மரணம் எனும்
மறு சுழற்சிக்கென
மக்கிக்கொண்டிருக்கும்
மனிதக் குப்பைக்குள்-
உயிருள்ள போது மட்டும்
எத்தனை ஏற்றத்தாழ்வு !
வறுமையோடு
போராடுபவனுக்கு '
வயிறு மட்டுமே எல்லை !
வளர்ந்துவர
போராடுபவனுக்கு '
பணம் மட்டுமே எல்லை !
வானம் தொட்ட பணக்காரனுக்கு '
வளைத்துப்போடுவதெல்லாம்
எல்லை ! இவர்களின்-
உதடுகள் சிரிப்பது பேருக்கு !
உள்ளங்கள் அழுவது யாருக்கு ?
====================================
> இவன் ;பிறைத்தமிழன் ..