மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

" தை" திருநாள்

    
       தை   முதல்   நாளாய்
                                     தமிழரின்     திருநாளாய்
       பொங்கல்  வந்ததடி
                                  புது வருடம்  பிறந்ததடி

      பொன்மாரி    பொழிய லேயே 
                   புது  நெல்லும்  விளைய லேயே
       தண்ணீரை   கான  உழவன்
                            செந்நீரை  வடித்த  பின்னும்   

       கர்நாடகம்   கை  விரித்து
                              காவிரியை   தான்  தடுத்து
       கல்லணை   காய்ந்தபின்னும்
                       கடும் வறட்சி கண்டபின்னும்

        தை    முதல்   நாளாய் 
                                 தமிழரின்      திருநாளாய்
         பொங்கல்   வந்ததடி
                                  புது வருடம்   பிறந்ததடி

        தீ   மூட்டா      அடுப்பினிலே
                         தெருப்பூனை   அடை  காக்க
        புளிச்சாணி     பானை தனை
                        போட்டுடைத்த  பின்னாலும்  

       ஏறு   பூட்டி எள்ளு விதைக்கும்
                                        ஏழை  உழவனையும்
           மாறுதட்டி     மல்லுக்கட்டும்
                           கொடிய     வறுமையினால்
      
            காத்து வைத்த  கால்  குருனி
                                              விதை    நெல்லும்
       சோத்துப்பானை     சொன்னபடி 
                                               வெந்த   பின்னும்

       பொங்கல்  வந்ததடி
                                  புதுவருடம்   பிறந்ததடி
       தை    முதல்   நாளாய்
                                  தமிழரின்   திருநாளாய் 

       பொங்கல்   வந்ததடி
                                     புடவை  வேட்டியுடன் 
                       புதுப்பானை    வேணுமடி

        தித்திக்கும்  செங்கரும்பாய்
        தெவிட்டாத   பொங்கலுமாய்
        திக்கெல்லாம்  வாழுகின்ற  என்
        தமிழினத்தார்  கொண்டாட
        பிறைத்தமிழன் வாழ்த்துக்கள்  இன்று
        பிரியமுடன்  இங்கு பதியுதடி 
===========================================================
       >>>  இவன்    பிறைத்தமிழன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக