மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 12 ஜனவரி, 2011

மரித்திட்ட பூமி


மரித்திட்ட     பூமியை
மறுபடியும்   செப்பனிட்டு
உயிர்ப்பிக்கும்  உழவனுக்கு
ஓராயிரம்     வந்தனங்கள்

இறைவன்    படைப்பில்
எத்தனையோ அற்ப்புதங்கள்
ஏரோட்டி  இல்லையென்றால்
ஏது இங்கே    உணவகங்கள்

உழவை     தொழிலாக்கி,
உழைப்பை   களமிறக்கி,
விதையை    பயிராக்கி ,
உணவை    உருவாக்கும்

உன்னத     தமிழனின்
உழவுக்கும், தொழிலுக்கும்,
வந்தனை    செய்வோம்!
உழவற்ற     தேசத்தை
நிந்தனை    செய்வோம்!!,

சிகரம்  தொட்ட  செந்தமிழ்
சீர்   பெற    வேண்டி ,
தமிழாய்ந்த   தமிழனே
தரணியாள வேண்டும்!

என   தத்துவச்    சூளுரைத்து, 
எத்திக்கும்   வாழும்  தமிழருக்கு 
புத்தம்புது  பொங்கலும்,  செங்கரும்பாய்
தித்திக்கும்  உழவர்  திருநாள்   வாழ்த்து !
                          கூறும் .........................................!
=====================================
                         இவன் >>   >  பிறைத்தமிழன்

4 கருத்துகள்:

  1. மரித்திட்ட பூமியை மறுபடியும் செப்பனிட்டு
    உயிர்ப்பிக்கும் உழவனுக்கு ஓராயிரம் வன்தனைகள்
    அற்புதமான வரிகள்
    சிகரம் தொட்ட செந்தமிழ் சீர் பெறவேண்டும்
    தமிலாயிந்த தமிழனே தரனியாளவேண்டும்
    ஆகா ;!தமிழை நேசிக்கிண்றீகள் தமிழை சுவாசிக்கின்றீர்கள்
    உங்கள் சிந்தனை சிகரம் தொட வாழ்த்துக்கள்
    நன்றியுடன் சுட்டித்தமிழன்.>

    பதிலளிநீக்கு
  2. உண்ணும் உணவுக்கு நன்றி,
    இதை உணர்த்திய உங்கள் உணர்வுக்கு நன்றி
    "மெல்ல தமிழினி சாகும்" என்று கூறி கேட்டதுண்டு.வரலாறு இனி மாற்றி எழுதட்டும்
    "நல்ல தமிழினி வாழும்".
    தங்களின் நன்றி கலந்த உணர்வை, படித்தேன்..அது ஒரு படித் "தேன்"

    பதிலளிநீக்கு
  3. சுட்டித் தமிழன் அவர்களே உங்கள் கருத்து
    பிறைத் தமிழனுக்கு பெரும்
    ஊட்டச்சத்து மிக்க நன்றி ,,,

    பதிலளிநீக்கு
  4. "நல்ல தமிழினி வாழும் "

    உங்கள் எழுத்தில் தேனும்

    உள்ளத்தில் நானும் ஆகா !

    என் சிந்தனைத் தோழரே

    உங்கள் சீரிய கருத்துக்கு

    சிறியவனின் பெரியே நன்றிகள் ;;;

    பதிலளிநீக்கு