை   வச்சு  ,
    பேருக்கொரு  நாளை  மட்டும் 
பெருமையோட  கொண்டாடி
    காணல்    நீரைபோல      
கஷ்டங்களை    தூராக்கி
    கண்ணுக்குள்   நீர்பெருக்கி  
கடுஞ்சுமைகளை  இறக்கிவச்சு ,
   எலிக்கறி   தின்ன தெல்லாம்   
எப்படியோ  மறந்து  போச்சு , இனி      
   கலப்பையில்  தொங்குரத   
கட்டாயம் விட்டுருவோம் 
      உழவர் திருநாளை    
உண்மையாய்   கொண்டாடும்
         உலகத்  தமிழரையே    
உளமாற வாழ்திடுவோம்..!!
       >>> இவன்; பிறைத்தமிழன்..