மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 29 நவம்பர், 2017

"கொசுவுக்கு பஞ்சமில்லை "

பெண்ணாக பிறந்தால்  மதிப்பில்லை
பிறக்கின்ற குழந்தைக்கு பாலில்லை
ஏழைக்குக்  கல்வி  எளிதில்லை
கற்கின்ற கல்வியில் தரமில்லை
கற்றவனுக்கு உரிய வேலையில்லை
திறமைஇருந்தும் பலன்இல்லை
கொசுவுக்கு பஞ்சமில்லை
கொள்ளை நோய் குறையவில்லை
மருத்துவத்தில் உண்மையில்லை
மக்களிடம் பணமில்லை
வாழ வழியில்லை
வழுவிலே சாகும் துணிவில்லை
தலைவிரித்தாடும் மணல் கொள்ளை
தமிழக நதிகளில் உயிரில்லை
பெய்கின்ற  மழைநீரை
பேனத் தெளிவில்லை
காவிரி நீர் வரத்தில்லை
கர்நாடகமும் திருந்தவில்லை
நீட்டுக்கு விலக்கில்லை
நீதிக்கும் மதிப்பில்லை
மதுவை ஒழிக்கும் மனமில்லை
மது விற்பனையில் புதிய  எல்லை
குற்றங்கள்  குறைந்த பாடில்லை
வெற்று அறிக்கைக்கோ குறைவில்லை
வேடிக்கை பார்ப்பவனுக்கு வெட்கமில்லை
சட்டத்தில் சத்தியமில்லை
அதை காப்பவரிடம் கண்ணியமில்லை
அச்சடித்த புதுநோட்டு உளரவில்லை
ஆட்சியாளர் தவிர நாடு இன்னும் வளரவில்லை
உலகம் சுற்றும் தலைவர்களால்
ஒரு  பலனும் கிடைக்கவில்லை 
ஊரை அடித்து உலையில் போடும்
உச்ச பணக்காரர்கள் மட்டுமே
அவர்களின் செல்லப் பிள்ளை
செத்துப்போன பின்னாலும்
குற்றவாளியை கொண்டாடுவது
குறையவில்லை அந்த மூதேவி
செய்த புண்ணியத்தால்
முதல்வர்களுக்குப்  பஞ்சமில்லை
=====================================
   இவன்: பிறைத்தமிழன்..

திங்கள், 20 நவம்பர், 2017

"விவசாயி"


கானி  நிலத்திலும் 
கற்களை விதைத்து-உயர்
கட்டிடம்  வளர்த்தோம் !

ஒருதுளி நீரையும்  உறிஞ்சி
விற்க  உத்தமர் தமக்கு       
ஒப்புதல் தந்தோம் !

உரம் என்ற பெயரில்
உயிர் கொல்லி தெளித்து
உச்ச மகசூல் கண்டோம் !

அதில் விளைந்து வந்த
விஷத்தின்  பலனை
விளங்க மறுத்தோம் !

நுகரும் காற்றில்
பகரும் தொற்றால்
நுரைப்பை சிதைந்தோம் !

இனி இறைப்பை நிறைக்க
எங்கு சென்றால்  நாம்
இறப்பை தவிர்ப்போம் ?

நெற்றி வியர்வையை
நிலத்தில் வடித்தவன்
நிரந்தரத் தொழிலாளி !

அவன் செத்துமடியக்
காரண கர்த்தா
வங்கிக்கடன் மேலாளி !

குளு குளு அறையில்
கோடிகள்  சுருட்டும்
கொடுங்கோல்  அரசாட்சி !

அது திருந்தாவிட்டால்
தேர்தல் காலத்தில்
திருப்பி அடிப்பான் இந்த
தமிழக விவசாயி ...!
=========================
  இவன்;பிறைததமிழன்