மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

           
                         ஆடயில் அழகைத்தேடதே '
பிறைத்தமிழன்


 -------------------------------------------------------------------------------------------------
                                                             
             சுருங்கச்சொல் , அதை 
                                                        சுவை படச்  சொல் !

            பசிக்கின்றவை  , புசிக்கின்றவரை
                                               தொடர்வதே  தேடுதல் !!

           கல்லை கடவுளாக்கின் !
                                      கடவுள் கல்ளேயாகும் !!

           கஸ்டங்களை எளிதாய் உள்வாங்கு !
               கடமைகளை புதிதாய் தான் துவங்கு !!

           இல்லைசொல் இல்லாமை பழகு !

                                எள்ளி நகையாடுதல்  விலகு !!

            உண்மைக்கும் உனக்கும் ,
                                          இடைவெளி வேண்டாம் !!

           உறவுக்கும் உனக்கும் ,
                                             நெருக்கடி வேண்டாம் !!

            உள்ளம் ஒருமுறை சுருங்கின் ,
                     உள்ளங்கை ஒருபோதும் விரியா !!

            ஆடையில்  அழகை 
தேடாதே !
            உடையால் உள்ளத்தை நொறுக்காதே !!

             முகத்திற்கு நேராக புகழாதே !
                       முது கிற்குப் பின்னால் இகழாதே !!

                 புல்லை வேண்டாத மாடுகள் உண்டு !
       புகழை வேண்டாத மனிதர்களே இல்லை !!

        சென்ற காலத்தை பற்றியே சிந்திப்பவன் ,
                        எதிர்காலத்தை இழந்துவிடுவான் !!

        தரித்திரத்திலும் சரித்திரம் படைப்பவனே ,
                                      பவித்திரத்தின் பாத்திரதாரி !!
--------------------------------------------------------------------------------------------------
           >>>   இவன் ; >  பிறைத்தமிழன் .

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

                 


                 " பொறுமை "
 --------------------------------------------------------------------------
        பொறுமையை போர்வையாக்கி ,
        பொறாமையை புறந்தள்ளி !

        பெருமையை பிறரிடம் கண்டு ,
        பெரு  வாழ்வை பேனிக்கொள்வாய் !!
------------------------------------------------------------------------------
                                 >>> இவன் > பிறைத்தமிழன் .

வியாழன், 6 பிப்ரவரி, 2014


     " நல்ல மழை "
மக்கள்நலம் பேனமறந்த
மத்தர்களும் குடிக்கிற கஞ்சிய
கொட்டிக் கவிழ்க்கிற
 கொடுங்கோலரும் ஆளும்நாட்டில் 
       ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ முன்பு   பஞ்சம் போக      
         நல்ல மழை  வேண்டினேன் ,     
                                    பின்பு   தஞ்சம் புக                               
   வழியின்றி தவிக்கின்றேன் !

            காரணம் குடை கிழிந்து ,
                      கூரை பிய்ந்து ,           
       குடிசை   மூழ்க , கொட்டித்தீர்த்த ,
        கோபக்கார  மழையினால் ,

      தஞ்சம் புக வழியின்றி தவிக்கிறேன் !!!
 ------------------------------------------------------------------------------------
பிரியமுடன் பிறைத்தமிழன் 

                   >>>>  இவன்  >>> பிறைத்தமிழன்  ....!!!   

புதன், 6 பிப்ரவரி, 2013

சீச் சீ இந்தப்பழம் புளிக்கும்

                  மாற்றான் மனைவி                    

  என் காதலை ,
  சொல்ல  நினைத்தேன் !
  அவள் கண்ணியமாய்  எனை -
  கொல்ல  நினைத்தாள் 
       தான் "இன்னொருவன் மனைவி " யென
              சீச்சீ
              இந்த பழம்   புளிக்கும்    என             

            நரியைப்போல்  நாகரீகமாய்
                               நடந்து  கொண்டேன் .
                                                     சரிதானே ?                                                                                                         
        ==================================                                                                             
                           >>> இவன்  : பிறைத்தமிழன் <<<                                                             

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

" உருகும் மெழுகு "

                      ஊரும் , உறவும் 
தூரத்தையும் ,  
தொலைவையும் அளந்து 
ஊரையும் , உறவையும் தீர்மானிக்கும் 
செல்வமும் , செழிப்பும்   இல்லாதவன் 
உருகும்  வெயிலில் ஏற்றப்பட்ட 
    ஒற்றை  மெழுகு  வர்த்தி ...!!!
====================================
         இவன்; பிறைத்தமிழன்....              

           

சனி, 2 பிப்ரவரி, 2013

"பாசமுள்ள,கடவுள்"


                          கடவுள்                              
               ஓரிறைக்  கொள்கை - என்        
               உயிர்த்  துடிப்பாக                           
               இல்லாது   இருந்தால் ,                
               பணம்      மட்டுமே    - என்             
               பாசமுள்ள,   கடவுளாக                 
               இருந்திருக்கும் !                             
 =====================================

                 இவன்>பிறைத்தமிழன் .         

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

" கையூட்டு "

    
                                          கையூட்டு                                 
இதயம்  சிறுத்தவர்கள்,
இயற்கை சிதைத்தவர்கள் ! 
பூமியைப் பிளந்தவர்கள்,
பூகம்பம் விதைத்தவர்கள் !
       நீர்   நிலைகளெல்லாம், 
       நிரவி  விட்டவர்கள் -அதில் 
       மாடி வீடுகட்ட மணல்                 
       கொள்ளை இட்டவர்கள் !
அதிகார  வர்க்கங்களாய்,
வனியில் நின்றவர்கள் !
சதிகார  கூட்டணியில்,
சங்கமம்  ஆனவர்கள் !
        மரம்  மரமாய்
        வெட்டிச்  சாய்த்தவர்கள்,
        மழை   வரமாய்
        கேட்டு  ஓய்ந்தவர்கள் !
அணுவைப்   பிளந்து    
றிவைப்  பதித்தவர்கள்,
மனுவை  குளைத்து
மண்ணில்  புதைப்பவர்கள் !
           சாதியின்   பெயராலே     
           சமூக   அவல த்தை,       
           சாதனைப் பட்டியலில்  
           சமத்தாய்  சேர்த்தவர்கள் !
லாச் சாரத்தை 
காலில்  மிதித்தபடி ,
லகத் தரத்தை  
ஓடிப்  பிடித்தவர்கள்  !
            காலச்  சக்கரத்தை
            கணினி மயமாக்கி ,
          கடவுளே   வந்தாலும்  
          கையூட்டு   கேட்பார்கள் !
====================================                                >>>  இவன்     பிறைத்தமிழன் .  <<<