மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

குமுறுகிற தேசமடா

                                                                                                                                                               
ஆயுதம் அணிகலனாம் ,
அதிகாரம் கேடயமாம் !
வன்முறைக்கு வாழ்வளித்து ,
வழிய உயிர்பறிக்கும் ,
உன்மத்தர் வாழுகின்ற
ஊனமுற்ற தேசமடா !

நெற்றி வியர்வைதனை
நிலத்திலே சொட்டியவன்,
உழைத்த பணத்தினிலே
ஒருகவளம்  உண்ணும்  முன்னே  ,
தட்டிப்  பறித்திடுவார் ,
தறுதலை  கூட்டமடா !

பாவப் பணம்   பறிக்க
பாலகர் தமை கடத்தி ,
பேரங்கள்  மிகப் பேசும்
பேடிகள்  நிறைந்துவிட்ட ,
கோரப் பிடிக்குள்ளே
குமுறுகிற தேசமடா !

காவி   உடை யணிந்து
கடவுளை  சாட்சி வைத்து ,
காமப் பசி   போக்க
கன்னியரை சீரழிக்கும் ,
புண்ணியர்கள்  வாழுகின்ற
போக்கற்ற   தேசமடா !

கூறுகெட்ட  மக்களிடம்
கேடுகெட்ட பொருளை விற்க ,
நூறு கட்ட  விளம்பரமும் ,
பேருக்கொரு  இலவசமும்  , அதில்
ஈறில்லை, பேனில்லை  என்றுசொல்லி
எக்கச்சக்க   கொல்லையடா !

முந்தாநாள்    வந்தவர்கள் 
முகவரி     அற்றவர்கள்  ,
முச்சந்தியில்  நின்றுகொண்டு
முழக்கங்கள்  இட்டவர்கள் , 
சாதிக்கொடி    பிடித்து ,
சமூகம்    சீரலிப்பாரடா !

ஆரம்பக்  கல்வியிலே
அரங்கேறும் அகுதக் கொள்ளை ,
உயர்  கல்விச் சாலையிலே
உச்சம்  பெற்று  போனதடா !
 
கொட்டிக்   கொடுத்துவிட்டு ,
பட்டம்வரை   படித்துவிட்டு ,
தட்டித்   தடுமாறி 
தள்ளாடி வரும்போது ,
குட்டிச்சுவரோரம்
கூடி நிற்கும் நண்பரடா  !

சொந்த   நாட்டினிலே ,
சுதந்திரமாய்  ரோட்டினிலே ,
வேலை தேடும் வேலையினை
ஒரு வேலையாய்   செய்யு கிற , 
வேலையில்லா வாலிபர்கள்
வேதனையில் வெட்டிவைத்த ,
                     இது
கல்வெட்டு காட்சியடா  இந்த
கல்வெட்டை திறந்து வைத்த ,
பிறைத்தமிழன் சாட்சியடா !!!
========================================================================
         இவன்   >::    பிறைத்தமிழன்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

""ஆசை துறந்தவனுக்கு அகிலமெதற்கு ""

       
          ஒரு   நாள் காலையில்,  என்றோ எழுதிய
                      கவிதை ஒன்றை    கையில்  எடுத்தேன்
          இதயம்  வருடும்  வரிகள்..  இமைக்க மறந்தேன்   
                      காலம்  மெல்ல  என்னை  கடந்து  சென்றது
 
         ஒரு வரி  என்னை  மின்சாரம்போல்  தாக்கியது 
                     மீண்டும் ,மீண்டும்  படிக்க  முயன்றேன்
          மனிதகுல   மீட்சிக்கான  விடை  அந்த
                    ஒற்றை  வரியில்  ஒளிந்து  கிடந்தது

         அந்தி    மாலையில்    அடிவானத்தில்
               அமிழ்ந்து  மறைந்த  பகல்,    காலம்  கரைவதை
      கண்முன்னே   உணர்த்திக்கொண்டிருந்தது
              இருந்தும்     எழ மனமில்லை ஏன் ?

                   பசுமரத்தாணிபோல்   பதிந்துவிட்ட  அந்த 
                  ஒற்றை  வரியை   மீண்டும்   உச்சரித்தேன்
                             """ஆசையோடு அன்புசெய் """
                 """எதுவும் உனது   * இறைவன் *  உள்பட"""

                  நெஞ்சுக்குழிக்குள்  நேற்று  எடுத்த
         மலைத்தேன்   மகரந்தம்   மாறாது
                     ஊற்றப்பட்டதற்க்கு    ஒப்பான   வரி 
         சுட்டரிக்கும்   சூரியன் போல்  சுடர்   விடும்
                    கண்களாய்    என்னருகே   மின்னியது

         கருவறை  தந்து ,   காத்து வளர்த்த  அன்னை
                     நான்   கண் திறக்கும்   முன்பிருந்தே
           கணக்கற்ற    அன்பைப்பொழிவதுபோல்
                     உணர்வுகள்     ஒருனிலைப்பட்டது
        இதயம்    இலவம் பஞ்சுபோல்   இலேசாகிப்போனது
                    அன்பு   என்ற காதல்  வயப்பட்டேன்

          நிரந்தர பகலும்,     நீங்காத வெளிச்சமும்,
                   அதிலிருந்து   பிரிந்து சேரும்    இரவும்,
         பிணியட்ற  ஓய்வும் , காலங்கள் உள்ளிட்ட
                    அனைத்தும்   என்வசப்பட்டது!!
         "::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::"
                "ஆசை துறந்தால் அகிலமுனக்கு "
                  இதை சொன்னவன் விட்ட வரி

        பிறைத்தமிழன் பிழை இன்றி தொட்ட வரி 
         ""ஆசை துறந்தவனுக்கு அகிலமெதற்கு ""
       ஆசையாய்  அன்பு செய் இறைவன் உள்பட
                             எல்லாம் உனது!!!!!!!!!
                                                                       இவன் >        :பிறைத்தமிழன்

புதன், 19 ஜனவரி, 2011

உறக்கம் திரையிட்டு ,உணர்வை கூர்தீட்டு

 
கேளிக்கையில்  கிறங்கி கிடக்கும்
          இளைஞனே எழுந்து   நில்
    போதையும்  ,புகைமயும்  மட்டுமா       
           பொல்லா    நோயெனும்  புற்று ?

   இசையும், சங்கீதமும் இன்பத்தை தரும்
         திரையில் காதல் தித்திக்கவே செய்யும்
   இது விழித்துக் கொண்டிருப்பர்களிடம்
                 விற்கப்படும் கனவு

   கனவு     காண்பதிலேயே ,
           காலத்தை   கழிக்காதே !
  திரையின்     பிம்பத்தில் ,
         தேசத்தை    தொலைக்காதே!

   பிறந்து குழந்தை அழுவதும்
          பிறகு  சிரிப்பதற்கும்  யார்   கற்று தந்தது
   பிறர்    பேசக்   கேட்பதுவும்
         பெருந்தலை   என   வாழ்த்துவதும்

    சுவர்   ஒட்டி    கொடி   பிடித்து ,
            சுழன்று      பணியாற்றி 
   சொர்க்கமா    சென்றிடுவாய்
           சொல்   இது    சாதனையா?

    மலையென    குவிந்திருக்கும் ,
         மடமைதனை      போக்கிடவே  !
     புயலென      புறப்பட்டு ,
            புதிய    சரித்திரம்   படைத்திட!

     பரந்த  கடலும்  விரிந்த   வானமும் கூட,
             தன்  எல்லையை  மீறுவதில்லை!
     எல்லை   கடந்த  வன்முறை ,
            என்னவென்று   தெரிந்து   கொள் !

    எதிர்த்து     வேரறுக்க ,
          இரும்புத்தடம்    பதித்து !
    நிமிர்ந்து    தலை   தூக்கு ,
          நிமிடங்கள்     வசப்படும் !

    அகிம்சை    காப்போமேன்று ,
          ஆற்றாமை     பேசாதே !
    உறக்கம்   திரையிட்டு,
          உணர்வை   கூர்தீட்டு !

    தீயிட்டு   கொளுத்தாது,
           தீவிரவாதம்    ஓயாது !
  இரும்புத்தடம்   பதித்து,
         இளைஞனே   எழுந்து    வா !!!
                     
                     இவன் :  >  பிறைத்தமிழன்

திங்கள், 17 ஜனவரி, 2011

எக்காளத்தை எதிர்நோக்கி


                                 இறைவனின்  படைப்பில்
                  அற்ப்பமும்  உண்டு  அற்ப்புதமும்  உண்டு 
             அற்ப்புதத்தின்  அதீத  அத்தாட்சி  மனிதப்பிறவி
                        அவனின்    மூலப்பொருள்   "மண் "

                                நீர் நிறைந்த  ஓசை தரும்
              அளர் மண்ணினால் படைக்கப்பட்டவன்  
            அவனில்  குளிர்ச்சியையும் ,ஏரிச்சளையும் ,
             உணருகின்ற  சருமத்தால்  போர்த்தப்பட்டு
                                                அதில் -
                              வெம்மையும் ,கருமையும்
           செம்மையாய்  பொதித்து தன்னை பகுத்து உணர
            வண்ணம்  பிரித்து  இயக்கப்படுகிறான் 'மனிதன்
                    மனிதன்  பலஹீனமானவன்!எனினும்
                                            பலம்மிக்க
                  எண்ணிலடங்கா  ஆட்ற்றலை  கொண்டு
                 ஆக்கம்  பல  கண்ட -அவனின  ஆட்ற்றல்
      அழிவை  நோக்கி பயணப்படுவது  அவனுக்கே  தெரியும்
                                நேரப்போகும்  அழிவை
                   மறைக்கலாமேயன்றி  மாற்ற  முடியாது
                           வியத்தகு   விஞ்ஞானங்களை
                   விதைத்துக்கொண்டிருக்கும்  மனிதனே
                                    நிச்சயம் : ஒருநாள்
                   "எக்காளம்"  எனும்   { சூர் }  ஊதப்படும்
      அப்போது  உன்  சிந்தையை  செயலிழக்கச்  செயப்படும்
                 குறிப்பிடப்பட்ட அந்த நாள் வரும்போது
                         கற்களால் ஆன "மலைகளும்"
         கொட்டிவிடப்பட்ட   பஞ்சுகளைப்போல்   பறக்கும் !
                               கேவளம்  ஓசைதரும்
          அளர்  மண்ணினால் படைக்கப்பட்ட  மனிதனே
          அந்நேரம்   உன்நிலை   என்னவா   இருக்கும் ???
                                 சிந்தித்துப்பார்  இது
           சத்திய  வேதத்தில்  உண்மையைக்கொண்டு
         ஏக   இறைவனால்  எச்சரிக்கை  செய்யப்பட்டது
 சூரியக்குடும்பத்தில்  அங்கம்  வகிக்கும்  "புவி"  உள்ளிட்ட
   அனைத்து  கோள்களையும்  படைத்து   பரிபாலிக்கின்ற
                             ஆலங்களின்  அதிபதியும்
              அகிலத்தின்  ரச்சகனுமாகிய  எல்லாம் வல்ல
  இறைவனுக்கு  இணை  வைப்பதிலிருந்து  விலக்கிக்கொள்
        அவனைமட்டுமே  துதிக்க  பழகிக்கொள்   மனிதனே 
    அப்போது  தான்  நீ;  "சீர்"  பெறுவாய்  உன்  உலக  வாழ்வு
                       போற்றுதலுக்குரிய " நேர் " பெரும் !!!........
       
                         இதை படித்தறிந்து பகிர்ந்துகொள்ளும்
                                                             இவன்      >  பிறைத்தமிழன்

புதன், 12 ஜனவரி, 2011

மரித்திட்ட பூமி


மரித்திட்ட     பூமியை
மறுபடியும்   செப்பனிட்டு
உயிர்ப்பிக்கும்  உழவனுக்கு
ஓராயிரம்     வந்தனங்கள்

இறைவன்    படைப்பில்
எத்தனையோ அற்ப்புதங்கள்
ஏரோட்டி  இல்லையென்றால்
ஏது இங்கே    உணவகங்கள்

உழவை     தொழிலாக்கி,
உழைப்பை   களமிறக்கி,
விதையை    பயிராக்கி ,
உணவை    உருவாக்கும்

உன்னத     தமிழனின்
உழவுக்கும், தொழிலுக்கும்,
வந்தனை    செய்வோம்!
உழவற்ற     தேசத்தை
நிந்தனை    செய்வோம்!!,

சிகரம்  தொட்ட  செந்தமிழ்
சீர்   பெற    வேண்டி ,
தமிழாய்ந்த   தமிழனே
தரணியாள வேண்டும்!

என   தத்துவச்    சூளுரைத்து, 
எத்திக்கும்   வாழும்  தமிழருக்கு 
புத்தம்புது  பொங்கலும்,  செங்கரும்பாய்
தித்திக்கும்  உழவர்  திருநாள்   வாழ்த்து !
                          கூறும் .........................................!
=====================================
                         இவன் >>   >  பிறைத்தமிழன்

திங்கள், 10 ஜனவரி, 2011

இன்பக்கூடல்


என்னவள் இனியவள் எனும்போது,
இனி உனக்கினை எவள் கண்ணே
நீரில் பூத்த   நீல மலரன்றோ  ;  நீ 
கோடையில் மணம் தரும்
கொடி   முல்லையே ;      நீ
அளவுடன் வார்த்தெடுத்த
அற்ப்புதப்     பெட்டகம்;   நீ
ஆபரணம் பூட்டாத
ஆரணங்கு     உன்  மேனி;
ஆயுதம்      தாக்கிய
அத்திப்பழ  அதரமுனது ;
அள்ளிப்  பருகிடின்
அத்தனையும்  மதுரமெனக்கு;
மூடிச்  சிரித்தாலும்
முத்துக்கள்   உதிரும் ..........
கோடி  இன்பங்கள்
கொட்டி  நிறைத்திட்ட; உன் 
வருகை  நிகழாதோ .......?   என்
வறுமை   அகலாதோ.......?
ஊடல்  நீங்கி    இன்பக்
கூடலும்  துவங்காதோ......?
தேடல் முடிந்து   தெளிர்ந்து
வாழ்ந்திடவே   ........!
நான்  கண்   மூடி ,  எனை
மண்மூடிப்  போனாலும்,
மாலாதிருப்பேன்.......!
உனை    ஒரு போதும் ,  
மீலாதிருப்பேன்........!
உன்னைக் கொண்டு  உறவைக்கொடு!!!
உணர்வைக் கொண்டு   உயிரைத்தொடு!!!
மாலாதிருப்பேன் .......!
உனை    ஒரு போதும்,
மீலாதிருப்பேன்..............!!!
    
                                         இவன் ;   பிறைத்தமிழன்

திங்கள், 3 ஜனவரி, 2011

ஏன் இந்த மாற்றம்?


                ஒரு நெஞ்சின் ஓரத்திலே ,
                                   மறு நெஞ்சின் மத்தியில,.
                இதயத்தின் சற்று இறக்கத்தில்
                                  இன்பச்சருமத்தால் கூசுகிறதே!
                                              என்னுள் ஏன்  இந்த மாற்றம்?
                கண்ணுள் மின்னலை பாய்ச்சியவளால்
                           கலவாடப்படுகிறதோ இதயம்!
          கடவுளை சாட்சி வைத்து காதல் என்று கண்டறிந்தேன்
          மாலை நேர தென்றலாய்,
          மல்லிகை தரும் மனமாய்,
          மார்கழி தரும் குளிராய் ,
          செவிக்கினிய மெல்லிசையாய்,
          கவிதரும் செந்தமிழாய் , 
                              இன்பத்தை இழைத்தவளால் !
         துன்பத்தில் நான் மூழ்கி,
         தூரிகையில் மை தடவி ,
        நெஞ்சம் நினைவின் பால் இடறி,
        உள்ளம் உதிர்த்திட்ட கவிதையோ,!
                             ஒரு கோடி நீர் அருவி.::::::::
                                                                         இவன் : பிறைத்தமிழன்