மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

காணும் போது கவி பிறக்கும்..



காணும்போது  கவி பிறக்கும்  !             
கழிப்பறையும் பூ மணக்கும் !! 


 " பிரிட்டனிலிருந்து  பிறைத்தமிழன் பேசுகிறேன் "

      மேற்க்கத்திய  கலாச்சாரத்தில்   எனக்கு  பிடித்தது   என்று                   சொல்வதை விட             சரியென்று   தோன்றக்கூடிய   நிறைய        விஷயங்கள்  உண்டு.                                  

   இங்கு   குழந்தைகள்  வாலிபம்  அடையும்  வரை பொறுப்பதில்லை  என்பது  வேறு   விஷயம் ,  அதற்குள்   பக்குவப் பட்டுவிட்டோம்   என்று   அவர்கள்   தாங்களாகவே  தீர்மானமாகி  விடுகிறார்கள்.   

          இவ்விடத்தில்    பருவத்தை  தொட்டவர்கள்   பிறரை           சார்ந்து   இருப்பதில்லை   என்பது  உண்மை  ,        ஒருவன்     ஒரு பெண்ணிடத்தில்   நட்பு  கொண்டிருந்தாலும் ,  ஒரு  பெண்   ஒரு ஆணிடத்தில்   நட்பு  கொண்டிருந்தாலும் , இவர்கள்    வயோதிகத்தை  அடையும் போது   தன்  பிள்ளைகளையும்  கூட சார்ந்திருப்பதில்லை.  

            இதற்க்கு  அடிப்படை  காரணம் என்ன வென்றால்  இங்கே  குழந்தைகள்  பிறந்தவுடனேயே  தனித்து  கிடத்தப்படுகிறார்கள்.   அவர்கள்  பேசவும் ,  நடக்கவும்  கற்றுக்கொண்ட   மாத்திரத்தில்  அவர்களுக்காண   தேவைகளை கூட    அவர்களின்  அனுமதி  பெற்றே நிறைவேற்றப்படுகிறது    இதன்   மூலம்  தன்னம்பிக்கை  மற்றும் சுய சிந்தனையை  உருவாக்குவதாக  சொல்வது   சரியென்று  பட்டாலும் எனக்கு  பிடித்தவை  என்று  ஒருபோதும்   ஏற்றுகொள்ளமாட்டேன்.               

           மனிதன்   எப்பொழுதுமே  ஏதாவது  ஒன்றின்  மீது தேவை   உடையவானகவே   இருக்கின்றான் .அவனுக்கு  தேவையில்லாததும், அவன்  விரும்பாததும்    துன்பம் மட்டுமே   இன்பத்தை  நேசிக்காத  மனிதன்  இருக்கவே  முடியாது. அப்படி  இருந்தால்  அவன்  மனிதனே  இல்லை.  

         சுயமாக   சிந்திப்பவன்  எளிதாக     இன்பத்தை  அடைய முற்ப்படுகிறான் . இவ்விடத்தில் ,  ஊரையும் , உறவையும்  நேசிக்காது தன்னை  பற்றியே  சிந்திந்து  கொண்டிருப்பவனால்   சமூகத்திற்கு எப்பலனும்   இல்லை.  

                 முறைப் படுத்தப்பட்ட      உழைப்பும்,  அதற்க்கான    முழு ஊதியமும்   பெருகின்ற   இவர்களிடம்   சேமிப்புக்கான  சிந்தனை துளியும் இல்லை.  

               மூன்றறிவு,  நான்கறிவுள்ள   உயிரினங்கள்   கூட  சேமித்து  வாழ்கின்றன .   ஆறறிவுள்ள   மக்கள் ,  அன்றாடம்  மதுவையும் , மாதுவையும்   கையாளும்  விதத்தில்  அவர்களுக்கு  நிகர்  அவர்களே . 

           மனிதன்  மதியை  முழுமையாய்  பெற்றதற்கான  அடையாளமே ஆடை அணிவது தான்.  அந்த  ஆடையை  அறவே  குறைப்பதும் , அங்கங்களை   வெளிப்படுத்துவதும்,  நவீன  நாகரிகமாம் .   இதை பெண்களின்  சுதந்திரம்  என்று  கொள்கை விளக்கம். தருகின்ற  இவர்களின்  கட்டமைப்புகளோ  பிரம்மாண்டம்  , 

        " காணும்   போது  கவி  பிறக்கும்.. கழிப்பறையும்  பூ   மணக்கும்  "        

      சுத்தத்திலும்   சிறப்பானவர்கள்   இன்னும்   இவர்கள்   வெகுவாக  கூறும்    நன்றியும் ,   வேகமாக   கோரும்    மன்னிப்பும்    இவர்கள் கலாச்சாரத்தில்   தப்பிப்  பிழைத்த  ஒன்று  .

        மனித  உரிமை  பண்புகளை   உலகுக்கு  கற்றுத்  தந்தவர்கள்  என்று தம்பட்டம்  அடித்து  கொள்ளும் ஆங்கிலேய  மக்கள்  கலாசாரம்  மற்றும் , தனி  மனித  ஒழுக்கத்தை   குழி தோண்டி  புதைத்து  விட்டு , நாங்களே   நாகரிக  உலகத்தின் நாட்டாமை  என்று  கிரீடம்  சூட்டிக் கொள்கிறார்கள். 

             இவற்றை ஒப்பிட்டு பார்க்காவிட்டாலும் இக்கட்டத்தில்       என் தாய்  நாட்டு   மக்களை  நினைவு  கூர்ந்தே  ஆக வேண்டும் . இன்பமும் , துன்பமும்   இயற்கையின்  நியதி . ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி  என்ற  தத்துவம்   அங்கே  நிறைந்து  காண படுகிறது . என் மக்கள் , எல்லா  நிலைகளிலும்   பிறருக்காக  வாழ்பவர்கள். அல்லது  பிறரை  சார்ந்து  வாழ்பவர்கள் .

               உதாரணத்திற்கு  ஒரு  பெண் , குழந்தை  பருவத்தில்   தன் பெற்றோரை  சார்ந்து  இருக்கின்றாள் . வாலிபம்  எய்தி மன வாழ்க்கை காணும்  போது   தன் கணவனை    சார்ந்திருக்கிறாள் .                              வாழ்ந்து   வயோதிகம்  எட்டும்  போது    தன் பிள்ளைகளை  சார்ந்திருக்கிறாள்.   இப்படி பல நிலைகளிலும்   பிறரை  சார்ந்தே  வாழ்கிறார்கள்  அல்லது   பிறர்  அவர்களை  சார்ந்து  வாழ்கிறார்கள்.  

             இப்படிப்பட்ட   என் தேச  மக்கள்   இன்பத்தில் கூட , எல்லை கடப்பதில்லை.  துன்பத்தில்  துவண்டு  கொண்டிருப்பவனால் ,  இன்பத்தை   இறக்குமதி  செய்ய  முடியாது . சிறிதளவு  மகிழ்ச்சி  கூட அவன்  சந்தோசத்தை  இரட்டிப்பாக்கும் . அப்போது  சமூகமே  அவனுக்கு நேசப்பட்டு போகும் . அந்த  சமூகத்தை  காக்கும் கடமை  தமக்கும் உண்டு என்பதை  உளமார  உணர்வான் .  அங்கே  கலாசாரம்   காப்பாற்ற  படும். மனித நேயம்  மேலோங்கி  அவர்கள்  மேன்மைக்குரிய மக்களாய் போற்றப்படுவார்கள்.

  ===================================================================== 
                    ( இவை அனைத்தும் நான் கண்ட உண்மையே  தவிர            

          ..வெற்றுப்புனைவுகள் அல்ல.)                                                              
                                       இவன் >>   >>>    பிறைத்தமிழன்                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக