மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 3 ஜனவரி, 2011

ஏன் இந்த மாற்றம்?


                ஒரு நெஞ்சின் ஓரத்திலே ,
                                   மறு நெஞ்சின் மத்தியில,.
                இதயத்தின் சற்று இறக்கத்தில்
                                  இன்பச்சருமத்தால் கூசுகிறதே!
                                              என்னுள் ஏன்  இந்த மாற்றம்?
                கண்ணுள் மின்னலை பாய்ச்சியவளால்
                           கலவாடப்படுகிறதோ இதயம்!
          கடவுளை சாட்சி வைத்து காதல் என்று கண்டறிந்தேன்
          மாலை நேர தென்றலாய்,
          மல்லிகை தரும் மனமாய்,
          மார்கழி தரும் குளிராய் ,
          செவிக்கினிய மெல்லிசையாய்,
          கவிதரும் செந்தமிழாய் , 
                              இன்பத்தை இழைத்தவளால் !
         துன்பத்தில் நான் மூழ்கி,
         தூரிகையில் மை தடவி ,
        நெஞ்சம் நினைவின் பால் இடறி,
        உள்ளம் உதிர்த்திட்ட கவிதையோ,!
                             ஒரு கோடி நீர் அருவி.::::::::
                                                                         இவன் : பிறைத்தமிழன்

1 கருத்து:

  1. மார்கழியே கண்டு நடுங்கும் கடுங்குளிரில் பணியாற்றிக்கொண்டு
    செவிக்கினிய மெல்லிசையாய்,கவிதரும் செந்தமிழாய் வாழ்ந்து
    தமிழை வாழ வைக்கும் பிறைத்தமிழனை மனமார வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு