படிப்பை    முடித்து     வேலை 
  செய்து  கொண்டிருக்கும்   நான்       
ஒவ்வொரு  நாளும் ,
      ஒவ்வொரு   வாரமும் ,  
             ஒவ்வொரு வருடமாக , 
 எதையோ   தேடுகின்றேன் !!
வேறு       வழியின்றி             
       விடுமுறைகள்     தவிர
              வேலை  நாட்களில் !!  ஆம் 
தொலைத்துவிட்ட  என் 
 மாணவப்   பருவத்தை!
              கால ஓட்டத்தால்  
              தவிர்க்கமுடியாத 
 தலைமுறை    இடைவெளி !!
 இப்போது  நான் ரசித்துக் களித்த
            கல்லூரி       வாழ்க்கை 
            கனவில்      மட்டுமே !!
 தொடருகின்ற   தேடல்
 தொடர   வேண்டி      கண்கள் மூடி 
 கனவை      தேடுகின்றேன் 
கடந்த காலத்தை காணவில்லை,
எதிர்காலம் என்னவென்று -
தெரியவில்லை ..................???.
=========================================
சென்றகாலத்தை பற்றியே
சிந்தித்துக்கொண்டிருப்பவன்
எதிர் காலத்தை இன்றே
இழந்துவிட்டவனாவான் !!!
=========================================
இவன் >> >> பிறைத்தமிழன்

