மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

2011


வருடத்துவக்கத்தை வாழ்த்துக்களாய் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி..
ஆங்கிலேயர்களுக்கு   மட்டும்மல்லாது,
அனைத்துலகமக்களையும் ஆட்க்கொள்ளும்
தகுதிக்குரிய சொல்!
                                  "HAPPY NEW YEAR"
                                                                                                
உழைப்பை பதியமிட்டு,
உணர்வை உரமிட்டு,
உயர்வால் விண்ணைத்தொட்ட,
வண்ணத் தமிழன் வாழும்,
திக்கெல்லாம் வளம்பெற வாழ்த்தும்
பிறைத்தமிழனின் ...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்--- 2011---
                                                              இவன் பிறைத்தமிழன்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கண்ணீர் வடு


சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  கொடுமை மிகு நினைவுகளே!
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும்,
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே!
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும்,
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே!
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே!
உயிரற்ற மனிதக்குவியலை ஒற்றைச்ச்சமாதியிட்ட,
ஓங்கார பேரலையே!
உனக்கு கட்டளையிட்டவனே..
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும்!
அடைக்கலம் புக வழியில்லை!
ஆலயங்கள் போத வில்லை!
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை!
ஆறா துயரின்னும் தீரவில்லை!
இனிய வருடம் தொடங்க வேண்டும்!
இன்பம் இதயத்தை வருட வேண்டும்!
இறைவனே ...உன் துணை வேண்டும்!
                                                                     இவன்  பிறைத்தமிழன்


                         

சனி, 25 டிசம்பர், 2010

இரத்தமும்..வியர்வையும்..


இரத்தமும் வியர்வையாய்  கசியும்..
            வெப்பபூமியில்  பிறந்த நாங்கள்..    
ஊரையும் பிரிந்து, உறவையும் பிரிந்து..
            ஓராயிரம் கனவை சுமந்து.. ஒய்யாரமாய்  வந்தோம்  பறந்து..
 வளமிக்க [வேலை] வாய்ப்பை தேடி..  
                      வதைக்கும் வறுமை சிதைக்க வேண்டி..
வளம் சிறக்கும் வாழ்வு செதுக்க வேண்டி..
                  பெரும் கதவுகள் இல்லா கருஞ் சிறைக்குள்ளே ..
வெளிச்சமற்ற விடியல்கள் உண்டு!  
                 விலங்குபூட்டிய விடுதலை உண்டு!
தினம் உணவு குறைந்து..உறக்கம் மறந்து..
                  உருகும் பனியில் உடல் முழுதும் நனைந்து..
உறுத்தும் குளிரில்  உறைந்தோம்!எழும்புகள் எல்லாம் மக்கியபோதும்,
                   நரம்புகள் எல்லாம் நடுங்கிய போதும்  ,
உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டோம்!
              உறவுகளை ஒரு நாளும்   மறக்க மாட்டோம்!
எங்களை பெற்றவர்களின் நலமும்
                          நாங்கள் பெற்றவர்களின் வளமுமே
 எங்களின் கனவு!   இக்கனவை நனவாக்க ..
                            உழைப்பையே நேசிக்கின்றோம்..
 கண் மூடியபோதும். களைப்பையே சுவாசிக்கின்றோம்!
                                  எப்போது???
          எங்கள் தாய்மண் மிதித்து..தண்ணீர் குடித்து..
          கண்ணை விரித்து, விண்ணை வெறித்து..
          விம்மி அழுது வேதனைகள் தீர்ப்போம்???

               {ஒரு தமிழனின் குளிர்தேச குமுறல்}                                                                            
                                                                         இவன்    பிறைத்தமிழன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

முதிர்கன்னிகள்!


செல்வந்தன் இல்லத்திருமணம்..
ஏளைகுமர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம்!
இந்த யுத்தத்தில் இன்னும்
ஏராளமான... முதிர்கன்னிகள்!
மூவாறு வருடங்கள்
முத்தாய் வளர்த்த மகளை,
முந்தானால்வந்தவன்
கொத்தாய் அள்ளி செல்ல!
பத்தாய் சில லட்சங்களும்,
பகட்டாய் பல  ஆபரணங்களும்!!...
என்ன கொடுமை..ஏன் இந்த மடமை?
பணத்தையும், பகட்டையும் நேசிப்பவன், செல்வத்தையும் செருக்கயுமே
செல்ல மகளுக்கு  சீதனமாய் தருவான்.
இளைஞனே விற்க்கப்படுகிறாய்..
இதற்க்கு நீ வெட்கப்படவில்லையா?
இறுதியில் உன்னோடு
இட்டு செல்வது ஒன்றுமில்லை..
நீ விட்டு செல்பவை ..யாவும் உனதில்லை..
ஆழங்களை அழகாய் படைத்தவன்,
பெண்ணினத்தின் பெருமையினை சொல்ல  வில்லையா ?
இறைவன் படைத்த உயிரினம்,
இல்லறம் காணும்போது .. 
பிறவியின் பயனை அடைகிறது!
ஒரு மனிதன் முழுமை பெறுவதற்கு பெண் தேவை!
அந்த பெண்ணை பெருமைப்படுத்த , பொருள் தந்து மணம் கொள்!
அவள் உன் வலக்கரங்களுக்கு சொந்தமாவாள்! இல்லையேல்..
இயற்கையின் இலக்கணங்களுக்கு நீ எதிராவாய்!
எனவே மானிடனே..
எளிமையை நிறுத்தி ..
வறுமையை துரத்தி..
இளமையின் வாழ்வை இனிதே ஏற்ப்பாயாக.
==================================
        இவன் : பிறைத்தமிழன்....

சனி, 18 டிசம்பர், 2010

காணும் போது கவி பிறக்கும்..கழிப்பறையும் பூ மணக்கும்

            
பிரிட்டனிலிருந்து பிறைத்தமிழன் பேசுகின்றேன்.. எழுத்து வடிவில்..

மேற்கத்திய கலாச்சாரத்தில் எனக்கு பிடித்தவை என்று சொல்வதை விட சரியென்று தோன்றக்கூடிய நிறைய விஷயங்கள் உண்டு. குழந்தைகள் வாலிபம் அடையும் வரை பொறுப்பதில்லை என்பது வேறு விஷயம், அதற்குள் பக்குவப்பட்டு விட்டோம் என்று அவர்கள்  தீர்மானமாகிவிடுகிறார்கள்.இவ்விடத்தில் பருவத்தை  தொட்டவர்கள் பிறரை சார்ந்து இருப்பதில்லை என்பது உண்மை, ஒருவன் ஒரு பெண்ணிடத்தில் நட்பு கொண்டிருந்தாலோ, ஒரு பெண் ஒரு ஆணிடத்தில் நட்பு கொண்டிருந்தாலும் இவர்கள் வயோதிகத்தை அடையும் போது தன் பிள்ளைகளையும் கூட சார்ந்திருப்பதில்லை. இதற்க்கு அடிப்படை காரணம் என்னவென்றால் இங்கே குழந்தைகள் பிறந்தவுடனேயே தனித்து கிடத்தப்படுகிறார்கள். அவர்கள் பேசவும், நடக்கவும் கற்றுக்கொண்ட மாத்திரத்தில் அவர்களுக்காண  தேவைகளை கூட அவர்களின் அனுமதி பெற்றே நிறைவேற்றப்படுகிறது , இதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய சிந்தனையை உருவாக்குவதாக சொல்வது சரியென்று பட்டாலும் எனக்கு பிடித்தவை என்று ஏற்றுகொள்ள மாட்டேன். மனிதன் எப்பொழுதுமே ஏதாவது ஒன்றின் மீது தேவை  உடையவானகவே இருக்கின்றான் .அவனுக்கு  தேவையில்லாததும், அவன் விரும்பாததும் துன்பம் மட்டுமே . இன்பத்தை நேசிக்காத மனிதன் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அவன் மனிதனே இல்லை. சுயமாக சிந்திப்பவன் எளிதாக இன்பத்தை அடைய முற்ப்படுகிறான்.இவ்விடத்தில் , ஊரையும் உறவையும் நேசிக்காது ..தன்னை பற்றியே சிந்திந்து கொண்டிருப்பவனால் சமூகத்திற்கு எப்பலனும் இல்லை.

                    முறைப்படுத்தப்பட்ட உழைப்பும், அதற்க்கான முழு ஊதியமும் பெரும் இவர்களிடம் சேமிப்புக்கான சிந்தனை துளியும் இல்லை. மூன்றறிவு, நான்கறிவுள்ள உயிரினங்கள் கூட சேமித்து வாழ்கின்றன. ஆறறிவுள்ள மக்கள், அன்றாடம் மதுவையும்..மாதுவையும் கையாளும் விதத்தில் அவர்களுக்கு நிகர் அவர்களே..மனிதன் மதியை முழுமையாய் பெற்றதற்கான அடையாளமே ஆடை அணிவது தான். அந்த ஆடையை அறவே குறைப்பதும், அங்கங்களை வெளிப்படுத்துவதும்.. நவீன நாகரிகமாம். இது பெண் சுதந்திர கொள்கை விளக்கம். இவர்களின் கட்டமைப்புகளோ பிரம்மாண்டம்  , காணும் போது கவி பிறக்கும்..கழிப்பறையும் பூ மணக்கும் ..சுத்தத்திலும் சிறப்பானவர்கள். இன்னும் இவர்கள்  வெகுவாக கூறும் நன்றியும், வேகமாக கோரும் மன்னிப்பும்..இவர்கள் கலாச்சாரத்தில் தப்பி பிழைத்த  ஒன்று .மனித உரிமை பண்புகளை உலகுக்கு கற்று தந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆங்கிலேய மக்கள் கலாசாரம் மற்றும் தனி மனித ஒழுக்கத்தை குழி தோண்டி புதைத்து விட்டு, நாங்களே  நாகரிக உலகத்தின் நாட்டாமை என்று கிரீடம் சூட்டிக்கொள்கிறார்கள்.

                     இவற்றை ஒப்பிட்டு பார்க்காவிட்டாலும் இக்கட்டத்தில்  என் தாய் நாட்டு மக்களை நினைவு கூர்ந்தே ஆக வேண்டும். இன்பமும் , துன்பமும் இயற்கையின் நியதி. ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி என்ற தத்துவம் அங்கே நிறைந்து காண படுகிறது . என் மக்கள், எல்லா நிலைகளிலும் பிறருக்காக வாழ்பவர்கள். அல்லது பிறரை சார்ந்து வாழ்பவர்கள். உதாரணத்திற்கு ஒரு பெண், குழந்தை பருவத்தில் தன் பெற்றோரை சார்ந்து இருக்கின்றாள். வாலிபம் எய்தி மன வாழ்க்கை காணும் போது தன் கணவனை சார்ந்திருக்கிறாள். வாழ்ந்து வயோதிகம் எட்டும்  போது தன் பிள்ளைகளை  சார்ந்திருக்கிறாள். இப்படி பல நிலைகளிலும் பிறரை சார்ந்தே வாழ்கிறார்கள் அல்லது பிறர் அவர்களை சார்ந்து வாழ்கிறார்கள்.இப்படிப்பட்ட என் தேச மக்கள் இன்பத்தில் கூட , எல்லை கடப்பதில்லை. துன்பத்தில் துவண்டு கொண்டிருப்பவனால், இன்பத்தை இறக்குமதி செய்ய முடியாது. சிறிதளவு மகிழ்ச்சி கூட அவன் சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் .அப்போது சமூகமே அவனுக்கு நேசப்பட்டு போகும் .அந்த சமூகத்தை காக்கும் கடமை தமக்கும் உண்டு என்பதை உளமார உணர்வான்.அங்கே கலாசாரம்  காப்பாற்ற படும். மனித நேயம் மேலோங்கி அவர்கள் மேன்மைக்குரிய மக்களாய் போற்றப்படுவார்கள்.
                      
      ( இவை அனைத்தும் நான் கண்ட உண்மையே  தவிர ..வெற்றுப்புனைவுகள் அல்ல.)                                                              
                                                இவன்     பிறைத்தமிழன்                                     

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

மனிதன்




இரத்தமும்   சதையுமே
 மனிதன்.   அவனிடம்,
சத்தமும் ,  யுத்தமும் ,
ஓய்வதோ   கடினம்!

அணுவை   பிளந்து ,
ஆய்வுகள்  செய்து,
ஆக்கம்    பல
கண்டான் மனிதன்!

அதனால்
தன் மெய்  மறந்து,
உண்மை  மறைத்து,
வன்மை  பொதித்து,
நன்மை  சிதைத்தான்
மனிதன்!

விளைவு
 தூக்கம்  தொலைத்து,
ஊக்கம்   இளைத்து,
துக்கம்   நிலைத்து,
தொலைந்தே போவான்
ஒரு  நாள்!
======================
         இவன்>>   > பிறைத்தமிழன்