" இனிவரும் சந்ததிக்கு "
==========================================================================
மாறிக்கொண்டே இருக்கும் சீதோசன நிலைகள்
இயல்பாக மீண்டுகொண்டே இருக்கும
பூமியின் சுழற்சி அதை
நிகழ்த்திக்கொண்டே இருக்கும்
இது இயற்கை
இந்த இயற்கை நிகழ்வுகள் பிறழ்வது ஏன் ?
ஏன் என்றால் மனிதன்
செயற்கையானவைகளை செப்பனிடுவதற்கு
இயற்கையை சிதைகின்றான்
அப்படி இயற்கை சிதைகபடும் போது
அது அதன் சீற்றத்தை வெளிபடுத்தும்
அங்கே இயல்பு நிலைகளில்
ஏற்படுகின்ற மற்றம்
தவிர்க்க முடியாது போகும்
உயிரிணங்கள் வாழ்வதற்கு ஏற்ற
தட்ப வெட்ப நிலைகளை உள்ளடக்கிய
பூமியை படைத்த இறைவன்
மனிதர்கள் தங்கள் விருப்பம்போல்
ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு
சென்று வருவதற்கு ஏதுவாக
பூமியை தட்டையாகவும் படைத்து
அவற்றில் பயமின்றி சுற்றித்தெரிந்து
இளைப்பாறி இன்பம்பெற
கற்களால் ஆன மலைகளைக்கொண்டு
இந்தபூமியை நிலை நிறுத்தினான் இறைவன்
இதன் கட்டமைப்பு நீரை ஆதாரமாக கொண்டு ,
மரபுசாரா நெருப்பை வேப்பமாகக் கொண்டு ,
கணிமங்களாலும் ,தாதுக்களாலும் ,
உரம் ஊட்டப்பட்டு
பாறைகளாலும் ,படிமங்களாலும் ,
பல அடுக்குகளாக கடினமாக்கப்பட்டு
காந்ததாலும் ,கசிவு இல்லாத்திரவத்தாலும் ,
புவியின்பால் ஈர்க்கின்ற விசை இருத்தப்பட்டு
சுட்டெரிக்கும் சூரியனாலும் ,
சுழன்றடிக்கும் வாயுக்களாலும் ,
திரண்டு குளிரும் மேகத்தாலும் ,
வறண்ட பூமியை வாழ்விக்கும் மழையினாலும் ,
உயிர்களுக்கெல்லாம் உன்னதக்கொடையாக ,
உவந்தளித்த கருணைமிக்க
இறைவனை , ஒரு கணமும் மறவாமல்,
இதயத்தைச் சுருக்காமல் ,
இயற்கையை ,
இனிமேலும் சிதைக்காமல் ,
இனிவரும் சந்ததிக்கு
இப்படியே விட்டுச்செல்வோம் அவர்களுக்கு
இதுவே முழு முதல் சொத்தாக
=======================================================================
>>>இவன் :>>>பிறைத்தமிழன் .