மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

" நீர்த்துப் போகும் நிமிடம் வந்தால் "



ஏழை வீட்டில் எரியும் அடுப்பில்
எந்நாளும் வறுமை
நாளைப்   பொழுதை நகர்த்திச்  செல்லும்
நம்பிக்கையில் வெறுமை !

வீரம் பேசி பொழுதை  கழிக்கும்
கோழை  மனதில் கொண்டதால்   பெருமை,
வெற்றி  வந்து  சேர்த்தாலும்
விலகாது   வறுமை !

இக்கால இசைக்கு இலக்கியம் வடிக்கும்  கவி  
எடுத்துச்  சொல்லும்  இலக்கணச் சிறுமை !   
பொங்கும் பொருள் தங்கும்  அவர்
தமிழ்  சிந்தைக்கோ பெரும்  வறுமை !

கலி  கால  சிறப்பை   காட்சி  வடிக்கும்
திரையுலகச் சிற்ப்பிகள்  தேர்ந்தெடுக்கும் புதுமை ,   
அதில்   நாகரீக  மங்கையின்  நளினமற்ற 
நாட்டியம்   செல்லும்  வறுமை !

வெள்ளித்திரையின் வெளிச்சம் பட
ஒட்டுத்துணிக்குள் உடலை திணித்து
துட்டுக்கென  தொலைத்திட தயங்கா
வெட்கக் கேட்டுக்கு விலையாகும் பெண்மை !

ஆத்திரம்   பேசும் அதிகார  வர்க்கம் 
சேர்த்து  வைத்த   செல்வக்குவியல்
நீர்த்துப் போகும்  நிமிடம் வந்தால்
நினைத்துப்   பார்   நிலைக்குமா ?இந்த   பகுமை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முட்டாள்கள் கூட   பணம்   சன்பாதிக்கலாம் !  அதை ,
ஒரு  அறிவாளியால்தான்   காப்பாற்ற  முடியும்   இருந்தும்
எந்த  ஒரு  அறிவாளியும்   இறுதியில்  தன்னோடு
எடுத்துச்செல்ல    முடியவே   முடியாது    எனவே,
மனிதா   உன்  தேவைக்கு   மீறி  சேர்த்து  வைக்காதே !
ஏழையை  குறிவைத்து  உன்  சேவையை   துவங்கு
அப்போது   உன்  பிறவிக்கான   பொருள்   புரியும் !!!......
=============================================================
                              இவன் >>> பிறைத்தமிழன் <<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக