மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

வசீகரக் " காதல் "


     =============வசீகர க்   " காதல்  "  ================
   வசீகரத்தை    அடிப்படையாகக்  கொண்டது  " காதல் "
   வசீகரத்தால்  மட்டுமே இன்ப  உணர்வு தூண்டப்பட்டு
   இதயத்தில்  ஆண், பெண்   என்ற பால் பாகுபாடுகளின்
   இயற்கையான   அதிர்வுகள்   ஏற்ப்படுகிறது
   வசீகரமற்ற   ஆணிடம் 
   ஒரு  அழகான  பெண்ணும் ,
   அழகற்ற  பெண்ணிடம் 
   ஒரு   வசீகரமான  ஆணும் ,
   எளிதில்  காதல்   வயப்படுவதில்லை
   காதல்  உணர்வுகளை  கையாள்வதில்கூட 
   வசீகரம்   பெரும்  பங்கு  வகிக்கிறது
   அழகு  வசீகரத்தின்     வாற்ப்பிடம் !
   வசீகரம்    காதலின்    பிறப்பிடம் !
   அழகில்   சிறந்த , மனதைக் கவரும்  பெணிடம்
   காதலுடன்   நெருங்க  தகுதி   இல்லை    என்று
   தாழ்வு    மனப்பான்மையுடன்    ஒருவன்
   எப்போது   தனக்குள்  தீர்மானிக்கிறானோ  அங்கே
   நட்பு   எனும்   நாகரிக   முத்திரை     குத்துகிறான் .
   இவ்விடத்தில்   பெண்கள்   சற்று   மாறுபடுகிறார்கள்
   வசீகரத்தின்   பொருளும்  இவர்களிடம்  வேறுபடுகிறது
   தன்னை  பாதிக்கக்கூடிய  சிறப்புகளுக்கு  உரிய  ஒரு
   ஆணின்  வசீகரம்  பெண்ணினத்தை மிகவும் ஈர்க்கிறது
   வசீகரமற்ற  சிறப்புகள்   சிலநேரம்  
   வாஞ்சையை    உருவாக்குகிறது 
   ஏழ்மை , மற்றும்  இயலாமை   நிச்சயம்
   பரிதாபத்தையே    உருவாக்குகிறது
   " வசீகரம் " காதலை   எதிர்  நோக்கி !
   " வாஞ்சை "  நடப்பை எதிர்  நோக்கி !
   " எழ்மை, இயலாமை, பரிவு "  இவை  மூன்றும்   
   கருணையை   எதிர்  நோக்கியே ,  பெண்ணின்
   மனதில்  முதல்  தடம்   பதிக்கிறது !
   வாஞ்சையில்    மலரும்   நட்பு ,
   ஏழ்மை மற்றும்  இயலாமையில்  பிறக்கும்  பரிவு ,
   பரிவுகளால்    செதுக்கப்படும்    கருணை ,
   ஸ்பரிசத்தால்   ஏற்படும்  தொடு   உணர்வு ,
   இவைகளால்  சந்தர்ப்பத்தின்   உதவியுடன் ,
   காதல்  உருவகப் படுகிறது
   அப்படி  உருவாகும்  காதல்
   வயது   வரம்பை   கடந்தும் கூட
   வாய்க்கும்படியாகும்
   மாறாக   வசீகரம்    என்பது
   காந்த   சக்தியைப் போன்றது
   அதன்   ஈர்ப்புவிசை   கண்களாகும்
   இதயத்தை   கொல்லையிடுவதா அல்லது
   கொள்முதல் செய்வதா   என்பதை
   தீர்மானிப்பது    கண்களாகும்  அந்த
   கண்களைக்   கவர்வது    வசீகரமாகும்
   எனவே    இப்பதிவுகளின்  
   தன்மையை   பொருத்தே
   " காதல் "    பிறப் பதனால் ,
   காதலே     வசீகரமானது !!!
==============================================
   { இந்த இடுகை என் நண்பனின் வாழ்வில்
   வளம்   வந்து  வடுப்பெற்றதன்   நினைவாக }
==============================================
            இவன் >>   > பிறைத்தமிழன்

2 கருத்துகள்:

  1. சூப்பர்ப் :)

    வசீகரமாய் இருப்பதனால்தான் இழுத்துவந்தது என்னையும் :)

    பதிலளிநீக்கு
  2. வசந்தம் இருக்கும் இடம்தேடி ,
    வசீகரம் வந்தே ஆகவேண்டும்
    இது இயற்க்கை ! நண்பரே -
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு