மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 6 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013
சனி, 2 பிப்ரவரி, 2013
ஞாயிறு, 27 ஜனவரி, 2013
" கையூட்டு "
கையூட்டு
இயற்கை சிதைத்தவர்கள் !இதயம் சிறுத்தவர்கள்,
பூமியைப் பிளந்தவர்கள்,
பூகம்பம் விதைத்தவர்கள் !
நீர் நிலைகளெல்லாம்,
நிரவி விட்டவர்கள் -அதில்
மாடி வீடுகட்ட மணல்
கொள்ளை இட்டவர்கள் !
அதிகார வர்க்கங்களாய்,
அவனியில் நின்றவர்கள் !
சதிகார கூட்டணியில்,
சங்கமம் ஆனவர்கள் !
மரம் மரமாய்
வெட்டிச் சாய்த்தவர்கள்,
மழை வரமாய்
கேட்டு ஓய்ந்தவர்கள் !
அணுவைப் பிளந்து
அறிவைப் பதித்தவர்கள்,
மனுவை குளைத்து
மண்ணில் புதைப்பவர்கள் !
சாதியின் பெயராலே
சமூக அவல த்தை,
சாதனைப் பட்டியலில்
சமத்தாய் சேர்த்தவர்கள் !
கலாச் சாரத்தை
காலில் மிதித்தபடி ,
உலகத் தரத்தை
ஓடிப் பிடித்தவர்கள் !
காலச் சக்கரத்தை
கணினி மயமாக்கி ,
கடவுளே வந்தாலும்கையூட்டு கேட்பார்கள் !
==================================== >>> இவன் பிறைத்தமிழன் . <<<
சனி, 26 ஜனவரி, 2013
" என் பேனா "
ஆயிரம் கோடி அணுக்கள் உலவும்,
பின்னிப் பிணைந்த
நரம்புகள் தோறும்!
மின்னல் மேவிஉராய்ந்தது போலே,
அந்நிய ஸ்பரிசம்
ஆட்கொண்ட வேளை!
மெல்லிய இறகெனமேனியில் வருடி,
அள்ளிய கரங்கள்
ஆரத் தழுவின தாலே !
ஆறாம் அறிவும் அழிந்தது போலே ,
நானாக என்னை மீட்டு எடுக்க !
யாதொரு வழியும் தோனா நிலைதனை, தோற்றுவித்தவளின்
தொடரும் நினைவை !
தேனாய் இனிக்க திரும்பக்கேட்டேன்
என் பேனா முனையும் அவள்
பெயர் சொல்ல வில்லை !
===================================இவன் : பிறைத்தமிழன்
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
" தை" திருநாள்
தை முதல் நாளாய்
தமிழரின் திருநாளாய்
பொங்கல் வந்ததடி
புது வருடம் பிறந்ததடி
பொன்மாரி பொழிய லேயே
புது நெல்லும் விளைய லேயே
தண்ணீரை கான உழவன்
செந்நீரை வடித்த பின்னும்
கர்நாடகம் கை விரித்து
காவிரியை தான் தடுத்து
கல்லணை காய்ந்தபின்னும்
கடும் வறட்சி கண்டபின்னும்
தமிழரின் திருநாளாய்
பொங்கல் வந்ததடி
புது வருடம் பிறந்ததடி
பொன்மாரி பொழிய லேயே
புது நெல்லும் விளைய லேயே
தண்ணீரை கான உழவன்
செந்நீரை வடித்த பின்னும்
கர்நாடகம் கை விரித்து
காவிரியை தான் தடுத்து
கல்லணை காய்ந்தபின்னும்
கடும் வறட்சி கண்டபின்னும்
தை முதல் நாளாய்
தமிழரின் திருநாளாய்
பொங்கல் வந்ததடி
புது வருடம் பிறந்ததடி
தீ மூட்டா அடுப்பினிலே
தெருப்பூனை அடை காக்க
புளிச்சாணி பானை தனை
போட்டுடைத்த பின்னாலும்
ஏறு பூட்டி எள்ளு விதைக்கும்
ஏழை உழவனையும்
மாறுதட்டி மல்லுக்கட்டும்
கொடிய வறுமையினால்
காத்து வைத்த கால் குருனி
விதை நெல்லும்
சோத்துப்பானை சொன்னபடி
வெந்த பின்னும்
பொங்கல் வந்ததடி
புதுவருடம் பிறந்ததடி
தை முதல் நாளாய்
தமிழரின் திருநாளாய்
பொங்கல் வந்ததடி
புடவை வேட்டியுடன்
புதுப்பானை வேணுமடி
தித்திக்கும் செங்கரும்பாய்
தெவிட்டாத பொங்கலுமாய்
திக்கெல்லாம் வாழுகின்ற என்
தமிழினத்தார் கொண்டாட
பிறைத்தமிழன் வாழ்த்துக்கள் இன்று
பிரியமுடன் இங்கு பதியுதடி
===========================================================
>>> இவன் பிறைத்தமிழன்
திங்கள், 31 டிசம்பர், 2012
தினசரி கிழித்ததினால்
தினசரியும் தீர்ந்தது -அதனால்
இன்னொரு வருடத்தின்
இனிய முகவரி யாய்
ஜனவரியும் பிறந்தது
ரணங்கள் மறைந்தாலும்
வடுக்கள் வலிக்கிறது
இனியாவது
புரட்சி செய்யாது
புதுமைகள் நிகழ
வறட்சி இல்லாத
வான் மழை பொழியட்டும்
வக்கிரங்கள் இல்லாத
வர்க்கமாய் வாழ
வர்க்கமாய் வாழ
மனிதர்கள் பழகட்டும்
என -
2013- ஐ வரவேற்கும்
பிறைத்தமிழனின் பிரியமான குரல்
பெருமையுடன் பதியட்டும்
பேதமைகள் ஒழியட்டும் ...!!!
===============================================
இவன் >>> பிறைத்தமிழன் <<<
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)