மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 12 ஜனவரி, 2011

மரித்திட்ட பூமி


மரித்திட்ட     பூமியை
மறுபடியும்   செப்பனிட்டு
உயிர்ப்பிக்கும்  உழவனுக்கு
ஓராயிரம்     வந்தனங்கள்

இறைவன்    படைப்பில்
எத்தனையோ அற்ப்புதங்கள்
ஏரோட்டி  இல்லையென்றால்
ஏது இங்கே    உணவகங்கள்

உழவை     தொழிலாக்கி,
உழைப்பை   களமிறக்கி,
விதையை    பயிராக்கி ,
உணவை    உருவாக்கும்

உன்னத     தமிழனின்
உழவுக்கும், தொழிலுக்கும்,
வந்தனை    செய்வோம்!
உழவற்ற     தேசத்தை
நிந்தனை    செய்வோம்!!,

சிகரம்  தொட்ட  செந்தமிழ்
சீர்   பெற    வேண்டி ,
தமிழாய்ந்த   தமிழனே
தரணியாள வேண்டும்!

என   தத்துவச்    சூளுரைத்து, 
எத்திக்கும்   வாழும்  தமிழருக்கு 
புத்தம்புது  பொங்கலும்,  செங்கரும்பாய்
தித்திக்கும்  உழவர்  திருநாள்   வாழ்த்து !
                          கூறும் .........................................!
=====================================
                         இவன் >>   >  பிறைத்தமிழன்

திங்கள், 10 ஜனவரி, 2011

இன்பக்கூடல்


என்னவள் இனியவள் எனும்போது,
இனி உனக்கினை எவள் கண்ணே
நீரில் பூத்த   நீல மலரன்றோ  ;  நீ 
கோடையில் மணம் தரும்
கொடி   முல்லையே ;      நீ
அளவுடன் வார்த்தெடுத்த
அற்ப்புதப்     பெட்டகம்;   நீ
ஆபரணம் பூட்டாத
ஆரணங்கு     உன்  மேனி;
ஆயுதம்      தாக்கிய
அத்திப்பழ  அதரமுனது ;
அள்ளிப்  பருகிடின்
அத்தனையும்  மதுரமெனக்கு;
மூடிச்  சிரித்தாலும்
முத்துக்கள்   உதிரும் ..........
கோடி  இன்பங்கள்
கொட்டி  நிறைத்திட்ட; உன் 
வருகை  நிகழாதோ .......?   என்
வறுமை   அகலாதோ.......?
ஊடல்  நீங்கி    இன்பக்
கூடலும்  துவங்காதோ......?
தேடல் முடிந்து   தெளிர்ந்து
வாழ்ந்திடவே   ........!
நான்  கண்   மூடி ,  எனை
மண்மூடிப்  போனாலும்,
மாலாதிருப்பேன்.......!
உனை    ஒரு போதும் ,  
மீலாதிருப்பேன்........!
உன்னைக் கொண்டு  உறவைக்கொடு!!!
உணர்வைக் கொண்டு   உயிரைத்தொடு!!!
மாலாதிருப்பேன் .......!
உனை    ஒரு போதும்,
மீலாதிருப்பேன்..............!!!
    
                                         இவன் ;   பிறைத்தமிழன்

திங்கள், 3 ஜனவரி, 2011

ஏன் இந்த மாற்றம்?


                ஒரு நெஞ்சின் ஓரத்திலே ,
                                   மறு நெஞ்சின் மத்தியில,.
                இதயத்தின் சற்று இறக்கத்தில்
                                  இன்பச்சருமத்தால் கூசுகிறதே!
                                              என்னுள் ஏன்  இந்த மாற்றம்?
                கண்ணுள் மின்னலை பாய்ச்சியவளால்
                           கலவாடப்படுகிறதோ இதயம்!
          கடவுளை சாட்சி வைத்து காதல் என்று கண்டறிந்தேன்
          மாலை நேர தென்றலாய்,
          மல்லிகை தரும் மனமாய்,
          மார்கழி தரும் குளிராய் ,
          செவிக்கினிய மெல்லிசையாய்,
          கவிதரும் செந்தமிழாய் , 
                              இன்பத்தை இழைத்தவளால் !
         துன்பத்தில் நான் மூழ்கி,
         தூரிகையில் மை தடவி ,
        நெஞ்சம் நினைவின் பால் இடறி,
        உள்ளம் உதிர்த்திட்ட கவிதையோ,!
                             ஒரு கோடி நீர் அருவி.::::::::
                                                                         இவன் : பிறைத்தமிழன்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

2011


வருடத்துவக்கத்தை வாழ்த்துக்களாய் பரிமாறிக்கொள்ளும் மகிழ்ச்சி..
ஆங்கிலேயர்களுக்கு   மட்டும்மல்லாது,
அனைத்துலகமக்களையும் ஆட்க்கொள்ளும்
தகுதிக்குரிய சொல்!
                                  "HAPPY NEW YEAR"
                                                                                                
உழைப்பை பதியமிட்டு,
உணர்வை உரமிட்டு,
உயர்வால் விண்ணைத்தொட்ட,
வண்ணத் தமிழன் வாழும்,
திக்கெல்லாம் வளம்பெற வாழ்த்தும்
பிறைத்தமிழனின் ...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்--- 2011---
                                                              இவன் பிறைத்தமிழன்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கண்ணீர் வடு


சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  கொடுமை மிகு நினைவுகளே!
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும்,
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே!
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும்,
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே!
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே!
உயிரற்ற மனிதக்குவியலை ஒற்றைச்ச்சமாதியிட்ட,
ஓங்கார பேரலையே!
உனக்கு கட்டளையிட்டவனே..
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும்!
அடைக்கலம் புக வழியில்லை!
ஆலயங்கள் போத வில்லை!
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை!
ஆறா துயரின்னும் தீரவில்லை!
இனிய வருடம் தொடங்க வேண்டும்!
இன்பம் இதயத்தை வருட வேண்டும்!
இறைவனே ...உன் துணை வேண்டும்!
                                                                     இவன்  பிறைத்தமிழன்


                         

சனி, 25 டிசம்பர், 2010

இரத்தமும்..வியர்வையும்..


இரத்தமும் வியர்வையாய்  கசியும்..
            வெப்பபூமியில்  பிறந்த நாங்கள்..    
ஊரையும் பிரிந்து, உறவையும் பிரிந்து..
            ஓராயிரம் கனவை சுமந்து.. ஒய்யாரமாய்  வந்தோம்  பறந்து..
 வளமிக்க [வேலை] வாய்ப்பை தேடி..  
                      வதைக்கும் வறுமை சிதைக்க வேண்டி..
வளம் சிறக்கும் வாழ்வு செதுக்க வேண்டி..
                  பெரும் கதவுகள் இல்லா கருஞ் சிறைக்குள்ளே ..
வெளிச்சமற்ற விடியல்கள் உண்டு!  
                 விலங்குபூட்டிய விடுதலை உண்டு!
தினம் உணவு குறைந்து..உறக்கம் மறந்து..
                  உருகும் பனியில் உடல் முழுதும் நனைந்து..
உறுத்தும் குளிரில்  உறைந்தோம்!எழும்புகள் எல்லாம் மக்கியபோதும்,
                   நரம்புகள் எல்லாம் நடுங்கிய போதும்  ,
உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டோம்!
              உறவுகளை ஒரு நாளும்   மறக்க மாட்டோம்!
எங்களை பெற்றவர்களின் நலமும்
                          நாங்கள் பெற்றவர்களின் வளமுமே
 எங்களின் கனவு!   இக்கனவை நனவாக்க ..
                            உழைப்பையே நேசிக்கின்றோம்..
 கண் மூடியபோதும். களைப்பையே சுவாசிக்கின்றோம்!
                                  எப்போது???
          எங்கள் தாய்மண் மிதித்து..தண்ணீர் குடித்து..
          கண்ணை விரித்து, விண்ணை வெறித்து..
          விம்மி அழுது வேதனைகள் தீர்ப்போம்???

               {ஒரு தமிழனின் குளிர்தேச குமுறல்}                                                                            
                                                                         இவன்    பிறைத்தமிழன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

முதிர்கன்னிகள்!


செல்வந்தன் இல்லத்திருமணம்..
ஏளைகுமர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட போர்ப்பிரகடனம்!
இந்த யுத்தத்தில் இன்னும்
ஏராளமான... முதிர்கன்னிகள்!
மூவாறு வருடங்கள்
முத்தாய் வளர்த்த மகளை,
முந்தானால்வந்தவன்
கொத்தாய் அள்ளி செல்ல!
பத்தாய் சில லட்சங்களும்,
பகட்டாய் பல  ஆபரணங்களும்!!...
என்ன கொடுமை..ஏன் இந்த மடமை?
பணத்தையும், பகட்டையும் நேசிப்பவன், செல்வத்தையும் செருக்கயுமே
செல்ல மகளுக்கு  சீதனமாய் தருவான்.
இளைஞனே விற்க்கப்படுகிறாய்..
இதற்க்கு நீ வெட்கப்படவில்லையா?
இறுதியில் உன்னோடு
இட்டு செல்வது ஒன்றுமில்லை..
நீ விட்டு செல்பவை ..யாவும் உனதில்லை..
ஆழங்களை அழகாய் படைத்தவன்,
பெண்ணினத்தின் பெருமையினை சொல்ல  வில்லையா ?
இறைவன் படைத்த உயிரினம்,
இல்லறம் காணும்போது .. 
பிறவியின் பயனை அடைகிறது!
ஒரு மனிதன் முழுமை பெறுவதற்கு பெண் தேவை!
அந்த பெண்ணை பெருமைப்படுத்த , பொருள் தந்து மணம் கொள்!
அவள் உன் வலக்கரங்களுக்கு சொந்தமாவாள்! இல்லையேல்..
இயற்கையின் இலக்கணங்களுக்கு நீ எதிராவாய்!
எனவே மானிடனே..
எளிமையை நிறுத்தி ..
வறுமையை துரத்தி..
இளமையின் வாழ்வை இனிதே ஏற்ப்பாயாக.
==================================
        இவன் : பிறைத்தமிழன்....