மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 14 ஜனவரி, 2012

வெற்றிகளும் , விருதுகளும்


 

            
                                           உழவன் வாழ்க  

   வான் அழ  மண் சிரிக்கும் ,
   மண்  செழிக்க  மனு  சிறக்கும்  !
   ஊன்  தர  உழவு  செய்யும் ,
   நான் போற்றும்  நல்    உழவன்  வாழ்க  !
   மழையில்   நனைந்து ,
   வெயிலில் உலர்ந்த போதும் ,
   கூன்  விழுந்து , குடல்  சிறுத்து , வறுமை
   குப்புறத்  தள்ளிய போதும் ,
   தேகம்   உருக்கி , த்யாகம்  நிகழ்த்தி ,
   முப் போகம்  பெருக்கிடும்  தமிழா
   இவ் வுலகம்  உய்யுது  உன்னத மிக்க
   உயரிய தொழிலாம்  உன்தன்  உழவால் !
   உழவனும் ,தமிழனும்  ஒன்று  ! இதை
   உலகம்  உறக்கச்  சொல்லனும்  என்று
   உழவுக்கான  தொழிலுக்கே  வந்தனை  செய்வோம் ,
   உழவற்ற  தேசத்தை  நிந்தனை  செய்வோம் !

             வெற்றிகளும் ,    விருதுகளும் 
            விழாக்களாய்   வியாபித்திருக்கும்  சமூகத்தில் 
             வலிகளையும் , வடுக்களையும்  சுமந்து கொண்டு 
             வாய்க்காலும் , வரப்புமாய்   வகைப்படுத்தி , 
             வயல் வெளியெங்கும்   வாழ்வாதாரப் படுத்தும் 
             வண்ணத்தமிழ்    உழவன்  
             விண்ணைத்தொடும்  சிறப்புடன்                     
              வாழ்க !வாழ்க!! வாழ்கவே !!!
                எனச் சூளுரைக்கும் பிறைத்தமிழனின் 
                உலகனைத்  தமிழர்களுக்கு உளமார்ந்த , 
                உழவர்  திருநாள்  வாழ்த்துக்கள் !!!
-------------------------------------------------------------------------------------           

                          இவன்  >  >> பிறைத்தமிழன்                    

சனி, 31 டிசம்பர், 2011

* உணர்வை கூர் தீட்டி *


   இயற்கைப்  பேரிடர்  அற்ற 
   இரண்டாயிரத்துப்  பன்னிரண்டு
   இனிதே  துவங்கட்டும்  ! 
   இகத்திலுள்ள  எல்லா  உயிர்களும்
   இன்புற்று  வாழட்டும்  !! 
                         உறக்கம்  திரையிட்டு  
                         உணர்வை  கூர் தீட்டி
   இரும்புத்  தடம் பதித்து  எழுந்து வரும்  

   இளைஞர்களால்
   இந்திய  தேசம்  ஈடு  

   இணையற்று  ஒளிரட்டும்  !!! 
                      என்றெண்ணிய  பிறைத்தமிழனின்  
   இனிய
                       புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்  .... 
-------------------------------------------------------------------------------
    இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

டிசம்பர் " 26 " 2004



கண்ணீர் வடு

சொல்லாமல் தாக்கிய சுனாமி பேரலையே..நீ
கொல்லாமல் விட்டு சென்றது  
கொடுமை மிகு நினைவுகளே !
கோடிக்கரம்..தொட்டு துடைத்திட்ட போதிலும், 
விழி வடித்த கண்ணீர் வடு பெற்றுப்போனதே ! 
கோட்டை கொத்தளங்கள் ..கொட்டி சாய்ந்தாலும், 
ஓட்டை உடைசல்கள் ..உயிர் வாழ போதுமே !
ஆண்டுதோறும்  மீண்டும் ,மீண்டும் 
நினைவுறா  வரம் வேண்டி !
இனி ஒரு இருபத்தாறு இல்லாத டிசம்பராய்,
தனி ஒரு தினசரி தயார் செய் மானிடனே ! 
உயிரற்ற மனிதக்குவியலை 
ஒற்றைச்ச்சமாதியிட்ட, ஓங்கார பேரலையே ! 
உனக்கு கட்டளையிட்டவனே.. 
எங்கள் கண்ணீரை துடைக்க வேண்டும் !
அடைக்கலம் புக வழியில்லை ! 
ஆலயங்கள் போத வில்லை ! 
ஆகாயம்  பார்த்தும் பயனில்லை !
ஆறா துயரின்னும் தீரவில்லை !
இனிய வருடம் தொடங்க வேண்டும் !
இன்பம் இதயத்தை வருட வேண்டும் !
இறைவனே ...உன் துணை வேண்டும்  ! 
என நனைந்த  இமைகளுடன் ,
நான் >> பிறைத்தமிழன் ...


ஞாயிறு, 6 நவம்பர், 2011

இரத்தமோ ,மாமிசமோ ,


பசி ,உறக்கம்  அற்றவனும் ,
பால்  பாகுபாடுகளுக்கு  
அப்பார்ப்பட்டவனும்
யாரையும்  பெறாத ,
யாராலும்  பெற்றெடுக்கப்  படாத  
தனித்தவனும் ,எத் தேவையும்  அற்றவனும் ,
எல்லோருடைய  தேவைகளையும்
பூர்த்தி  செய்பவனும்  ஆகிய 
எல்லாம்  வல்ல  அல்லாஹ்வுக்கு
நாம் அறுத்து  பலியிடும்  
பிராணியின்   இரத்தமோ ,
மாமிசமோ  சென்றடைவதுமில்லை ,
அதன் மீது  இறைவனுக்கு  
எத் தேவையுமில்லை ! 
இதன்மூலம்  மனிதனின் உள்ளம்  
தியாகத்தை  உணரவும் ,
தியாகங்கள்  செய்யவும் ,
தியாக  நாளை  நினைவு  கூறவுமே !
மீண்டும்  ஒருமுறை  இவ்வுலகம்  
கட்டமைக்கப்பட்டு  அதில்..மனித  இனம்  
தோற்றுவிக்கப்ப்படுமாயின்  அப்போதும்..
நிலைத்து  நிற்கும்  தியாகம்  
நிகழ்ந்த  நாள்  இன்று !இப்ராஹீம்  நபியின்  
கடினமிக்க   இச்செயலை ..
கருணை  மிக்க  இறைவனால்..
ஏற்றுக்கொள்ளப்பட்ட  நாள்  இன்று !
மனித  இனம்  உள்ள வரை  
மாறாது  நிலைத்திருக்கும் !
அளப்பரிய  தியாகத்தை  
நினைவு கூறும்  மக்களுக்கு ,
என்  இதயம்  கனிந்த  
தியாகத்திருநாள்  வாழ்த்துக்கள் !!!
--------------------------------------------------------------------------------------
இவன்  >>  >> பிறைத்தமிழன்
 

சனி, 1 அக்டோபர், 2011

" உன்னைச் சுமந்த கால்"

 உன்னைச் சுமந்த கால் 
        கடந்து வந்த பாதையை  
        கருத்தில் கொள்ளாதவனுக்கு ,
        செல்ல  வேண்டிய   பாதை  

        சிந்தையில்  நிற்காது ! 

        உன்னைச் சுமந்த கால்களையே 

        சுமக்க  இயலாதபோது ,
        நீ சுமந்த பாவத்தை  

       பிறர்  தலையில்  சுமத்தாதே  !
       உண்மையை   நேசிக்கின்ற
       ஒழுக்கவாதியும் ,
       சில்லறையை  நேசிக்கின்ற  

       செல்வந்தனும்   ஒன்றல்ல !
 
       உடலை  நேசிக்கின்ற  

       ஒப்பனைவாதியும் ,
       உழைப்பை  நேசித்து  

       உயர்வைத் தொட்டவனும்  ஒன்றல்ல !

       உறவுகளை   நேசித்து   

       உயிராய்   மதிப்பவனும்  ,
       உணவை  நேசித்து  

       உறக்கத்தில்  ஆழ்பவனும்  ஒன்றல்ல !

       மாறாத  உண்மை  நிகழ்கின்ற

       மரணம்  சம்பவிக்கும்  நாளன்று ,
       மனிதனைத்  தின்ன  மண் உண்டு  அவன்
       மனசாச்சியை  தின்ன என்ன உண்டு  ?

 
       பிறைத்தமிழன்  பேச்சின் பொருள்கொண்டு !
       பேதங்கள் நீங்கும்  வழிகண்டு !
       பேருவகை கொள்வோம்  
       பிணி வென்று  .............. !!!!!
==================================================
       இவன்  >>> பிறைத் தமிழன் <<< :~----

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

காணிக்கையாக்குகிறேன்



           இகத்தோர்யாவருக்கும்                       
  1, ஓரறிவுள்ள  தாதுக்களுக்கும் ,

  2,ஈர றிவுள்ள  தாவரங்களுக்கும் , 

  3,மூன்றரிவுள்ள ஊர்வன்க்களுக்கும் ,

  4,நான்கறிவுள்ள  பறவைகளுக்கும் ,
               5,ஐந்தறிவு ள்ள மிருகங்களுக்கும்
   6, ஆரறிவுள்ள  மனிதர்களுக்கும் ,
  எவன்இறைவனோ.......!
  அவனையே துதித்தவனாக ......!
  இகத்தோர்  யாவர்க்கும் 
  இதயம் கனிந்த  ஈகைத்திருநாள் 
  வாழ்த்துக்களை                       
  காணிக்கை யாக்குகிறேன்...............!   ====================================================
                                       இவன் >>>  பிறைத்தமிழன்

சனி, 27 ஆகஸ்ட், 2011

" ஈகை நிறைந்த இதயத்தால் "


ஓசை  மிகு  உலகிலே     
ஆசை  நிறை  மனிதனின்  

மாறா என்றும்   உறவுகள்     
மறக்க  வொன்னா  நினைவுடன்  

மாநபியின்  வழியினில் 
மகத்துவமிக்க  நோன்பினால்  
      
வானவர்கள்  சோபனம்  
வந்திறங்கும்   இரவது  
                                                           
                                      
வாய்க்கப்பெற்ற   மாதமாம்
வண்ணமிகு  ரமளானும்

வந்ததுபோல்  சென்றதே 
வல்லோனின்   கொடை  யதே 
                       
மாநபியின்   வழியிலே  
மகோன்னத   மா   மறையினால் 

மனிதன்   பெற்ற   படிப் பிணை
மா  நிலமெங்கும்  நிலைக்கவே

ஈகை  நிறைந்த   இதயத்தால் 
                                              ஈந்து  சேவை செய்யவதில்                                                                              
இகம்  சிறக்க   வேண்டுமாய் 
இறையோனை  வேண்டினேன்  
                                                                                                              
முகமன்   கூறி   முதலிலே
முழு மையான  மனதுடனே


அருளாளன்    கருணையினால்
அகம்   மகிழ்ந்த   நிலையிலே 

ஆனந்தக்   களிப்பிலே
அரவணைத்து  அன்பொழுக 

அனைவருக்கும்   உறைத்திடுவோம்
அழகிய  பெருநாள்    வாழ்த்  ததை
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிறைத்தமிழனின்   பிரியம்    நிறைந்த 
நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் !
-------------------------------------------------------------------
இவன்   >>  >>  பிறைத்தமிழன்