மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 3 ஆகஸ்ட், 2011

" அமுதத்தமிழ் "


                                 மனிதனாய்  பிறந்தேன்   புவியில் 
                                 தாயை   அறிந்தேன்   -   தமிழில் !
                                 முத்தம்  பொழிந்தால்     முதலில்  
                                 முழு  மொழி  தந்தாள் --  தமிழில் !

          அன்னையின்  தாலாட்டு,
          அழகு  தமிழ் !

         தந்தையின்வழி ,  
         தலைமுறைத்  தமிழ் !

         தலைவன்  பாராட்டு
         தத்துவ  தமிழ் !

         காதலில்  பிறக்கும்,
         கவிதை   தமிழ் !

         மனைவி   சொல் ,
         மந்திரத்    தமிழ் !

         மக்கட்  செல்வம்
         மகிழ்ச்சித்  தமிழ் !

         இரவில்    உலவும்,
         நிலவும்    தமிழ் !

         இருளை  கிழிக்கும்,
         ஒளியும்   தமிழ் !

         இளங்   காலை,
         இசைக்கும்    தமிழ் !

         இனிதாய்   பிறக்கும்,
         பூபாளத்   தமிழ் !

===========================================================================
                 
                    மேகம்  கண்டேன்  விண்ணில் 
                    அது  மின்னளிடுதே  தமிழில் 

                   காற்று  வீசும்     திசையில்
 மழை  

                   கனிந்து  பெய்யுதே   தமிழில் 


                   மேனி   நனைந்தால்  மழையில் 
                   மெல்லக்   குளிருமே   தமிழில் 

                  மலரின்   மகரந்தம்  என்  விரலில்
                  மயக்கின்ற   மனமோ  தமிழில்

                  மலையின்  முகடுகள்  பனியில் 
                  மாறிடும்  அருவியாய்  தமிழில் 

                  நதியின்  சீற்றம்  இரு கரையில் 
                  நானிலம்   செழிக்கும்  தமிழில் 

                  கடல்சென்   றடைந்திடும்  நதியில் 
                  தாலாட்டும்  அலைகள்  தமிழில் 

                 தவழ்ந்து  புரண்டேன்  அதனில் 
                 என்னைத்  தழுவும்  நுரைகள்  தமிழில் 

                 செல்  பிளந்த  சிப்பியின்   வயிற்றில்
                 சொல்  விளங்கும்  முத்தே  தமிழில்

=================================================


                  அன்னைத் தமிழ்     முதத் தமிழ்,
                               ட்ச்சித்தமிழ்           ளும் தமிழ் ,

                 இ ன்பத்தமிழ்          லக்கியத் தமிழ் ,
                  ஈ ந்து  மகிழும்       ஈகைத்  தமிழ் ,
                  உ ள்ளம்  கவர்       உரைக்கும்  தமிழ் ,
                         றுகண்டு            ஊ டருக்கும்  தமிழ்,
                  எ ங்கெங்கும்        எழுத்ச்சித் தமிழ், 
                  ஏ ற்றமிகு              ஏழிசைத்   தமிழ், 
                         ம் புலனில்             க்கியத்  தமிழ் ,
                  ஒ ப்பற்று                ளிரும்  தமிழ் ,
                         ங்கார                   சைத்    தமிழ்,
                  ஒளவியமற்ற        வைத்  தமிழ் ,
            ஃ,    இது               ஆயுதத் தமிழ்  !!!.......
==========================================================================================
                                என் தமிழ் , இனிய தமிழ் , இது பிரியமுடன்
                                பிறைத்தமிழன் பேசும் தமிழ் !
                                கல்தோன்றி ,  மண்தோன்றா , காலத்திற்கு
                                முன் தோன்றிய   மூத்த தமிழ் , முத்தமிழ் ,
                                செம்மொழி  யென  சீர் பெற்ற  செந்தமிழ் !!!.....
===============================================================
                                            இவன்    >>  பிறைத்தமிழன்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

" நீர்த்துப் போகும் நிமிடம் வந்தால் "



ஏழை வீட்டில் எரியும் அடுப்பில்
எந்நாளும் வறுமை
நாளைப்   பொழுதை நகர்த்திச்  செல்லும்
நம்பிக்கையில் வெறுமை !

வீரம் பேசி பொழுதை  கழிக்கும்
கோழை  மனதில் கொண்டதால்   பெருமை,
வெற்றி  வந்து  சேர்த்தாலும்
விலகாது   வறுமை !

இக்கால இசைக்கு இலக்கியம் வடிக்கும்  கவி  
எடுத்துச்  சொல்லும்  இலக்கணச் சிறுமை !   
பொங்கும் பொருள் தங்கும்  அவர்
தமிழ்  சிந்தைக்கோ பெரும்  வறுமை !

கலி  கால  சிறப்பை   காட்சி  வடிக்கும்
திரையுலகச் சிற்ப்பிகள்  தேர்ந்தெடுக்கும் புதுமை ,   
அதில்   நாகரீக  மங்கையின்  நளினமற்ற 
நாட்டியம்   செல்லும்  வறுமை !

வெள்ளித்திரையின் வெளிச்சம் பட
ஒட்டுத்துணிக்குள் உடலை திணித்து
துட்டுக்கென  தொலைத்திட தயங்கா
வெட்கக் கேட்டுக்கு விலையாகும் பெண்மை !

ஆத்திரம்   பேசும் அதிகார  வர்க்கம் 
சேர்த்து  வைத்த   செல்வக்குவியல்
நீர்த்துப் போகும்  நிமிடம் வந்தால்
நினைத்துப்   பார்   நிலைக்குமா ?இந்த   பகுமை !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முட்டாள்கள் கூட   பணம்   சன்பாதிக்கலாம் !  அதை ,
ஒரு  அறிவாளியால்தான்   காப்பாற்ற  முடியும்   இருந்தும்
எந்த  ஒரு  அறிவாளியும்   இறுதியில்  தன்னோடு
எடுத்துச்செல்ல    முடியவே   முடியாது    எனவே,
மனிதா   உன்  தேவைக்கு   மீறி  சேர்த்து  வைக்காதே !
ஏழையை  குறிவைத்து  உன்  சேவையை   துவங்கு
அப்போது   உன்  பிறவிக்கான   பொருள்   புரியும் !!!......
=============================================================
                              இவன் >>> பிறைத்தமிழன் <<<

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

" பகலெல்லாம் பசித்திருந்து "


"  மனிதன்  தறிகெட்டுப் போகாமல்  "
 ==========================================================

நீரை  ஆதாரமாகக்கொண்டது  "  "இரத்தம் "
இரத்தத்தை ஏற்றம் செய்யக்கூடிய  இதயம் அமையப் பெற்ற
இரத்தமும் ,சதையுமாக உள்ள    எந்த ஒரு ஜீவராசி யும்
உண்ணாமல் ,பருகாமல் உயிர் வாழ்வதில்லை

உன்னதமிக்க மனித வாழ்வியல் தத்துவத்தை வகுத்த இறைவன்
கண்ணியமிக்க  மாதமாம்  ரமளானில்  மாண்புக்குரிய  நோன்பை
மனித குலத்திற்கு விதியாக்கி அதன் மூலம்  பசியை உணரச்செய்து
உள்ளத்தில்  ஈகையை  மலரச்செய்து  ஏழை  எளிய மற்றும்
வறுமையிலும் வாய்திறந்து கேளா வறியவர்களை கண்டறிந்து
இதயம் குளிர  ஈந்து மகிழ வகைசெய்யும் புனிதமிக்க மாதம்
ராமலானாகும் !

மனித உடல்கூறு  பற்றிய  மருத்துவம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய
பல   அற்புதத்தை   நோன்பானது  நோன்பாளியின்  உடலில்
ஏற்ப்படுத்துகிறது ! 
எவர் ஒருவர்   ரமளானின்  மாதத்தை  அடைகின்றாரோ
அவர்  அப்படியே  அதில் பொருந்திக் கொள்ள வேண்டும்

கல் உடைப்போர் ,மூட்டை சுமப்போர் ,பாரவண்டி இழுப்போர் ,
மரம் ஏறுவோர், மலை ஏறுவோர் ,சுரங்கம்  தோண்டுவோர் ,
சாலைத் தொழிலாளி ,  கட்டிடத்தொழிலாளி , வியாபாரி  என 

எந்த  நிலையிளிலும்  அதற்க்குள்  இருந்தே  நோன்பை 
நோற்க  வேண்டும்       கால  நிர்ணயப்படி
உண்ணாமல் , பருகாமல் , தீயதை 
பேசாமல் , கேளாமல் , பாராமல்

இரவெல்லாம்   விழித்திருந்து   இறைவனைத் தொழுது ,
பகலெல்லாம்   பசித்திருந்து  தொடர்  நோன்பை  பேணுகின்ற
நோன்பாளியின்   உடலில் 
இயற்கையாக  இரசாயன  மாற்றம்  ஏற்ப்பட்டு
முற்றிலுமாக  இரத்தம்  புதுப்பிக்கப்படுகிறது !

மனிதன்  தரிகேட்டுப் போகாமல்  
தரமிக்க  வாழ்வுக்கான தத்துவத்தை
பறை சாற்றுகின்ற   பொருள்பொதிந்த , அருள்நிறைந்த ,
புனிதமிக்க   ரமலானை  வரவேற்று   
நோன்பிருந்து  இறைவனின்  அருட் பொருத்தத்  தைப்  பெறுவோமாக
வஸ்ஸலாம்   

                                >>>> இவன்   > பிறைத்தமிழன்

ஞாயிறு, 31 ஜூலை, 2011

" பிதற்றல்கள் "

 கனவுகளையும் , கவிதைகளையும் 
சுகமாய்ச்  சுமந்து  கொண்டிருந்த  நான்

இளங்காலைப் பொழுதுகளின்
இனிய   கீதங்களை

என்  செவி  நனைத்த  இனிமையோடு
நான்  சேர்ந்திசையாய்  கேட்டபோது

சின்னச் சின்ன  புன்னகைகளையும் ,
பெரிய  பெரிய   கோளங்களையும்,

 என்  சிந்தை  நிறை
சேர்த்து வைத்திருக்கும் நான்

மரபென்றும் ,புதிதென்றும்
மனசுக்கு  சிறகு  கட்டி

கண்ணீரை ,   முத்துக்களாய்   மாற்றி ,
கடல்நீரை   கையுக்குள்   அடக்கி ,

கனவுகளை   காட்சிப் படுத்தி ,
கவிதைகள்    ஆயிரம்   வடித்தேன்

என்ன பயன் ?
இவையெல்லாம் 

பின்னுக்கு  தள்ள  வேண்டிய
பிதற்றல்க லாம் !          ஆம்          
 

இலக்கிய   எஜமானர்கள் ,
எழுத்துலக    பிரம்மாக்கள் ,

சிந்தனையில்   சில்லறை  பார்த்து,
சிகரத்தை தொட்டவர்கள்   கண்  முன்னே

ஏழை  கவிஞனின்  எழுத்துக்கள்
எப்போதும்   பிதற்றல்களே ....!!!
___________________________________________
     இவன் >>>  பிறைத்தமிழன்  <<<

வியாழன், 28 ஜூலை, 2011

படிப்பை பயனுரச்செய் மனிதா !!!....


வளமான காலத்தில்  நண்பர்கள்
நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள் !

வருமைக்காலத்தில்  நண்பர்களை
நாம் தெரிந்து கொள்கிறோம் ! !

எளிய வாழ்வைப்பற்றி
பேசுவதற்கும் ,எழுதுவதற்கும் யாரும்
தயங்குவதில்லை !

எளியமுறையில் வாழ்வதற்கு மட்டும் 
தயங்குகிறோம் !

 மறுப்பதர்க்காகவோ ,  குழப்புவதர்க்காகவோ
படிக்காதே !

நம்புவதர்க்காகவோ , தலையாட்டுவதர்க்காகவோ
படிக்காதே !

உரையாற்றுவதர்க்காகவோ , உபதேசம் செய்யவோ
படிக்காதே !

சிந்திப்பதற்கும் , சீர்தூக்கிப்  பார்க்கவுமே
படிப்பை பயனுரச்செய்  மனிதா !!!....
__________________________________________________________________
இவன் >>  பிறைத்தமிழன் <<<

திங்கள், 25 ஜூலை, 2011

" நிலை யற்ற மாந்தருக்கு "


~~~~இறை வணக்கம் ~~~~
எப்படி  உணவளிக்க 
இறைவனால் பொறுப்பேற்றுக் கொள்ளப்படாத 
எந்த  ஒரு   ஜீவராசியும்  இவ்வுலகில்  இல்லையோ,
அப்படியே  யாதொன்றும்  அவனன்றி  நிகழ்வதுமில்லை ,
யாராலும்   நிகழ்த்தப் படுவதுமில்லை !

சூரியக் குடும்பத்தில்  அங்கம்  வகிக்கின்ற  புவி  உள்ளிட்
அனைத்து  கோள்களையும் படைத்து  பரிபாலிக்கின்ற இறைவனே   
அவற்றில்  ஜீவனற்ற வைகளையும் ,
ஜீவனுள்ள வைகளையும் ,
ஜீவ  ஆதாரங்களையும் ,
அதற்க்கான  கால  நிர்ணயங்களையும்
வகுத்தவனாக  இருக்கின்றான்  !

இவை அணைத்தும் காலவரையின்றி
இறைவனை துதித்துக்கொண்டுதான் இருக்கிறது
மனிதனுக்கான  வணக்கம் மட்டும் நேரம் குறிப்பிடப்பட்டு
வரைமுறை படுத்தப்பட்ட வணக்கமாக
"தொழுகை"  அவன் மீது   விதியாக்கப் பட்டுள்ளது !

ஆறாம்  அறிவு  அமையப்பற்ற  மனிதன்  அதைக்கொண்டு
ஆற்றலின்  உச்சத்தை  தொட்டுவிட்ட போதும்
நிச்சயமாக  மனிதன்  ஒரு  படைப்பினம்தான் !

தவிர  படைப்பாளி   அல்ல
இந்த  உண்மையை  மறுக்க வில்லை  என்றாலும்
மறந்த  நிலையில்  மாச்சரியங்களில்
புதைந்து   கொண்டிருக்கிறான்  மனிதன்
எவன்   ஒருவன்  தன்னை  படைத்தவனை  உளப்பூர்வமாக தொழுகின்றானோ
அந்த  தொழுகையானது   அவனை   மானக்கேடான 
விசயங்களில்  இருந்து  முற்றிலுமாக   பாதுகாத்து 
வரைமுறைப்  படுத்தப்பட்ட  வாழ்கையை   வழங்குகிறது !

இவ்வுலகில்  அழகாக  தெரியப்பெற்ற  சிற்றின்பங்களை
மிக  அருகாக  உணர்ந்து  அனுபவிக்கின்ற   மனிதன்
இறைவனையும் , அவன்  கட்டளைகளையும் , மறுமை பற்றிய     எச்சரிக்கைகளையும்  இறைதூதர்  மூலம்   செய்தியாக  பெற்றவை
மிகத்தொலைவாகவும் ,  பழைமையாகவும்  தோன்றுமாயின்
மனித   ஆயுளின்   வரம்பை   மாற்றியமைக்க
முயர்ச்சிக்கின்றான்  என்றே  பொருளாகும்  
இருந்தும்
அவற்றில்  முறையாக   தோற்றுக்கொண்டே 
இருக்கின்றான்  மனிதன் !

இறைவனின்  மனிதத்  தலையீடு  இல்லாத
இயற்கைக்  கட்டமைப்புகள்  யாவும் 
 படைத்தவனின்  கட்டளைப்படி
இயங்குவதால்  அதன்  இயக்கத்திலேயே  
 இறைவணக்கத்தை  எடுத்து  இயம்பி
படைத்தவனை  தொழும்  பண்பை  பறைசாற்றுகிறது ! 

முன்னோர் ,  மூதாதயர் , 
உற்றார் , உறவினர் , உடன்பிறந்தோர் ,
தனைப் பெற்றோர் , தான்  பெற்றோர்  என
எத்தனையோ  உறவுகள்   கண்முன்னே  தன்னை  விட்டு  பிரிந்து
சென்று கொண்டிருப்பதை ஒவ் வொரு  நாளும்  சந்தித்துக்கொண்டிருக்கும்   மனிதன்
சிந்திக்க  மறந்தவை  என்ன ?  

  உலகில்   நிலை யற்ற  மாந்தருக்கு  நிகரற்ற  மறை  தந்த
இணையற்ற  இறைவனை  இன்றே   தொழுவாய்   மனிதா 
தரம் கொண்ட  மனிதன்   தறி கெட்டுப்  போகாமல், 
  தரணியில்     வாழவும் ,
சிரம்  தாழ்த்தி   தொழும்  சீரிய வணக்கத்தை 
சிரமேர்க்  கொள்வாயாக !
==========================================
:  இவன் >>  >> பிறைத்தமிழன்

ஞாயிறு, 3 ஜூலை, 2011

இமைகள் வடிக்குதே இரத்தத்தை கண்ணீராய் .......

                                                                                                                                                            
இமை வடிக்கும்   இரத்தக் கண்ணீர்
செல்வத்தில் சிறந்தவர்கள்
உள்ளத்தைச்  சுருக்கி ஒளித்தே வைப்பார்கள்

பள்ளத்தில் விழுந்துவிட்டால்
பக்கத்து உறவுகளை  பார்த்தே சிரிப்பார்கள்
வாழ்ந்து   கெட்டவர்கள்  வாழ்வில் நொந்தவர்கள்
வளமாய்  இருக்கயிலே  வந்து குவிந்தவர்கள்

கூட்டமாய் கூடி  கும்மாளமிட்டவர்கள் 
ஓட்டமாய் ஓடி  ஒழிந்தே கொண்டார்கள்
இவர்கள்  அற்றகுளத்து அருநீர்ப் பறவைகள்

செல்வத்தில்  சிறந்தவர்கள்  சிரிப்பைக்காட்டி
வெறுப்பை உமில்வதர்க்கே
உள்ளத்தை  சுருக்கி  ஒளித்தே வைப்பார்கள்

எதிர்க்கும்  திராணியை  இழந்து  நிற்கின்ற
ஏழை உறவுகளை எட்டி உதைத்து ஏளனமே செய்வார்கள்
சொத்தும் ,சுகமும் தான்   சொந்தத்தின் அடையாளமோ  ?
பணமும்  பகட்டும் தான்  பாசத்தின்  எல்லைகளோ  ?

கோடிகளில்   புரண்டால்  தான்  கூடவே   பிறந்தவளாம்
தாலியே  மிஞ்சாத  தரித்திரம்  உள்ள  மகள்  உனக்கு
போலியாய்  வாழுகின்ற உடன் பிறந்தவர்கள்  வேனுமோடி ?

                                                                                                                                                         
வலுவிலாராயினும்  வையகம்  போற்றி  !
இழிவுடையோ ராயினும் இனத்தார் போற்றி  ! !
வாழ்வாங்கு வாழ்வாரே  வசதியை  காட்டி ! ! !
                          தவிர                                           
ஈனமே  இருந்திடினும் இன்பமே  கண்டிடுவார் !
இப்படிப் பட்டவரே  இகம் போற்றும்  உறவினராம் ! !
                                என்று                                            
இமைகள்  வடிக்குதே  இரத்தத்தை  கண்ணீராய்
.......
                                                                                                                                                        >>  இவன்   >>  "பிறைத்தமிழன் "