மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 15 மே, 2011

மாற்றம் ஒன்றே மாறாதது


                                                       ஆராம்விரல் 
  


நடந்து  முடிந்த  2011 ஆம்  ஆண்டின்  தமிழகத்திற்கான
பொதுத்  தேர்தல்
 
புதிய அரசுக்கு பிறைத்தமிழனின் வாழ்த்துக்கள் 

தமிழகத்தின்   வாக்காளர்கள்   
தமிழகத்தை யார்  ஆட்சி  செய்ய  வேண்டும்  
என்பதில்  கொண்டுள்ள அக்கறையை காட்டிலும்
யாருக்கு  வாக்களிக்க  கூடாது  என்பதில்  கொண்ட  உறுதியே
பெருவாரியான  மக்களை  வெளியே  வந்து  வாக்களிக்கச்  செய்தது

தி மு க தோற்றதால்  
அ தி மு க  வெற்றி  பெற்றிருக்கிறது  அது  சரித்திரம்  வாய்ந்த
வெற்றியை   பெறுவதற்கான  சாதனைகள்  துளியும்
நினைவில்  இல்லாத  போதும்  கூடஅவர்கள்  கைகளில்  
மிகப்பெரும்  வெற்றியை   தரப்பட்டிருக்கிறது
 
சாதனைகளை   சவாலாக  நிகழ்த்தி  சர்வ  சாமானிய
மக்களையும்  சென்றடைய  செய்த  அரசு   தி மு க வின் அரசு
சாதனையின்  பலன்களை  ரசித்து , ருசித்தவர்களும்  கூட


தி மு க வின்  சூரிய  சின்னத்தை   சுட்டிக் காட்ட
சூளுரைத்து  விரித்த  விரல்களால்  சுருக்கி  மடக்கி 
சுலபமாய்  குத்தினார்கள்  " முதுகில் " என்றே சொல்லலாம்
 இது  எதனால் . ஏன் ,எப்படி ,எதற்கு ,ஆம் 


மாற்றம்   மட்டுமே   மாறாதது       
இம்முறை மாற்றத்திற்கான   காரணத்தை   சரியாக
உணர்ந்திருப்பதாகவே   தோன்றுகிறது 
விரிக்கப்பட்ட  ஐந்து  விரல்களுக்கு  எதிராக
விமர்ச்சித்து  விரிவாக  விளம்பரப்  படுத்தப் பட்ட
விளங்கிக் கொள்ள  வேண்டிய  ஐந்து  விசயங்கள் 

1 ,   ஸ்பெக்ட்ரம்  2 G அலைக்கற்றை  விகாரம்
2 ,  தமிழக  மீனவர்கள்  மீது 
இலங்கை  நடத்தும்  இரக்கமற்ற  அத்துமீறல் 
3 , ஜீரணிக்க  முடியாத  தமிழகம்  தழுவிய  மின்  வெட்டு
4 ,ஒத்த  ரூபாய்  அரிசியை  மாதமொரு  முறை   நுகர்வோரை  விட
மத்த  ரூபாய்  அரிசிகளின்    கடும்  விலை  உயர்வை  

ஒவ்வொரு  நாளும்   நுகர்கின்ற   அடித்தட்டு  மக்கள்  முதல்
நடுத்தர  மற்றும்  மேல்  மட்ட  வரையிலான  மக்களே  அதிகம்  

என்பதை ஆட்சியாளர்   நினைவில்  கொள்ள   தவறியது
5 உழவர்  சந்தைக்குள்  அடங்காத  உலகமய  மாக்கப்பட்ட
ஊசி நூல் முதல் உயிர் காக்கும்  மருந்து வரை
உயிர்க்கொல்லி விஷம் போல் உயர்ந்துவிட்ட   விலைவாசி


{ உதாரணம் தங்கமும் ,பெட்ரோலும் கூட }
இதன்  விலை  உயர்வில்  மாநில  அரசுக்கு  என்ன  பாங்கு  என்பதை
உணர முடியாத   பொது  மக்களின்  பொது  அறிவுக் குறை


தமிழகத்தில்  ஐந்து வருடத்துக்கு முன்  
அ தி மு க ஆட்சியில்விலைவாசிகள்   இப்படி  ஏறினது  இல்லை  
இந்த கருணாநிதி ஆட்சியிலே அநியாய விலை 
என்று அங்கலாய்க்கும்
பாமர ,சாமானிய ,நடுத்தர வர்க்கத்தினர் கொண்ட உறுதியே 
ஆட்சி மாற்றத்தை செயல்படுத்தியது

ஓரளவு  கட்டுப்படுத்தலாமே  தவிர  விலைவாசி  உயர்வு  என்பது
தவிர்க்க  முடியாதது  காலத்தின்  கட்டாயம்  ஓரளவு  என்ற

இதன்  ஏற்றத்தால்வுகளை  மக்கள்  ஏற்றுக்கொள்ளும் விதமாய்
பிரச்சனைகளை  அனுகத்தவறிய  அரசின்  மெத்தனம் மறுப்பதற்கு இல்லை
 இனி எப்போதும் போல் நபிக்கையோடு ஐந்து ஆண்டுகள்
தி மு க  காத்திருப்பது சற்று சிரமமே ஏன் என்றால் புதிதாக
அரசியல் தொழிலை தொடங்கிய இளஞர்கள் இந்த ஐந்து ஆண்டு
இடைவெளியை   பயன்ப்டுத்த்க்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளது

அத்தகைய  வாய்ப்புகளை  அ தி மு க  சுலபமாக  உருவாக்கித்தரும்
என்பதில்  சிறிதும்  ஐயம்  இல்லை  ஏன்  என்றால்  கடந்த கால 
அ தி மு க  அரசின்   செயல்  பாடுகள்  நிரூபித்  திருக்கிறது

நடுரோட்டில்  பிச்சை  எடுப்பவன்  கூட  நான் ஆளும்  கட்சிக்காரன்
என்று  சொல்லி  உயர்  அரசு  அதிகாரிகளையும்  
எளிதாக  மிரட்ட  முடியும் ஆட்சியாளர்களால் அரசு அதிகாரிகளும் 
அசுரத்தனமாய்   பந்தாடப்  படுவார்கள் 

இத்தகைய  சூழலை   எதிர்  கொண்டு வாழ  செல்வாக்கு  உள்ள 
செல்வந்தர் களால்   மட்டுமே  சாத்திய  முண்டு 
குறிப்பாக :தாழ்த்தப்பட்ட , சிறுபான்மை   இனத்தைச்  சார்ந்த 
ஏழை ,நடுத்தர   வர்க்கத்தினர்  வாழ்வு 
போரட்ட  மிக்கதாய்   மாறும்  போது
ஆட்சியை  விரும்பாதவர்கள்  கூட சில  நிர்பந்தங்களால்
ஆளும்  கட்சி  போர்வையில்  உலவுவார்கள் , அடுத்த  தேர்தலை 
எதிர்    நோக்கியவர்களாக 
அப்போது   அணிகள்  மாறும்  ஆட்சியும்  மாறலாம்  அங்கே
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது  புரிதலாகும்

                                  இவன்  >>  >>  பிறைத்தமிழன்                                           

2 கருத்துகள்: