மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

" வெள்ளை உடை வியாபாரிகள் "



கட்டுக் கட்டாய்  கருப்புகளை
 கண்டபடி   குவித்தவர்கள் !
சட்டத்தின்    ஓட்டைக் குள்ளே
சலவையிட்டு   வெளுத்தவர்கள்!
இனி வெளியே வருவார்கள்
வெள்ளை  உடை  வியாபாரிகள் !
சாதிக் கடிவாளம் சண்டியரும் கையில் வைத்து !
மோதிப்  பாப்பார்கள் முன்னணி தொகுதி கேட்டு !
வெற்றிக் கணக்கிட்டு விழுக்காடு தருவார்கள் !
ஆண்டுக்  கொரு  அணிமாறி
அவுசாரியை   மிஞ்சுவார்கள்
செல்லும்   இடமெல்லாம் சின்னத்திரை
 செய்தியில் சிரிப்பாய்  சிரிப்பார்கள்  
 கூடிப்பேசி  கொள்ளையடிக்கும்  பகுதியை 
கூறு  போட்டு   பிரிப்பார்கள்  !
குவித்து வைத்த  கருப்புப்   பணத்தை
களமிறக்கி  விதைப்பார்கள் !
வாக்குகள் விற்கப்படும் வாசகம் கண்டதுபோல்
கொள்கை முழக்கமிட்டு கும்பிட்டு  வருவார்கள் !  
எச்சரிக்கை உள்ளவர்கள்  ஏமாரவா மாட்டார்கள ?
 நச்சரிப்பு  தாங்காமல்  நமக்கென்ன வந்த தென்று ,  
நல்ல விலை போவார்கள் !
 =======================================
எப்போது    மாறுமோ ?  இன்றைய { இந்திய }
தேர்தலின்   எக்கச்சக்க   வக்கணைகள்
இவன் >   >>  பிறைத்தமிழன்

2 கருத்துகள்:

  1. வெற்றிக்   கணக்கிட்டு
    விழுக்காடு   தருவார்கள் !
    ஆண்டுக்  கொரு  அணிமாறி
    அவுசாரியை   மிஞ்சுவார்கள்  !

    செல்லும்   இடமெல்லாம்
    சின்னத்திரை  செய்தியில் ,
    சிரிப்பாய்    சிரிப்பார்கள் !

    கூடிப்பேசி  கொள்ளைப் பகுதியை 
    கூறு  போட்டு   பிரிப்பார்கள்  !
    என்றாவது ஒரு நாள் மாரும்
    நிச்சயம் அதிலே நான்{ இந்திய }
    சாந்தி பெறுவேன்!

    பதிலளிநீக்கு
  2. எனதன்பிற்க்கினிய முகம்மது ரபிக்
    தாங்கள் வழங்கிய கருத்துரை என்
    சிந்தனையை சிறப்பிக்கும் ஒரு
    வெற்றிப்படி
    நன்றியுடன் >>>>பிறைத்தமிழன்

    பதிலளிநீக்கு