அண்டை   புறம்பேசி , ஆழக்குழி தோண்டி 
============================== ======================
ஏன்   செய்தேனோ  தவறு ,
ஏகமாய்   சிதைந்ததே  என்   வாழ்வு !
எல்லாச் சுகங்களும்  எல்லையில்லா  இன்பத்தோடு 
கரைபுரண்ட காலங்கள்  கரைந்து  சென்றதே    ஏன் ?
இது என்ன கனவா  ?
இதயமும் இடிந்தது போல்  எண்ணத்  தோனுதே  ஏன்  ?
 இது என்ன    கதையா  ?
என்  கைகளாலேயே  நான்  தேடிய  தீவினையே யானாலும் 
  மன்னிக்க வொன்னா  மா  கொடுஞ்  செயலும் , மன்னகத் திருப்பின் 
ஏகப் பெரியவனாம்   என்னுடைய  ரட்சகன்   இரக்கமுள்ள   நாயகனும் 
எனை  மன்னிக்க   மாட்டானா  ?
அதற்குள்  
அண்டை   புறம்பேசி  ஆழக்குழி தோண்டி 
புரட்டிப்     தள்ளி   பூரிப்பு  கொள்கிறதே 
என்ன  செய்வது  எனக்கு  வாய்த்த  உறவுகள்  அப்படி 
பிறர்  நிம்மதியையும் ,சந்தோசத்தையும் ,
நிர்மூல  மாக்கிடவே    கங்கணம்  கட்டி  காலத்தை  கழிப்பவர்கள் 
பெருங்கவலை   தீர்க்கவல்ல   பிஞ்சுப்  பிள்ளைச்  செல்வங்கள்  
பேரன்புப்  பிரளயமாய்  புரண்டு  தவழ்ந்த    என் 
நெஞ்சுக்குழிக்குள்  கொஞ்சம்   
நஞ்சை நனைக்க நாள்தோறும் தோனுதே
நஞ்சை நனைக்க நாள்தோறும் தோனுதே
வஞ்சத்தால்   வாழ்த்துச்    சொல்லும்  வல்லூறு  கூட்டமாம்  
வழக்கமான  உறவுகளே   வலமும் , இடமும் ,  மிகவும்    வலுவாக 
வாள் அது    போதா தென    அதனினும்     மிகக்  கொடிய  
நோவு   கொண்ட  உள்ளத்தில்    நாவு  கொண்டு  கீறி 
 நர மாமிசம்    உண்ணுதே   நானிலம்  தாங்கிடுமா  ?
தாயும் , எனைத்தாரம்  கொண்டவனும் ,  
பிள்ளை , பேரக் குழந்தைக்கும் ,
பிள்ளை , பேரக் குழந்தைக்கும் ,
பிணியும் , பெரும்   பிணக்கும்   நீங்கி ,  பிரியத்தால்  
பெற்றோர் , பிறந்தோர் ,பிற றோடும்  
பேரானந்தம்   தான்   கொள்ள  
 மூழ்கிய   நிலையிலேயே    முழுப்  பொழுதும்    முடிந்திடுமோ ?
 முன்னேறும்   பாதைதனை   முயன்று   நானடைய ,  எப்போது ?  
என்னை   நான்   முழுதாய்   காண்பேனோ  ?   
------------------------------முழுதாய் கண்டேன் நான் இது முற்றிலும் உண்மையே !!!