மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 10 பிப்ரவரி, 2011

" புது மழை "

        
          

          புழுதி    மண்      மீது            விழுந்த
          புத்தம் " புது   மழை "     நீர்த்துளியே!

          உன்    பொன்    மாரிப்  பொலிவால்
          பொன்   விளைவித்த  புன்  சிரிப்பே!!

          கால    இடுக்கின்கால்   நீ    கலைந்திடின்
          விலைபோகா  உலகு  வெறும்  இருட்டே!!!
          =======================================                                
                      இவன் ..>>>பிறைத்தமிழன்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

மண்ணோடு பெண் மகவை,

  *பெண் *
==========
உள்ளத்தால் வதைபட்டு 
உடலால் சிதைபட்டு

உருவாக்கும் சந்ததியை 
பெண்ணென்று கண்டுவிட்டால்

பேரிழப்பு  வந்ததென்று
பெருங் கவலை கொண்டவர்கள் 

சிசுக் கொலை செய்துவிடும் 
சேதிகளும்  கேட்டீரோ ? அன்று 

மண்ணோடு  பெண் மகவை,
மகிழ்வோடு புதைத்திட்ட !

மாபாவச் செயல்  தடுத்த ,
மாநபிகள் சொல்  விளங்கி 

நவீனம் கண்டவர்கள் ,
நாகரீகம் கொண்டவர்கள் 

நானிலம் போற்றுகின்ற ,
நல்லுணர்வு பெற்றனரா ?  இன்று 
___________________================_________________
ஆணுக்குப் பெண் நிகரில்லை !
ஆதலால் ,
பெண் ஒன்றும்    அடிமையில்லை !!

வடிவம்     மாறுதலால் ,
 வனப்புகல்  உடையவள்   " பெண் "

வலிமை குறை வதனால்,
 வாஞ்சைக்கு உரியவள் " பெண் "

மானுடம் செளிக்க வல்ல,
 மா தவ மங்கையவள் " பெண் "

வெறும் போகப் பொருளல்ல  " பெண் "
போற்றிப் *பொன்* படுத்து மனிதா =நின் !!!
==================================================================
இவன் >>>பிறைத்தமிழன்

சனி, 5 பிப்ரவரி, 2011

கரும்பளிங்கிக் கல்லறையில்,

==============================================================
  கரும்பளிங்கிக் கல்லறையில்
  இளஞ்சிவப்பு மலர்    பொதித்து !
               தீட்டப்பட்ட வாசகங்கள்

             தோற்றமும் ,      மறைவும் ,,
               தொடரும் கவிதையுடன் !

       உன்மீது  நான் கொண்ட காதல்
                                      பொய்யென்று
மண்மீது  காதல் நீ கொண்டாயோ ?

      என்னை மேகமாய்  சூழ்ந்தவள் ,                              
                                           இதயத்தில்
      மின்னலாய்  பாய்ந்தவள் .........!
  
          இல்லாதபோது   எனை ஏன் ?
    மரணம்    கொள்ளாது போனது ?
=============================================================        
                இவன்  >  ~:   பிறைத்தமிழன்  :~

வியாழன், 3 பிப்ரவரி, 2011

இருக்கு ஆனா இல்லை


அடைமழை !  அதனால்
வீட்டைச்சுற்றி  வெள்ளக்காடு
குடிக்க நீரின்றி !
குடியானவன்  கூரைநோக்கி
இருக்கு , ஆனா இல்லை !
மாசற்ற  நீர் !
தூசற்ற காற்று !!
கலப்பற்ற உணவு !!!
இருக்கு , ஆனா இல்லை ...
                      இவன் >> பிறைத்தமிழன்

புதன், 2 பிப்ரவரி, 2011

எருகும் சாம்பலும் ஏளைக்குடிசையில்




    கடலில்  பிறந்து  காற்றால்  தவழ்ந்து
   கரையில்  உரசும்  அலைகளைப் போல
   கவிதைகள்  நூறு  வடித்திடல்  வேண்டும் 
   அகல விரிந்து  பகலவன்  மறைக்கும்
   ஆல   நிழலில் அலுப்புத் தீர
   அயர்ந்து உறங்கிடல்  வேண்டும்
   மங்கள  நிலவில்  மங்கிய  ஒளியில்
   மங்கையின்  மடியில்  மலரும்  நினைவில்
   மழலை  வடிவில்  தவழ்திடல்  வேண்டும் 
   இரவின்  முடிவில்  எழுந்து  அமர்ந்தால்
   என்னைச்சுற்றி  பனித்துளி  படர்ந்த
   பச்சைப் புல்வெளி பளிச்சிடல் வேண்டும்
   தெளிர்ந்த  நீரில்  தெரியும்  தரையில்
   துள்ளிக்குதிக்கும் வெள்ளி மீனை கையில் அள்ளி
   மெல்லத்தமிழ்  சொல்லித்  தந்திடல்  வேண்டும்
   புழுதியற்ற  பொட்டக்காட்டில்  பூத்துக்குலுங்கும்
   புங்கை  மரத்தருகே  நெருஞ்சிச் செடியில்
   நித்தம்  ஒரு  குறிஞ்சிப்பூ  பூத்திடல்  வேண்டும்
   எள்ளும்  புண்ணாக்கும்  எருகும்  சாம்பலும்
   ஏழை  குடிசையிலே  பொன்னும்  மணியாக
   பொருள்மாறி  பொங்கிப்  பெருகிடல்  வேண்டும்
   இது நடக்குமா .>ஆயிரம்  >???????????????????????விகள்
            சிந்தனைக்கு  சிறகுகட்டி       
           செந்தமிழ்  மெருகூட்டி        
          வாழ்க்கையை   வண்ணம்தீட்டி
          வளரும்    தலைமுறை                 
          வாழவேண்டும்  நேர் கோட்டில் ============================இவன் >>>  பிறைத்தமிழன் 

வெள்ளி, 28 ஜனவரி, 2011

குமுறுகிற தேசமடா

                                                                                                                                                               
ஆயுதம் அணிகலனாம் ,
அதிகாரம் கேடயமாம் !
வன்முறைக்கு வாழ்வளித்து ,
வழிய உயிர்பறிக்கும் ,
உன்மத்தர் வாழுகின்ற
ஊனமுற்ற தேசமடா !

நெற்றி வியர்வைதனை
நிலத்திலே சொட்டியவன்,
உழைத்த பணத்தினிலே
ஒருகவளம்  உண்ணும்  முன்னே  ,
தட்டிப்  பறித்திடுவார் ,
தறுதலை  கூட்டமடா !

பாவப் பணம்   பறிக்க
பாலகர் தமை கடத்தி ,
பேரங்கள்  மிகப் பேசும்
பேடிகள்  நிறைந்துவிட்ட ,
கோரப் பிடிக்குள்ளே
குமுறுகிற தேசமடா !

காவி   உடை யணிந்து
கடவுளை  சாட்சி வைத்து ,
காமப் பசி   போக்க
கன்னியரை சீரழிக்கும் ,
புண்ணியர்கள்  வாழுகின்ற
போக்கற்ற   தேசமடா !

கூறுகெட்ட  மக்களிடம்
கேடுகெட்ட பொருளை விற்க ,
நூறு கட்ட  விளம்பரமும் ,
பேருக்கொரு  இலவசமும்  , அதில்
ஈறில்லை, பேனில்லை  என்றுசொல்லி
எக்கச்சக்க   கொல்லையடா !

முந்தாநாள்    வந்தவர்கள் 
முகவரி     அற்றவர்கள்  ,
முச்சந்தியில்  நின்றுகொண்டு
முழக்கங்கள்  இட்டவர்கள் , 
சாதிக்கொடி    பிடித்து ,
சமூகம்    சீரலிப்பாரடா !

ஆரம்பக்  கல்வியிலே
அரங்கேறும் அகுதக் கொள்ளை ,
உயர்  கல்விச் சாலையிலே
உச்சம்  பெற்று  போனதடா !
 
கொட்டிக்   கொடுத்துவிட்டு ,
பட்டம்வரை   படித்துவிட்டு ,
தட்டித்   தடுமாறி 
தள்ளாடி வரும்போது ,
குட்டிச்சுவரோரம்
கூடி நிற்கும் நண்பரடா  !

சொந்த   நாட்டினிலே ,
சுதந்திரமாய்  ரோட்டினிலே ,
வேலை தேடும் வேலையினை
ஒரு வேலையாய்   செய்யு கிற , 
வேலையில்லா வாலிபர்கள்
வேதனையில் வெட்டிவைத்த ,
                     இது
கல்வெட்டு காட்சியடா  இந்த
கல்வெட்டை திறந்து வைத்த ,
பிறைத்தமிழன் சாட்சியடா !!!
========================================================================
         இவன்   >::    பிறைத்தமிழன்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

""ஆசை துறந்தவனுக்கு அகிலமெதற்கு ""

       
          ஒரு   நாள் காலையில்,  என்றோ எழுதிய
                      கவிதை ஒன்றை    கையில்  எடுத்தேன்
          இதயம்  வருடும்  வரிகள்..  இமைக்க மறந்தேன்   
                      காலம்  மெல்ல  என்னை  கடந்து  சென்றது
 
         ஒரு வரி  என்னை  மின்சாரம்போல்  தாக்கியது 
                     மீண்டும் ,மீண்டும்  படிக்க  முயன்றேன்
          மனிதகுல   மீட்சிக்கான  விடை  அந்த
                    ஒற்றை  வரியில்  ஒளிந்து  கிடந்தது

         அந்தி    மாலையில்    அடிவானத்தில்
               அமிழ்ந்து  மறைந்த  பகல்,    காலம்  கரைவதை
      கண்முன்னே   உணர்த்திக்கொண்டிருந்தது
              இருந்தும்     எழ மனமில்லை ஏன் ?

                   பசுமரத்தாணிபோல்   பதிந்துவிட்ட  அந்த 
                  ஒற்றை  வரியை   மீண்டும்   உச்சரித்தேன்
                             """ஆசையோடு அன்புசெய் """
                 """எதுவும் உனது   * இறைவன் *  உள்பட"""

                  நெஞ்சுக்குழிக்குள்  நேற்று  எடுத்த
         மலைத்தேன்   மகரந்தம்   மாறாது
                     ஊற்றப்பட்டதற்க்கு    ஒப்பான   வரி 
         சுட்டரிக்கும்   சூரியன் போல்  சுடர்   விடும்
                    கண்களாய்    என்னருகே   மின்னியது

         கருவறை  தந்து ,   காத்து வளர்த்த  அன்னை
                     நான்   கண் திறக்கும்   முன்பிருந்தே
           கணக்கற்ற    அன்பைப்பொழிவதுபோல்
                     உணர்வுகள்     ஒருனிலைப்பட்டது
        இதயம்    இலவம் பஞ்சுபோல்   இலேசாகிப்போனது
                    அன்பு   என்ற காதல்  வயப்பட்டேன்

          நிரந்தர பகலும்,     நீங்காத வெளிச்சமும்,
                   அதிலிருந்து   பிரிந்து சேரும்    இரவும்,
         பிணியட்ற  ஓய்வும் , காலங்கள் உள்ளிட்ட
                    அனைத்தும்   என்வசப்பட்டது!!
         "::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::"
                "ஆசை துறந்தால் அகிலமுனக்கு "
                  இதை சொன்னவன் விட்ட வரி

        பிறைத்தமிழன் பிழை இன்றி தொட்ட வரி 
         ""ஆசை துறந்தவனுக்கு அகிலமெதற்கு ""
       ஆசையாய்  அன்பு செய் இறைவன் உள்பட
                             எல்லாம் உனது!!!!!!!!!
                                                                       இவன் >        :பிறைத்தமிழன்