மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

" பிதற்றல்கள் "

 கனவுகளையும் , கவிதைகளையும் 
சுகமாய்ச்  சுமந்து  கொண்டிருந்த  நான்

இளங்காலைப் பொழுதுகளின்
இனிய   கீதங்களை

என்  செவி  நனைத்த  இனிமையோடு
நான்  சேர்ந்திசையாய்  கேட்டபோது

சின்னச் சின்ன  புன்னகைகளையும் ,
பெரிய  பெரிய   கோளங்களையும்,

 என்  சிந்தை  நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்

மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு  சிறகு  கட்டி

கண்ணீரை ,   முத்துக்களாய்   மாற்றி ,
கடல்நீரை   கையுக்குள்   அடக்கி ,

கனவுகளை   காட்சிப் படுத்தி ,
கவிதைகள்    ஆயிரம்   வடித்தேன்

என்ன பயன் ?
இவையெல்லாம் 

பின்னுக்கு  தள்ள  வேண்டிய
பிதற்றல்க லாம் !          ஆம்          
 

இலக்கிய   எஜமானர்கள் ,
எழுத்துலக    பிரம்மாக்கள் ,

சிந்தனையில்   சில்லறை  பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள்   கண்  முன்னே

ஏழை  கவிஞனின்  எழுத்துக்கள்
எப்போதும்   பிதற்றல்களே ....!!!
___________________________________________
     இவன் >>>  பிறைத்தமிழன்  <<<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக