மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 16 மார்ச், 2011

பூகம்பப் பேரதிர்வே



பூகம்பப்  பேரதிர்வே  போதுமே  நிறுத்து !   நீ -

புரட்டிய  பூமியிலே   வெறும் புல்  பூண்டு 
? மட்டுமா    இருக்கு 

ஆழிப் பேரலயே  கொஞ்சம்   
அடங்கு ! நீ  -

ஆர்ப்பரித்து    அடிக்கின்றாய்   இந்த 
போற்  குணம்தான்  எதற்கு ?
 
இத்தனை  பெரிய  இறைவனின் தண்டனை !    
இயற்கையை   சிதைத்ததன்    விளைவா ?

கற்பனை  உதித்து அற்ப்புதம்  விதைத்து ,
சில  நற்பலன்   அடைவது  தவறா ?

தென்றல்    வீசும்   நந்தவனத்தை
தேடிப்பாயும்  தெளிந்த  அருவியும்  நீர்தானே ?

மலைகளைகூட  மணல் மேடாக்கும்
அலைகளைப் பெற்ற கடலே நீ அரக்கனோ ?

மனித உடல்களை மலைகளாய் குவித்து ,
அதில் மரணஓலம் எதிரொலி கேட்டு ,

மதிப்புமிக்க  உயிர்களை  மலிவாய்  வாங்கும் 
மாயப்  பெருங்கடல்  மாபரும்     வணிகனோ ?

புரட்டிப்  போட்டு  பூமியை  மிதித்ததில்  ,
 கார்களும்  கப்பலும்  கட்டிட உச்சியில் !

குப்பை  கூலமாய்  குவிந்து  கிடக்கும் ,
கோரக் காட்சியின்  கொடுமைத்  தொடறாய் ,


அலக் களிப்பில்  அணுவும்  உலையும்,
அடக்க முடியா  அதன்  கதிரின்  வீச்சும் ,

ஜப்பான்  தேச  சவக்  கிடங்காய்
சென்டாய்  நகரம்  சிதைந்து  போய் ,

மனுவும்  மக்களும் ,  மால்வது  கொடுமை !

மரணம்  என்பது  இயற்கையாகும் !
மால்வது  என்பது  தண்டனையாகும் !!

வாழ்வது  வரை  ஆயுள்  அதனை
வீணில்  நீயும்  செலவு  செய்து ,

நஷ்ட மேதும்  அடைந்து  விடாதே
மாண்புக்  குரிய   மனித  இனமே !!!

காலத்தின்   மீது   சத்திய மிட்டு 
இறைவன்  கூறும்  வசனம்  ஒன்று
     இதோ
=================================================
மனிதன் ( தன் ஆயுளை வீணில் செலவு செய்து )
நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான் :அத்~103 ~
          அல்அஸ்ர்~காலம் ( 13 ):அல் குர் ஆண்
=================================================
     இவன் >>    >> பிறைத்தமிழன் 

புதன், 2 மார்ச், 2011

கற்ப் பில்கூட கலப்படம்


விறகு வைத்து அடுப்பெரித்து
விளைவித்ததை வேகவைத்து
உண்டு உயிர் வாழ்ந்த
உன்னத காலம் இன்று
உருக்குலைந்து போனதுவே
ஊறு செய்யும் கலப்படத்தால்

முளைப்பயிர்  கருகும்படி
முலைப்பாலும் திரியும்படி
நாடி நரம்புகளில்
ஊன்   உயிர்  அணுக்களில் 
இலக்கு எல்லையின்றி
இரண்டற கலந்துவிட்ட
                 கலப்படங்கள்

கலப்படங்களை  கவுரவிக்கும்
விதையில்லா வித்துக்களும்
வேரில்லா விரிச்சங்களும்
விவசாயம் ஆகிப்போன
விஞ்ஞான யுகத்தினிலே

மரபுசாறா தொழிலுக்கே
மாபெரும் வெற்றியிங்கே
நீரற்று நிலம் நீர்த்துப்போக
கூழாங்கல் குருமணலும் 
கொள்ளையாய்   விற்ப்பனை

அறநூறு கோடி மனிதர்கள்
வாழுகின்ற பூமியிலே
கொஞ்சி மகிழ குழந்தை
இல்லையாம்
அறிவு ஜீவிகளின்
அற்புத கண்டுபிடிப்பு 

குழந்தை சுமக்கின்ற  வயிறும்
வாடகைக்கோ வசதிக்கேற்றபடி 
விற்பனைக்கோ  ஆகா 
கற்ப் பில்கூட கலப்படம்
=================================
" மாசற்ற நீரும் ,
  தூசற்ற காற்றும் "

" கலப்பற்ற உணவும் ,
  காணக்கிடைக்கின் "

" நோயற்ற வாழ்வை
   நுகர்வது திண்ணம் "
================================
இவன்  > > > பிறைத்தமிழன்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

" வெள்ளை உடை வியாபாரிகள் "



கட்டுக் கட்டாய்  கருப்புகளை
 கண்டபடி   குவித்தவர்கள் !
சட்டத்தின்    ஓட்டைக் குள்ளே
சலவையிட்டு   வெளுத்தவர்கள்!
இனி வெளியே வருவார்கள்
வெள்ளை  உடை  வியாபாரிகள் !
சாதிக் கடிவாளம் சண்டியரும் கையில் வைத்து !
மோதிப்  பாப்பார்கள் முன்னணி தொகுதி கேட்டு !
வெற்றிக் கணக்கிட்டு விழுக்காடு தருவார்கள் !
ஆண்டுக்  கொரு  அணிமாறி
அவுசாரியை   மிஞ்சுவார்கள்
செல்லும்   இடமெல்லாம் சின்னத்திரை
 செய்தியில் சிரிப்பாய்  சிரிப்பார்கள்  
 கூடிப்பேசி  கொள்ளையடிக்கும்  பகுதியை 
கூறு  போட்டு   பிரிப்பார்கள்  !
குவித்து வைத்த  கருப்புப்   பணத்தை
களமிறக்கி  விதைப்பார்கள் !
வாக்குகள் விற்கப்படும் வாசகம் கண்டதுபோல்
கொள்கை முழக்கமிட்டு கும்பிட்டு  வருவார்கள் !  
எச்சரிக்கை உள்ளவர்கள்  ஏமாரவா மாட்டார்கள ?
 நச்சரிப்பு  தாங்காமல்  நமக்கென்ன வந்த தென்று ,  
நல்ல விலை போவார்கள் !
 =======================================
எப்போது    மாறுமோ ?  இன்றைய { இந்திய }
தேர்தலின்   எக்கச்சக்க   வக்கணைகள்
இவன் >   >>  பிறைத்தமிழன்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

" புது மழை "

        
          

          புழுதி    மண்      மீது            விழுந்த
          புத்தம் " புது   மழை "     நீர்த்துளியே!

          உன்    பொன்    மாரிப்  பொலிவால்
          பொன்   விளைவித்த  புன்  சிரிப்பே!!

          கால    இடுக்கின்கால்   நீ    கலைந்திடின்
          விலைபோகா  உலகு  வெறும்  இருட்டே!!!
          =======================================                                
                      இவன் ..>>>பிறைத்தமிழன்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மண்ணோடு பெண் மகவை,

  *பெண் *
==========
உள்ளத்தால் வதைபட்டு 
உடலால் சிதைபட்டு

உருவாக்கும் சந்ததியை 
பெண்ணென்று கண்டுவிட்டால்

பேரிழப்பு  வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள் 

சிசுக் கொலை செய்துவிடும் 
சேதிகளும்  கேட்டீரோ ? அன்று 

மண்ணோடு  பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !

மாபாவச் செயல்  தடுத்த ,
மாநபிகள் சொல்  விளங்கி 

நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள் 

நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ?  இன்று 
___________________================_________________
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
ஆதலால் ,
பெண் ஒன்றும்    அடிமையில்லை !!

வடிவம்     மாறுதலால் ,
 வனப்புகல்  உடையவள்   " பெண் "

வலிமை குறை வதனால்,
 வாஞ்சைக்கு உரியவள் " பெண் "

மானுடம் செளிக்க வல்ல,
 மா தவ மங்கையவள் " பெண் "

வெறும் போகப் பொருளல்ல  " பெண் "
போற்றிப் *பொன்* படுத்து மனிதா =நின் !!!
==================================================================
இவன் >>>பிறைத்தமிழன்

சனி, 5 பிப்ரவரி, 2011

கரும்பளிங்கிக் கல்லறையில்,

==============================================================
  கரும்பளிங்கிக் கல்லறையில்
  இளஞ்சிவப்பு மலர்    பொதித்து !
               தீட்டப்பட்ட வாசகங்கள்

             தோற்றமும் ,      மறைவும் ,,
               தொடரும் கவிதையுடன் !

       உன்மீது  நான் கொண்ட காதல்
                                      பொய்யென்று
மண்மீது  காதல் நீ கொண்டாயோ ?

      என்னை மேகமாய்  சூழ்ந்தவள் ,                              
                                           இதயத்தில்
      மின்னலாய்  பாய்ந்தவள் .........!
  
          இல்லாதபோது   எனை ஏன் ?
    மரணம்    கொள்ளாது போனது ?
=============================================================        
                இவன்  >  ~:   பிறைத்தமிழன்  :~

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இருக்கு ஆனா இல்லை


அடைமழை !  அதனால்
வீட்டைச்சுற்றி  வெள்ளக்காடு
குடிக்க நீரின்றி !
குடியானவன்  கூரைநோக்கி
இருக்கு , ஆனா இல்லை !
மாசற்ற  நீர் !
தூசற்ற காற்று !!
கலப்பற்ற உணவு !!!
இருக்கு , ஆனா இல்லை ...
                      இவன் >> பிறைத்தமிழன்