மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

"சீதனம்"




பணத்திற்காக திருமணம்
செய்துகொண்டவனைப் போல்
ஒரு அயோக்கியனும் இல்லை ,

காதலுக்காக கல்யாணம்
செய்துகொண்டவனைப்போல்
ஒரு முட்டாளும் இல்லை ,

பணத்தையும் ,பகட்டையும்
நேசிப்பவன்-
செல்வத்தையும் ,செருக்கையுமே
தன் செல்ல மகளுக்கு
சீதனமாய் தருவான்....
==========================
இவன்:பிறைத்தமிழன் ..

சனி, 4 ஏப்ரல், 2020

"நீதி"


மனிதன் எப்பொழுதும்
தான் செய்த தவறுகளுக்கு
வக்கீலாகவும்,
பிறர் செய்த தவறுகளுக்கு
நீதிபதியாகவும்
இருக்கவே விரும்புகிறான்
எல்லாம் தெரிந்த மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெறியவில்லை
ஆம்-அவன் மனிதனாய்
வாழமட்டும் தெரியவில்லை..
============================
இவன்:பிறைத்தமிழன்.

"இழி நிலை"


இயற்கைச்சீற்றத்தின்
எத்தகைய கோபமும்
ஏழைகளின் மீதுதான்
விதியாக்கப்பட்டுள்ளது
நோயும்,பேயும்
நோகாமல் காசுபார்க்கும்
மருத்துவமும், மருத்துவனும்
இதில் ஏகபோக அங்கம்
இத்தனை இழிநிலைகளை
கடந்து  இயல்பாக
இந்ததேசத்தில் வாழவேண்டி
விழித்தே இருக்கிறேன்
விடியல்தான் வரவேயில்லை.
=========================
இவன்:பிறைத்தமிழன்.


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

"வறுமை"

வறுமையின் 
கொடுமைபற்றி
வாழ்ந்து உணர்ந்தவன்
வயிறுபுடைக்க 
உண்ணமாட்டான்
தான் உண்ணும் 
இன்னொரு பிடி 
உணவையும் 
பிறருக்கென ஈந்து
பேரின்பம் கொள்வான்....
====================
இவன்:பிறைத்தமிழன்.

புதன், 1 ஏப்ரல், 2020

"நம்பிக்கை"

"நம்பிக்கை"

நேசிப்பவர்கள் 
எல்லோரும்  நம்மோடு 
நிலையாக தங்கிவிட்டால்
நினைவின் மொழியும்,
பிரிவின் வலியும் தெரியாமலே போய்விடும்-எனவே
நம்பிக்கை நிறைந்த ஒருவர்
யாரிடமும் மண்டியிடுவதில்லை
எவரிடத்தும் 
கையேந்துவதும் இல்லை
தன்னைப் படைத்த
புகழுக்கு உரிய வல்லமை மிக்க
அல்லாஹ்வைத் தவிர....
===========================
இவன்:பிறைத்தமிழன்.

செவ்வாய், 31 மார்ச், 2020

"துரோகம்"


எனக்கு இழைக்கப்பட்ட 
துரோகங்களை எப்படியாவது 
மறக்க முயல்கிறேன்
இருந்தபோதும் யாரெல்லாம் 
என்னை தங்களின் நினைவில் சுமக்கின்றனரோ அவர்களை 
என் நெஞ்சத்தில்
நிஜமாக சுமக்கின்றேன்
புகழுக்குறியவனின் 
பொருத்தம் நாடியவனாக...
==============================
இவன்:பிறைத்தமிழன்...

ஞாயிறு, 29 மார்ச், 2020

"கொரோனா "


இயற்கை எனும் இன்பத்தை
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகத்தின்
மா பெறும் ஆற்றல்,
அவனின் கண்டுபிடிப்பு,

வியத்தகு விஞ்ஞானம்,
வின்முட்டிய தொழில் நுட்பம்,
விரிவான பாதுகாப்பு
எல்லாம் இப்போது எங்கே?

கொலைவெறியுடன்                கோரத்தாண்டவமாடும்
கொள்ளைநோய் கொரோனா
சொல்லும் சேதிதான் என்ன?

நிரந்தரமில்லா உயிர்களும்,
உயிரினங்களும் போலவே.....
அழிந்துவிட்ட இனத்தின் பட்டியலில்
இனி மனிதனுமா ? அய்யகோ.......

இறைவா எதிர் வரும் ரமளானுடைய
புனிதத்தின் பொருட்டால்
பூமி எங்கிலும் உள்ள மனித வர்கத்தை
காத்தருள் புரிவாய் ரஹ்மானே....
================================
இவன்;பிறைத்தமிழன்...