மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

" பட்டுப்போன பழைய மரம் "









முகம் ::::அதில்   கண்ணீரின்
முத்துக்கள்  கரைந்திருக்கக்  கூடும் !

முந்தானையிட்டு   மூடியபோதும் ,
முழுதும்   மறைக்கப்படாத  சோகம் !

 
கேள்வி    ததும்பிய   பார்வை ,  
கேட்பதற்  கில்லை   நாதி !
 
கேவித்தான்   அழ   தயக்கம் ,
கேலி   பேசுவோர்   உண்டெனவே !

வரவேற்க    எத்தனித்த !
வறண்ட    இதழ்கள் !

வழக்கம்   போல்  வழிய ,வழிய ,

வாசலில்   வந்து   நிற்கும் !

வாழ்வு   சீரழிக்கும் ,
வசதிக்கார    விருந்தாளி !

யாருக்காகவோ    பாயும்   விரித்து ,
யாருக்காகவோ   வாயும்   சிரிக்கணும் !

யாருக்கும்   பிடிக்காத   இதை ,
யார்தான்    தொடங்கினாரோ ?

 

சிரிக்க   தெரிந்து   வைத்த ,
சிவப்பு   வெளிச்சம்    அவள் !

செதுக்கி    செப்பனிட ,
செல்வந்தர்    மட்டும்   உண்டு !

அம்மி    மிதிக்காமல் ,
அட்சதையும்    தூவாமல் !

அறைக்கதவு    தான்   சாத்தி ,
அறைமனதாய்    தாளிட்டு !


ஈனங்கள்   அரங்கேறும் ,
இழிமிகு   சேர்க்கையிலே !

இனவிருத்தி   விரும்பிடுவோர்,
இகத்தினில்   யாரு முண்டோ ?

பறந்து   விரிந்து   நிற்கும் ,
பசுந்   தழைகள்   ஏதுமில்லா !
 

 பாதையோர    பக்கங்களில்  ,  
பட்டுப்போன    பழைய   மரம் !

பாவி   அவள்     பெற்றதுவோ  ,
பரத்தை   என்ற  பட்டம்  மட்டும் !

சாதிக்கு    இடமில்லா ,
சமபந்தி    போஜனமே !

சகதி    யாகிப்போன    அவள் ,
சாதனைதான்     மிச்ச  மன்றோ !

வேதனைகள்    விருப்பமான ,
விலைமாதர்    வாழ்வினிலே !

மூடி    மறைத்தாலும்  தீரா ,
முடிவற்ற   சோகம் ,,,,!!!
==================================
    இவன்  >>   >  பிறைத்தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக