மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 25 டிசம்பர், 2010

இரத்தமும்..வியர்வையும்..


இரத்தமும் வியர்வையாய்  கசியும்..
            வெப்பபூமியில்  பிறந்த நாங்கள்..    
ஊரையும் பிரிந்து, உறவையும் பிரிந்து..
            ஓராயிரம் கனவை சுமந்து.. ஒய்யாரமாய்  வந்தோம்  பறந்து..
 வளமிக்க [வேலை] வாய்ப்பை தேடி..  
                      வதைக்கும் வறுமை சிதைக்க வேண்டி..
வளம் சிறக்கும் வாழ்வு செதுக்க வேண்டி..
                  பெரும் கதவுகள் இல்லா கருஞ் சிறைக்குள்ளே ..
வெளிச்சமற்ற விடியல்கள் உண்டு!  
                 விலங்குபூட்டிய விடுதலை உண்டு!
தினம் உணவு குறைந்து..உறக்கம் மறந்து..
                  உருகும் பனியில் உடல் முழுதும் நனைந்து..
உறுத்தும் குளிரில்  உறைந்தோம்!எழும்புகள் எல்லாம் மக்கியபோதும்,
                   நரம்புகள் எல்லாம் நடுங்கிய போதும்  ,
உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டோம்!
              உறவுகளை ஒரு நாளும்   மறக்க மாட்டோம்!
எங்களை பெற்றவர்களின் நலமும்
                          நாங்கள் பெற்றவர்களின் வளமுமே
 எங்களின் கனவு!   இக்கனவை நனவாக்க ..
                            உழைப்பையே நேசிக்கின்றோம்..
 கண் மூடியபோதும். களைப்பையே சுவாசிக்கின்றோம்!
                                  எப்போது???
          எங்கள் தாய்மண் மிதித்து..தண்ணீர் குடித்து..
          கண்ணை விரித்து, விண்ணை வெறித்து..
          விம்மி அழுது வேதனைகள் தீர்ப்போம்???

               {ஒரு தமிழனின் குளிர்தேச குமுறல்}                                                                            
                                                                         இவன்    பிறைத்தமிழன்

4 கருத்துகள்:

  1. தங்கள் கவிதை மிக்க அனுபவபூர்வமாக இருக்கிறது. எங்கள் தள்த்தில் மீள்பிரசுரித்திருக்கிறேன். ஆட்சேபனை ஏதும் இல்லை என்றினைக்கிறேன்

    சுட்டி
    http://www.tamillook.com/view.aspx?id=34c68282-f551-4d80-9b9e-57fdb9bbaf25

    பதிலளிநீக்கு
  2. உறவுகளின் தவிப்பை இக்கவிதையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள் தோழரே.

    ///எப்போது?
    எங்கள் தாய்மண் மிதித்து..தண்ணீர் குடித்து..
    கண்ணை விரித்து, விண்ணை வெறித்து..
    விம்மி அழுது வேதனைகள் தீர்ப்போம்???.///

    இவ்வரிகள் உணர்வுகளின் உச்சக்கட்டம்

    பதிலளிநீக்கு
  3. IN THESE WORDS, I CAN SEE MY LIFE..VERY TOUCHING LINES..PARTICULARLY THE FINAL TOUCH..EXCELLENT..WE ARE WITH YOU..WITH YOUR WORDS

    பதிலளிநீக்கு
  4.       எப்போது ???
    தாய் மண்ணை மிதித்து தண்ணீர் குடித்து
    கண்ணை விரித்து விண்ணை வெறித்து
    விம்மி அழுது வேதனை தீர்ப்போம் ???
    மரியாதைக்குறிய பிறைத்தமிழன் அவர்களே
    (ஒரு தமிழனின் குளிர் தேசக்குமுறலில் )
    உறவுகளை பிரிந்து வாழ்ந்த ஒவ்வொரு  தமிழனும்
    தன்னைஉணர்வான் ----சவுதி ரபிக் சென்னையிலிருந்து

    பதிலளிநீக்கு