இரத்தமும்   சதையுமே 
 மனிதன்.   அவனிடம்,
சத்தமும் ,  யுத்தமும் ,
ஓய்வதோ   கடினம்!
அணுவை   பிளந்து ,
ஆய்வுகள்  செய்து,
ஆக்கம்    பல
கண்டான் மனிதன்!
அதனால்
தன் மெய்  மறந்து, 
உண்மை  மறைத்து,
வன்மை  பொதித்து,
நன்மை  சிதைத்தான்
மனிதன்! 
விளைவு 
தூக்கம் தொலைத்து,
தூக்கம் தொலைத்து,
ஊக்கம்   இளைத்து,
துக்கம்   நிலைத்து,
தொலைந்தே போவான்
ஒரு நாள்!
ஒரு நாள்!
======================
         இவன்>>   > பிறைத்தமிழன்
மனிதனின் ஆற்றலும், விஞ்ஞானமும் கண்டுபிடிப்பும் ..எத்தகைய நன்மையை மனிதனுக்கு தருகிறதோ..அதை விட தீமையை நோக்கி மனிதன் சென்றுகொண்டிருக்கிறான் என்பதை நண்பர் பிறைத்தமிழன் "மனிதன்" என்ற தலைப்பில் நினைவு கூர்ந்திருப்பது..என்னை சிந்திக்க வைத்தது..அவரது சிந்தனை தொடரட்டும்..
பதிலளிநீக்கு