"  முன்கோபி  " 
 பிறரை வீழ்த்தச்செயும்  சூழ்ச்சி ,
  பிறகொருநாள்  உனக்கெதிராய்   சொல்லும்  
   சாட்சி !
   உனக்கு ஏற்ப்பட்ட சறுக்கல் 
   உன் தலையில் எழுதப்பட்ட  கிறுக்கல்  என -
   எண்ணாமல் பெருக்கல் எனும்  கணக்குப்போட்டு 
   வாழ்ந்து காட்டு !
   தரித்திரத்திலும்  சரித்திரம்  படைப்பவனே ,
   பவித்திரத்தின்  பாத்திரதாரி  !
   நன்மைக்கு    தீமை  எதிரி ,
   நமக்கு    நாமே    எதிரி  !
   சொல்   புத்தி ,  சுய  புத்தி  ,    
   இரண்டும்   இல்லாத  முன்கோபி ,
   இருபக்கக்  கூரான  கத்திக்கு  ஒப்பானவன்  !
   வஞ்சகனின்    வாயைப்போல் , 
   கொடுமையான  ஆயுதம்  வேறேதும்  இல்லை  !
   உன்னைவிட   திறமைசாலி  என   பிறரை    நினை ,
   பிறரைவிட    திறமைசாலி   ஆவதற்கு  நீ  முனை !
   உன்னைபுரிந்து  பிறர்   வாழ்வதை  விட ,
   பிறரைப்   புரிந்து   நீ   வாழ்வாயாக !
   நயம்  இல்லாதார்   வாழ்வில்  ஜெயம்  கொள்ளார் ,
   ஜெயம்  கொள்ளாதார்  பயம்   உள்ளர் !
   ஆரூடம்    நாடாதோர்   வாழ்வில் ,
   யாரோடும்   பகையில்லை !
   கண்ணை   மூடிக்கொண்டு   உலகைப்   பார் ,
   தன்னை  மீறிய   சக்திக்கு   இறைவன்   என்றே 
   பொருள்படும் !
   உழைப்பாய்    நிறைவாக !.
   உண்பாய்    அளவாக !!.      அமையும் ,
   உன் வாழ்க்கை   சிறப்பாக ! ! !.....
 ============================================
                                                  >இவன்  >>>>> பிறைத்தமிழன் <<<<<<