~~~~இறை வணக்கம் ~~~~ 
எப்படி  உணவளிக்க 
இறைவனால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படாத  
எந்த  ஒரு   ஜீவராசியும்  இவ்வுலகில்  இல்லையோ,
 அப்படியே  யாதொன்றும்  அவனன்றி  நிகழ்வதுமில்லை , 
 யாராலும்   நிகழ்த்தப் படுவதுமில்லை !
 சூரியக் குடும்பத்தில்  அங்கம்  வகிக்கின்ற  புவி  உள்ளிட்
அனைத்து  கோள்களையும் படைத்து  பரிபாலிக்கின்ற இறைவனே    
அவற்றில்  ஜீவனற்ற வைகளையும் , 
 ஜீவனுள்ள வைகளையும் ,
 ஜீவ  ஆதாரங்களையும் ,
 அதற்க்கான  கால  நிர்ணயங்களையும் 
 வகுத்தவனாக  இருக்கின்றான்  !
 இவை அணைத்தும் காலவரையின்றி 
 இறைவனை துதித்துக்கொண்டுதான் இருக்கிறது 
 மனிதனுக்கான  வணக்கம் மட்டும் நேரம் குறிப்பிடப்பட்டு 
 வரைமுறை படுத்தப்பட்ட வணக்கமாக 
 "தொழுகை"  அவன் மீது   விதியாக்கப் பட்டுள்ளது !
ஆறாம்  அறிவு  அமையப்பற்ற  மனிதன்  அதைக்கொண்டு 
 ஆற்றலின்  உச்சத்தை  தொட்டுவிட்ட போதும் 
 நிச்சயமாக  மனிதன்  ஒரு  படைப்பினம்தான் !
 தவிர  படைப்பாளி   அல்ல
 இந்த  உண்மையை  மறுக்க வில்லை  என்றாலும் 
 மறந்த  நிலையில்  மாச்சரியங்களில் 
 புதைந்து   கொண்டிருக்கிறான்  மனிதன் 
 எவன்   ஒருவன்  தன்னை  படைத்தவனை  உளப்பூர்வமாக தொழுகின்றானோ 
அந்த  தொழுகையானது   அவனை   மானக்கேடான  
விசயங்களில்  இருந்து  முற்றிலுமாக   பாதுகாத்து  
வரைமுறைப்  படுத்தப்பட்ட  வாழ்கையை   வழங்குகிறது !
இவ்வுலகில்  அழகாக  தெரியப்பெற்ற  சிற்றின்பங்களை 
மிக  அருகாக  உணர்ந்து  அனுபவிக்கின்ற   மனிதன் 
இறைவனையும் , அவன்  கட்டளைகளையும் , மறுமை பற்றிய     எச்சரிக்கைகளையும்  இறைதூதர்  மூலம்   செய்தியாக  பெற்றவை 
மிகத்தொலைவாகவும் ,  பழைமையாகவும்  தோன்றுமாயின் 
மனித   ஆயுளின்   வரம்பை   மாற்றியமைக்க 
முயர்ச்சிக்கின்றான்  என்றே  பொருளாகும்  
இருந்தும் 
அவற்றில்  முறையாக   தோற்றுக்கொண்டே 
இருக்கின்றான்  மனிதன் !
 
இறைவனின்  மனிதத்  தலையீடு  இல்லாத 
இயற்கைக்  கட்டமைப்புகள்  யாவும் 
 படைத்தவனின்  கட்டளைப்படி 
இயங்குவதால்  அதன்  இயக்கத்திலேயே   
 இறைவணக்கத்தை  எடுத்து  இயம்பி 
படைத்தவனை  தொழும்  பண்பை  பறைசாற்றுகிறது ! 
முன்னோர் ,  மூதாதயர் , 
உற்றார் , உறவினர் , உடன்பிறந்தோர் ,
தனைப் பெற்றோர் , தான்  பெற்றோர்  என
எத்தனையோ  உறவுகள்   கண்முன்னே  தன்னை  விட்டு  பிரிந்து 
சென்று கொண்டிருப்பதை ஒவ் வொரு  நாளும்  சந்தித்துக்கொண்டிருக்கும்   மனிதன் 
சிந்திக்க  மறந்தவை  என்ன ?  
  உலகில்   நிலை யற்ற  மாந்தருக்கு  நிகரற்ற  மறை  தந்த 
இணையற்ற  இறைவனை  இன்றே   தொழுவாய்   மனிதா  
தரம் கொண்ட  மனிதன்   தறி கெட்டுப்  போகாமல், 
  தரணியில்     வாழவும் , 
சிரம்  தாழ்த்தி   தொழும்  சீரிய வணக்கத்தை 
 
சிரமேர்க்  கொள்வாயாக !
==========================================