மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

" பட்டுப்போன பழைய மரம் "









முகம் ::::அதில்   கண்ணீரின்
முத்துக்கள்  கரைந்திருக்கக்  கூடும் !

முந்தானையிட்டு   மூடியபோதும் ,
முழுதும்   மறைக்கப்படாத  சோகம் !

 
கேள்வி    ததும்பிய   பார்வை ,  
கேட்பதற்  கில்லை   நாதி !
 
கேவித்தான்   அழ   தயக்கம் ,
கேலி   பேசுவோர்   உண்டெனவே !

வரவேற்க    எத்தனித்த !
வறண்ட    இதழ்கள் !

வழக்கம்   போல்  வழிய ,வழிய ,

வாசலில்   வந்து   நிற்கும் !

வாழ்வு   சீரழிக்கும் ,
வசதிக்கார    விருந்தாளி !

யாருக்காகவோ    பாயும்   விரித்து ,
யாருக்காகவோ   வாயும்   சிரிக்கணும் !

யாருக்கும்   பிடிக்காத   இதை ,
யார்தான்    தொடங்கினாரோ ?

 

சிரிக்க   தெரிந்து   வைத்த ,
சிவப்பு   வெளிச்சம்    அவள் !

செதுக்கி    செப்பனிட ,
செல்வந்தர்    மட்டும்   உண்டு !

அம்மி    மிதிக்காமல் ,
அட்சதையும்    தூவாமல் !

அறைக்கதவு    தான்   சாத்தி ,
அறைமனதாய்    தாளிட்டு !


ஈனங்கள்   அரங்கேறும் ,
இழிமிகு   சேர்க்கையிலே !

இனவிருத்தி   விரும்பிடுவோர்,
இகத்தினில்   யாரு முண்டோ ?

பறந்து   விரிந்து   நிற்கும் ,
பசுந்   தழைகள்   ஏதுமில்லா !
 

 பாதையோர    பக்கங்களில்  ,  
பட்டுப்போன    பழைய   மரம் !

பாவி   அவள்     பெற்றதுவோ  ,
பரத்தை   என்ற  பட்டம்  மட்டும் !

சாதிக்கு    இடமில்லா ,
சமபந்தி    போஜனமே !

சகதி    யாகிப்போன    அவள் ,
சாதனைதான்     மிச்ச  மன்றோ !

வேதனைகள்    விருப்பமான ,
விலைமாதர்    வாழ்வினிலே !

மூடி    மறைத்தாலும்  தீரா ,
முடிவற்ற   சோகம் ,,,,!!!
==================================
    இவன்  >>   >  பிறைத்தமிழன் 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

" அண்டை புறம்பேசி, ஆழக்குழி தோண்டி"


அண்டை   புறம்பேசி , ஆழக்குழி தோண்டி
====================================================
ஏன்   செய்தேனோ  தவறு ,
ஏகமாய்   சிதைந்ததே  என்   வாழ்வு !

எல்லாச் சுகங்களும்  எல்லையில்லா  இன்பத்தோடு
கரைபுரண்ட காலங்கள்  கரைந்து  சென்றதே    ஏன் ?
இது என்ன கனவா  ?

இதயமும் இடிந்தது போல்  எண்ணத்  தோனுதே  ஏன்  ?
இது என்ன    கதையா  ?

என்  கைகளாலேயே  நான்  தேடிய  தீவினையே யானாலும்
மன்னிக்க வொன்னா  மா  கொடுஞ்  செயலும் , மன்னகத் திருப்பின்
ஏகப் பெரியவனாம்   என்னுடைய  ரட்சகன்   இரக்கமுள்ள   நாயகனும்
எனை  மன்னிக்க   மாட்டானா  ?
அதற்குள் 
அண்டை   புறம்பேசி  ஆழக்குழி தோண்டி
புரட்டிப்     தள்ளி   பூரிப்பு  கொள்கிறதே
என்ன  செய்வது  எனக்கு  வாய்த்த  உறவுகள்  அப்படி
பிறர்  நிம்மதியையும் ,சந்தோசத்தையும் ,
நிர்மூல  மாக்கிடவே    கங்கணம்  கட்டி  காலத்தை  கழிப்பவர்கள்

பெருங்கவலை   தீர்க்கவல்ல   பிஞ்சுப்  பிள்ளைச்  செல்வங்கள் 
பேரன்புப்  பிரளயமாய்  புரண்டு  தவழ்ந்த    என்
நெஞ்சுக்குழிக்குள்  கொஞ்சம்  
 நஞ்சை  நனைக்க  நாள்தோறும்  தோனுதே

வஞ்சத்தால்   வாழ்த்துச்    சொல்லும்  வல்லூறு  கூட்டமாம் 
வழக்கமான  உறவுகளே   வலமும் , இடமும் ,  மிகவும்    வலுவாக
வாள் அது    போதா தென    அதனினும்     மிகக்  கொடிய 
நோவு   கொண்ட  உள்ளத்தில்    நாவு  கொண்டு  கீறி
நர மாமிசம்    உண்ணுதே   நானிலம்  தாங்கிடுமா  ?
 
தாயும் , எனைத்தாரம்  கொண்டவனும் , 
பிள்ளை ,  பேரக்  குழந்தைக்கும் ,
பிணியும் , பெரும்   பிணக்கும்   நீங்கி ,  பிரியத்தால் 
பெற்றோர் , பிறந்தோர் ,பிற றோடும் 
பேரானந்தம்   தான்   கொள்ள 
 மூழ்கிய   நிலையிலேயே    முழுப்  பொழுதும்    முடிந்திடுமோ ?
முன்னேறும்   பாதைதனை   முயன்று   நானடைய ,  எப்போது ? 
என்னை   நான்   முழுதாய்   காண்பேனோ  ?  
-------------------------------------------------------------------------------------------------------
முழுதாய்  கண்டேன் நான்    இது  முற்றிலும்  உண்மையே !!!
                                                       இவன்   >>>    > பிறைத்தமிழன்

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

பிறரை வீழ்த்தச்செயும் சூழ்ச்சி

"
       "  முன்கோபி  "

 பிறரை வீழ்த்தச்செயும்  சூழ்ச்சி ,
  பிறகொருநாள்  உனக்கெதிராய்   சொல்லும் 
   சாட்சி !

   உனக்கு ஏற்ப்பட்ட சறுக்கல்
   உன் தலையில் எழுதப்பட்ட  கிறுக்கல்  என -
   எண்ணாமல் பெருக்கல் எனும்  கணக்குப்போட்டு
   வாழ்ந்து காட்டு !
  
   தரித்திரத்திலும்  சரித்திரம்  படைப்பவனே ,
   பவித்திரத்தின்  பாத்திரதாரி  !

   நன்மைக்கு    தீமை  எதிரி ,
   நமக்கு    நாமே    எதிரி  !

   சொல்   புத்தி ,  சுய  புத்தி  ,   
   இரண்டும்   இல்லாத  முன்கோபி ,
   இருபக்கக்  கூரான  கத்திக்கு  ஒப்பானவன்  !

   வஞ்சகனின்    வாயைப்போல் ,
   கொடுமையான  ஆயுதம்  வேறேதும்  இல்லை  !

   உன்னைவிட   திறமைசாலி  என   பிறரை    நினை ,
   பிறரைவிட    திறமைசாலி   ஆவதற்கு  நீ  முனை !

   உன்னைபுரிந்து  பிறர்   வாழ்வதை  விட ,
   பிறரைப்   புரிந்து   நீ   வாழ்வாயாக !

   நயம்  இல்லாதார்   வாழ்வில்  ஜெயம்  கொள்ளார் ,
   ஜெயம்  கொள்ளாதார்  பயம்   உள்ளர் !

   ஆரூடம்    நாடாதோர்   வாழ்வில் ,
   யாரோடும்   பகையில்லை !

   கண்ணை   மூடிக்கொண்டு   உலகைப்   பார் ,
   தன்னை  மீறிய   சக்திக்கு   இறைவன்   என்றே
   பொருள்படும் !

   உழைப்பாய்    நிறைவாக !.
   உண்பாய்    அளவாக !!.      அமையும் ,
   உன் வாழ்க்கை   சிறப்பாக ! ! !.....
============================================
                                                 >இவன்  >>>>> பிறைத்தமிழன் <<<<<<                                  

புதன், 3 ஆகஸ்ட், 2011

" அமுதத்தமிழ் "


                                 மனிதனாய்  பிறந்தேன்   புவியில் 
                                 தாயை   அறிந்தேன்   -   தமிழில் !
                                 முத்தம்  பொழிந்தால்     முதலில்  
                                 முழு  மொழி  தந்தாள் --  தமிழில் !

          அன்னையின்  தாலாட்டு,
          அழகு  தமிழ் !

         தந்தையின்வழி ,  
         தலைமுறைத்  தமிழ் !

         தலைவன்  பாராட்டு
         தத்துவ  தமிழ் !

         காதலில்  பிறக்கும்,
         கவிதை   தமிழ் !

         மனைவி   சொல் ,
         மந்திரத்    தமிழ் !

         மக்கட்  செல்வம்
         மகிழ்ச்சித்  தமிழ் !

         இரவில்    உலவும்,
         நிலவும்    தமிழ் !

         இருளை  கிழிக்கும்,
         ஒளியும்   தமிழ் !

         இளங்   காலை,
         இசைக்கும்    தமிழ் !

         இனிதாய்   பிறக்கும்,
         பூபாளத்   தமிழ் !

===========================================================================
                 
                    மேகம்  கண்டேன்  விண்ணில் 
                    அது  மின்னளிடுதே  தமிழில் 

                   காற்று  வீசும்     திசையில்
 மழை  

                   கனிந்து  பெய்யுதே   தமிழில் 


                   மேனி   நனைந்தால்  மழையில் 
                   மெல்லக்   குளிருமே   தமிழில் 

                  மலரின்   மகரந்தம்  என்  விரலில்
                  மயக்கின்ற   மனமோ  தமிழில்

                  மலையின்  முகடுகள்  பனியில் 
                  மாறிடும்  அருவியாய்  தமிழில் 

                  நதியின்  சீற்றம்  இரு கரையில் 
                  நானிலம்   செழிக்கும்  தமிழில் 

                  கடல்சென்   றடைந்திடும்  நதியில் 
                  தாலாட்டும்  அலைகள்  தமிழில் 

                 தவழ்ந்து  புரண்டேன்  அதனில் 
                 என்னைத்  தழுவும்  நுரைகள்  தமிழில் 

                 செல்  பிளந்த  சிப்பியின்   வயிற்றில்
                 சொல்  விளங்கும்  முத்தே  தமிழில்

=================================================


                  அன்னைத் தமிழ்     முதத் தமிழ்,
                               ட்ச்சித்தமிழ்           ளும் தமிழ் ,

                 இ ன்பத்தமிழ்          லக்கியத் தமிழ் ,
                  ஈ ந்து  மகிழும்       ஈகைத்  தமிழ் ,
                  உ ள்ளம்  கவர்       உரைக்கும்  தமிழ் ,
                         றுகண்டு            ஊ டருக்கும்  தமிழ்,
                  எ ங்கெங்கும்        எழுத்ச்சித் தமிழ், 
                  ஏ ற்றமிகு              ஏழிசைத்   தமிழ், 
                         ம் புலனில்             க்கியத்  தமிழ் ,
                  ஒ ப்பற்று                ளிரும்  தமிழ் ,
                         ங்கார                   சைத்    தமிழ்,
                  ஒளவியமற்ற        வைத்  தமிழ் ,
            ஃ,    இது               ஆயுதத் தமிழ்  !!!.......
==========================================================================================
                                என் தமிழ் , இனிய தமிழ் , இது பிரியமுடன்
                                பிறைத்தமிழன் பேசும் தமிழ் !
                                கல்தோன்றி ,  மண்தோன்றா , காலத்திற்கு
                                முன் தோன்றிய   மூத்த தமிழ் , முத்தமிழ் ,
                                செம்மொழி  யென  சீர் பெற்ற  செந்தமிழ் !!!.....
===============================================================
                                            இவன்    >>  பிறைத்தமிழன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

" நீர்த்துப் போகும் நிமிடம் வந்தால் "



ஏழை வீட்டில் எரியும் அடுப்பில்
எந்நாளும் வறுமை
நாளைப்   பொழுதை நகர்த்திச்  செல்லும்
நம்பிக்கையில் வெறுமை !

வீரம் பேசி பொழுதை  கழிக்கும்
கோழை  மனதில் கொண்டதால்   பெருமை,
வெற்றி  வந்து  சேர்த்தாலும்
விலகாது   வறுமை !

இக்கால இசைக்கு இலக்கியம் வடிக்கும்  கவி  
எடுத்துச்  சொல்லும்  இலக்கணச் சிறுமை !   
பொங்கும் பொருள் தங்கும்  அவர்
தமிழ்  சிந்தைக்கோ பெரும்  வறுமை !

கலி  கால  சிறப்பை   காட்சி  வடிக்கும்
திரையுலகச் சிற்ப்பிகள்  தேர்ந்தெடுக்கும் புதுமை ,   
அதில்   நாகரீக  மங்கையின்  நளினமற்ற 
நாட்டியம்   செல்லும்  வறுமை !

வெள்ளித்திரையின் வெளிச்சம் பட
ஒட்டுத்துணிக்குள் உடலை திணித்து
துட்டுக்கென  தொலைத்திட தயங்கா
வெட்கக் கேட்டுக்கு விலையாகும் பெண்மை !

ஆத்திரம்   பேசும் அதிகார  வர்க்கம் 
சேர்த்து  வைத்த   செல்வக்குவியல்
நீர்த்துப் போகும்  நிமிடம் வந்தால்
நினைத்துப்   பார்   நிலைக்குமா ?இந்த   பகுமை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முட்டாள்கள் கூட   பணம்   சன்பாதிக்கலாம் !  அதை ,
ஒரு  அறிவாளியால்தான்   காப்பாற்ற  முடியும்   இருந்தும்
எந்த  ஒரு  அறிவாளியும்   இறுதியில்  தன்னோடு
எடுத்துச்செல்ல    முடியவே   முடியாது    எனவே,
மனிதா   உன்  தேவைக்கு   மீறி  சேர்த்து  வைக்காதே !
ஏழையை  குறிவைத்து  உன்  சேவையை   துவங்கு
அப்போது   உன்  பிறவிக்கான   பொருள்   புரியும் !!!......
=============================================================
                              இவன் >>> பிறைத்தமிழன் <<<

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

" பகலெல்லாம் பசித்திருந்து "


"  மனிதன்  தறிகெட்டுப் போகாமல்  "
 ==========================================================

நீரை  ஆதாரமாகக்கொண்டது  "  "இரத்தம் "
இரத்தத்தை ஏற்றம் செய்யக்கூடிய  இதயம் அமையப் பெற்ற
இரத்தமும் ,சதையுமாக உள்ள    எந்த ஒரு ஜீவராசி யும்
உண்ணாமல் ,பருகாமல் உயிர் வாழ்வதில்லை

உன்னதமிக்க மனித வாழ்வியல் தத்துவத்தை வகுத்த இறைவன்
கண்ணியமிக்க  மாதமாம்  ரமளானில்  மாண்புக்குரிய  நோன்பை
மனித குலத்திற்கு விதியாக்கி அதன் மூலம்  பசியை உணரச்செய்து
உள்ளத்தில்  ஈகையை  மலரச்செய்து  ஏழை  எளிய மற்றும்
வறுமையிலும் வாய்திறந்து கேளா வறியவர்களை கண்டறிந்து
இதயம் குளிர  ஈந்து மகிழ வகைசெய்யும் புனிதமிக்க மாதம்
ராமலானாகும் !

மனித உடல்கூறு  பற்றிய  மருத்துவம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய
பல   அற்புதத்தை   நோன்பானது  நோன்பாளியின்  உடலில்
ஏற்ப்படுத்துகிறது ! 
எவர் ஒருவர்   ரமளானின்  மாதத்தை  அடைகின்றாரோ
அவர்  அப்படியே  அதில் பொருந்திக் கொள்ள வேண்டும்

கல் உடைப்போர் ,மூட்டை சுமப்போர் ,பாரவண்டி இழுப்போர் ,
மரம் ஏறுவோர், மலை ஏறுவோர் ,சுரங்கம்  தோண்டுவோர் ,
சாலைத் தொழிலாளி ,  கட்டிடத்தொழிலாளி , வியாபாரி  என 

எந்த  நிலையிளிலும்  அதற்க்குள்  இருந்தே  நோன்பை 
நோற்க  வேண்டும்       கால  நிர்ணயப்படி
உண்ணாமல் , பருகாமல் , தீயதை 
பேசாமல் , கேளாமல் , பாராமல்

இரவெல்லாம்   விழித்திருந்து   இறைவனைத் தொழுது ,
பகலெல்லாம்   பசித்திருந்து  தொடர்  நோன்பை  பேணுகின்ற
நோன்பாளியின்   உடலில் 
இயற்கையாக  இரசாயன  மாற்றம்  ஏற்ப்பட்டு
முற்றிலுமாக  இரத்தம்  புதுப்பிக்கப்படுகிறது !

மனிதன்  தரிகேட்டுப் போகாமல்  
தரமிக்க  வாழ்வுக்கான தத்துவத்தை
பறை சாற்றுகின்ற   பொருள்பொதிந்த , அருள்நிறைந்த ,
புனிதமிக்க   ரமலானை  வரவேற்று   
நோன்பிருந்து  இறைவனின்  அருட் பொருத்தத்  தைப்  பெறுவோமாக
வஸ்ஸலாம்   

                                >>>> இவன்   > பிறைத்தமிழன்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

" பிதற்றல்கள் "

 கனவுகளையும் , கவிதைகளையும் 
சுகமாய்ச்  சுமந்து  கொண்டிருந்த  நான்

இளங்காலைப் பொழுதுகளின்
இனிய   கீதங்களை

என்  செவி  நனைத்த  இனிமையோடு
நான்  சேர்ந்திசையாய்  கேட்டபோது

சின்னச் சின்ன  புன்னகைகளையும் ,
பெரிய  பெரிய   கோளங்களையும்,

 என்  சிந்தை  நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்

மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு  சிறகு  கட்டி

கண்ணீரை ,   முத்துக்களாய்   மாற்றி ,
கடல்நீரை   கையுக்குள்   அடக்கி ,

கனவுகளை   காட்சிப் படுத்தி ,
கவிதைகள்    ஆயிரம்   வடித்தேன்

என்ன பயன் ?
இவையெல்லாம் 

பின்னுக்கு  தள்ள  வேண்டிய
பிதற்றல்க லாம் !          ஆம்          
 

இலக்கிய   எஜமானர்கள் ,
எழுத்துலக    பிரம்மாக்கள் ,

சிந்தனையில்   சில்லறை  பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள்   கண்  முன்னே

ஏழை  கவிஞனின்  எழுத்துக்கள்
எப்போதும்   பிதற்றல்களே ....!!!
___________________________________________
     இவன் >>>  பிறைத்தமிழன்  <<<