மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 29 மார்ச், 2020

"கொரோனா "


இயற்கை எனும் இன்பத்தை
மீதமின்றி மேய்ந்துவிட்ட
மனித மிருகத்தின்
மா பெறும் ஆற்றல்,
அவனின் கண்டுபிடிப்பு,

வியத்தகு விஞ்ஞானம்,
வின்முட்டிய தொழில் நுட்பம்,
விரிவான பாதுகாப்பு
எல்லாம் இப்போது எங்கே?

கொலைவெறியுடன்                கோரத்தாண்டவமாடும்
கொள்ளைநோய் கொரோனா
சொல்லும் சேதிதான் என்ன?

நிரந்தரமில்லா உயிர்களும்,
உயிரினங்களும் போலவே.....
அழிந்துவிட்ட இனத்தின் பட்டியலில்
இனி மனிதனுமா ? அய்யகோ.......

இறைவா எதிர் வரும் ரமளானுடைய
புனிதத்தின் பொருட்டால்
பூமி எங்கிலும் உள்ள மனித வர்கத்தை
காத்தருள் புரிவாய் ரஹ்மானே....
================================
இவன்;பிறைத்தமிழன்...




வெள்ளி, 31 மே, 2019

"ஜககாத்"


நோன்பு காலங்களில் 
" ஜக்காத் ,சதக்கா " கொடுக்கும் 
கணவான்களே முதலாவதாக
கஷ்டத்தில் இருக்கும் 
உங்கள் உறவுகளை
கவனத்தில் கொள்க!  
அடுத்தது  
எவர் ஒருவர் வருமை 
வாட்டி வதைக்கின்ற போதும் 
வழியச்சென்று 
யாசகம் கேட்காமல் 
தன்னை படைத்தவனிடம் 
மட்டுமே கையேந்தி
                    கேட்கின்றார்களோ
அத்தகையவர்களை 
இனங்கண்டு 
உதவி செய்யுங்கள் 
அப்போது நிச்சயமாக  
அல்லாஹ்வின் கருணையும்,
அளப்பரிய நன்மைகளும் 
இரட்டிப்பாக   வந்து சேரும்
====================================
பிறைத்தமிழன்..

செவ்வாய், 28 மே, 2019

வானங்களிலும் ,
பூமியிலும் உள்ளவை 
அனைத்தும் யாரை 
துதி செய்கின்றனவோ
அவன் (அனைவரையும்)
மிகைத்தவனும்,
ஞானமுடையவனும் 
ஆவான்
அவனே என் இறைவன்
அவனுக்கே புகழ் 
அனைத்தும் !
=======================
பிறைத்தமிழன்..

திங்கள், 27 மே, 2019

வாகனங்களையும், 
பூமியையும் 
ஆறு நாட்களில் 
படைத்து,
அர்ஷின் மீது 
(தன் மகிமைக்கு 
தக்கவாறு)
உயர்ந்துவிட்ட 
ரப்புல் ஆலமீனே
நீயே எங்கள் 
இறைவன்
புகழ் அனைத்தும் 
உனக்கே அல்லா..!
=====================
பிறைத்தமிழன். 

ஞாயிறு, 26 மே, 2019

சுட்டெரிக்கும் 
சூரியனாலும்,
சுழன்றடிக்கும் 
வாயுக்களாலும்,
திரண்டு குளிரும் 
மேகத்தாலும்,
வறண்ட பூமியை 
வாழ்விக்கும் 
மழையினாலும் 
இந்த பூமியை 
அழகாய் கட்டமைத்த 
வல்லோன்
இறைவனுக்கே 
எல்லாப் புகழும் !
======================
>>>பிறைத்தமிழன்..

வெள்ளி, 24 மே, 2019

பாறைகளாலும்,
படிமங்களாலும்,
பல அடுக்குகளாக 
கடினமாக்கப்பட்டு
காந்தத்தாலும்,
கசிவு  இல்லா  
திரவத்தாலும்,
புவியின்பால் 
ஈர்க்கின்ற விசை  
பொருத்தி
இவ்வுலகைப்படைத்த
வல்லோனுக்கே 
எல்லாப்புகழும் !
===================
பிறைத்தமிழன்.

திங்கள், 20 மே, 2019

ஓர் அறிவுள்ள
                       தாதுக்களையும்,
இரு அறிவுள்ள
                     தாவரங்களையும்,
மூன்ற றிவுள்ள
                ஊர்வனங்களையும்,
நான்ங்கறிவுள்ள
                       பறவைகளையும்,
ஐந்தறிவுள்ள 
                      மிருகங்களையும்,
ஆறறிவுள்ள   
                            மனிதனையும்,
எவன்      படைத்தவனோ,
அவனே   என்  இறைவன்
அவனுக்கே புகழ் அனைத்தும்..
============================
       இவன் : பிறைத்தமிழன்