மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 23 ஏப்ரல், 2020

"கிருமி யுத்தம்"

கொரோனாவே கொஞ்சம் நில்
யிர்கள்   உன்னால் 
உருவப்பட்டு   உடல்கள் 
கொத்துக் கொத்தாய்
உதிர்ந்துகொண்டே இருக்கிறது

வாண்டு முதல் வல்லரசுவறை
அகில உலகமே அஞ்சி நடுங்கி
கண்னுக்கு தெரியா கிருமி உன்னை
கட்டுப்டுத்தவே  "முயல்கிறது


கொங்சம் விட்டுக் கொடுத்து
விலகித்தான் போ கொரோனாவே
இல்லையேல் பட்டினிச் சாவின்
பலி, பாவம் உன்னைச் சேரும்

எங்களை வீட்டுக்குள் முடக்கிய
நாட்டுத்தலைவர்களுக்கு பசிக்காது
ஏனென்றால் அவரகள் இந்த
நா(ஓ)ட்டுக்காவே வாழ்பவர்கள்

பசியுள்ள  பாமரன் விடியலுக்கு
விளக்கேற்றி விழித்திருக்கிறோம்,
"கை" தட்டியும்  காத்திருக்கிறோம்
கருணையாளன் கிருபை வேண்டி.
===============================
இவன்:பிறைத்தமிழன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக