மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

உழவன் சேற்றிலே கால் வைப்பது


நிலம் உழுது  நெல் விதைத்து 

அகம் மகிழ்ந்து  அகிலம்  வாழ ,
அறுவடைகள் செய்து தந்த   உழவன் !

கால்நடை களோடு  கடமை  பேசி ,
வாய்கால்  வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி ,  இலக்கம்  தவறா 

ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம்   பார்த்து   கதிரறுத்து ,

கட்டு  கட்டி ,  களம்  சேர்த்து 
காலமெல்லாம்   கவிதையாய்
கலனி  எங்கும்   வளம் வந்த 

உன்னதமிக்க   உழவன்  எங்கே ?

காணி  நிலத்தையும்   காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட

தனை வளர்த்த  தன்னலமற்ற  பூமியை
தாரை  வார்த்தான்  உழவன்  இங்கே...  ஏன் ?

ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை  ஏற்ப்புடையதோ ?
                                   ஆம்
ஏழை விவசாயி  எத்தனை  நாளைக்கு
எலிக்கறி  தின்பான்  ?

நான்  உழைத்து ,  தான் விதைத்து
நல்ல பலனை  நாடே உன்ன ,

கூன்   விழுந்து , குடல்  சிறுத்து ,
குப்புறத்தள்ளி   என்னை

கூடி நின்று  கொல்லென்று ,
சிரிக்குதே  கொடும் வறுமை  !

வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில்  கைவீசி  
 கைபேசி  சகிதமாய்   நடக்க    
எனக்கில்லையா  ஆசை ?
வீடு   கட்ட   விளைநிலம் ,
விலைபேசி  விற்க வேண்டிய தேவை

உழவன் சேற்றிலே  கால் வைப்பது
உலகம்  சோற்றிலே  கை வைக்கவாம்

இது யார் போட்ட ஒப்பந்தம் ?

சேற்றை   கழுவும்   விவசாயி !
சேர்ந்து   வைக்கும்   ஒப்பாரி  !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒருசில  பகுதியை சேர்ந்தவர்கள் இன்றளவும்  
எலிக்கறி உண்ணுவதை வழமையாக கொண்டவர்கள் தவிர
எந்த விவசாயும்வறுமை  தாளாமல் எலிக்கறி  உண்பதில்லை !

விவசாயிகளுக்கு  எத்தனையோ  சலுகைகளை 
போட்டிபோட்டுக்கொண்டு வருகின்ற அரசுகள் செய்கிறது

நான்கு ரூபாய்க்கு நெல்லை வாங்கிக்கொண்டு
ஒரு ரூபாய்க்கு அறிசிதருகிறது  இது சலுகையில்லையா ?

கடன்களையெல்லாம் ரத்து செய்கிறது 
இது சலுகையில்லையா ?

மின்சாரம் இலவசமாக தருகிறது 
இது சலுகையில்லையா ?

புல் மண்டி ,புதர் மண்டி கிடக்கும் குப்பை மேட்டையும்
ஏக்கர்களாய்  கணக்கு காட்டி இயற்ர்க்கைப் பேரழிவு க்கான
அரசு தரும் பணத்தை விவசாயி எனும் போர்வையில்
வாங்குகிறாயே  இது சலுகையில்லையா ?

விவசாயப் பொருள்களை குறைந்த விலையில் ,
சுலபத்தவணையில்  தருகிறது  இது சலுகையில்லையா  ?

இப்படி எல்லா சலுகைகளையும் பெற்றுக்கொண்டு
பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள விவசாயிகள்
வீடு கட்ட விளைநிலத்தை தாரைவார்த்துவிட்டு
தருகின்ற  வியாக்கியானமோ 

ஏழைவிவசாயி  எத்தனை நாளைக்கு எலிக்கறி  தின்பானாம் 
 இவர்கள் சலுகைக்காக சாதூர்யம் பேசும் சந்தர்ப்பவாதிகள் !
_______________________________________________________________________
உண்மை விவசாயி , 
உழவை  தொழிலாக்கி , 
தன்னலம்  கருதாது
உழைப்பை  களமிறக்கி , 
விதையை  பயிராக்கி , 
வியர்வை  உரமிட்டு ,
விளைச்சளை   பெருகின்றவனே  
உன்னதமிக்க  உண்மை விவசாயி !!!.....
இத்தகையோரின்  உழவுக்கும் , தொழிலுக்கும்  வந்தனை  செய்வோம் !!!.
==============================================================
             இவன் >>      >>> பிறைத்தமிழன்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்,

    பிறைத்தமிழன் அல்லது லண்டன் தீன் மின்னஞ்சலை காணவும்.

    நன்றியுடன் காதர்

    பதிலளிநீக்கு