மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 24 மே, 2019

பாறைகளாலும்,
படிமங்களாலும்,
பல அடுக்குகளாக 
கடினமாக்கப்பட்டு
காந்தத்தாலும்,
கசிவு  இல்லா  
திரவத்தாலும்,
புவியின்பால் 
ஈர்க்கின்ற விசை  
பொருத்தி
இவ்வுலகைப்படைத்த
வல்லோனுக்கே 
எல்லாப்புகழும் !
===================
பிறைத்தமிழன்.

திங்கள், 20 மே, 2019

ஓர் அறிவுள்ள
                       தாதுக்களையும்,
இரு அறிவுள்ள
                     தாவரங்களையும்,
மூன்ற றிவுள்ள
                ஊர்வனங்களையும்,
நான்ங்கறிவுள்ள
                       பறவைகளையும்,
ஐந்தறிவுள்ள 
                      மிருகங்களையும்,
ஆறறிவுள்ள   
                            மனிதனையும்,
எவன்      படைத்தவனோ,
அவனே   என்  இறைவன்
அவனுக்கே புகழ் அனைத்தும்..
============================
       இவன் : பிறைத்தமிழன் 

ஞாயிறு, 19 மே, 2019



சூரியக்   குடும்பத்தில் 

அங்கம் வகிக்கின்ற

                   பூவி உள்ளிட்ட அணைத்து 

கோள்களையும் படைத்து

படைத்து பரிபாலிக்கின்ற 

ஏக இறையோனுக்கே

எல்லாப்புகழும்...


வெள்ளி, 11 ஜனவரி, 2019

"உழவர் திருநாள் "

வான் அழுதாள் மண் சிரிக்கும்
மண் செழித்தால் மனு சிறக்கும்
இயற்கை சீற்றத்தில்
சிதைந்துவிட்ட  உழவனே
எனதருமை தமிழனே  நீ
செழிக்கும் காலம்தான் எப்போது?
வேரோடும் வேரடி மண்ணோடும்
வீழ்த்தப்பட்ட உன் விவசாயத்தால்
தேரோடும் திருவிழாக்களுக்கு
இங்கே பஞ்சம் உன்னை சாய்க்க
சதி செய்வோரின் சாம்ராஜ்யம்
சரிந்தே போகாதென
சலித்துப் போகாதே சிலிர்த்து எழு
மண் உழுது மனம் குளிரா  உன்னை
மார்கழி விடை கொடுத்து மறுபடி
"தை"பிறந்து குளிர்விக்கட்டும் என
உலகெங்கிலும் வாழும் 
என் தமிழனுக்கு
பிறைத்தமிழனின்
உளம் கனிந்த உழவர் தின
வாழ்த்துகள் ===============================================

திங்கள், 31 டிசம்பர், 2018


"புத்தாண்டு"
தோற்றவர்ககள் வென்றிடவும் ,
துவன்டவர்கள் மீண்டிடவும் !
பண்முகத் தன்மைகளை ,
பாரதத்தின் தொண்மைகளை !
படுகுழியில் தள்ளிவிட்ட , 
கொடும்  பாசிச சக்திகளை !
களையெடுக்கும் முகமாக ,
வருகின்ற புது வருடம் !
வசந்தத்தைப் பொழியட்டும் -நம் 
வாழ்வில் வண்ணங்கள் மிளிறட்டும்
என வாழ்த்துகின்ற பிறைத்தமிழனின்
புத்தாண்டுச்  சூளுரைகள் ,
நண்பர்கள் வலைதளத்தில் 
நாளெல்லாம் பரவட்டும்....
=================================
இவன்: பிறைத்தமிழன்...




வியாழன், 14 டிசம்பர், 2017

"புத்தாண்டு"


இயற்கைப் பேரிடர் அற்ற 
இரண்டாயிரத்து பதினெட்டு 
இனிதே துவங்கட்டும் 
இகத்தில் உள்ள எல்லா உயிர்களும் 
இன்புற்று வாழட்டும் !
எல்லை கடந்து ஒளிரும் 
எம் இந்திய தேசத்துள் 
மனிதம் சிதைக்கின்ற  
மதவெறி ஒழியட்டும் !
மக்கள் நலம் மறந்தோரின் 
மகுடங்கள் வீழட்டும் !
பணத்தாசை பிடித்த 
பச்சோந்தி அரசியலை 
பாருலகோர் கூடி பாழ்பட சபிக்கட்டும் !
புரட்சி செய்யாது புதுமைகள் நிகழ 
வறட்சி இல்லாத 
வான்மழை பொழியட்டும் !
இனியாவது வக்கிரம் இல்லாத 
வர்க்கமாய் வாழ மனிதர்கள் பழகட்டும்! 

புத்தாண்டே வருக, புதுப் பொலிவு தருக! 
 >>>:இவன்: பிரியமுடன் பிறைத்தமிழன்...

புதன், 29 நவம்பர், 2017

"கொசுவுக்கு பஞ்சமில்லை "

பெண்ணாக பிறந்தால்  மதிப்பில்லை
பிறக்கின்ற குழந்தைக்கு பாலில்லை
ஏழைக்குக்  கல்வி  எளிதில்லை
கற்கின்ற கல்வியில் தரமில்லை
கற்றவனுக்கு உரிய வேலையில்லை
திறமைஇருந்தும் பலன்இல்லை
கொசுவுக்கு பஞ்சமில்லை
கொள்ளை நோய் குறையவில்லை
மருத்துவத்தில் உண்மையில்லை
மக்களிடம் பணமில்லை
வாழ வழியில்லை
வழுவிலே சாகும் துணிவில்லை
தலைவிரித்தாடும் மணல் கொள்ளை
தமிழக நதிகளில் உயிரில்லை
பெய்கின்ற  மழைநீரை
பேனத் தெளிவில்லை
காவிரி நீர் வரத்தில்லை
கர்நாடகமும் திருந்தவில்லை
நீட்டுக்கு விலக்கில்லை
நீதிக்கும் மதிப்பில்லை
மதுவை ஒழிக்கும் மனமில்லை
மது விற்பனையில் புதிய  எல்லை
குற்றங்கள்  குறைந்த பாடில்லை
வெற்று அறிக்கைக்கோ குறைவில்லை
வேடிக்கை பார்ப்பவனுக்கு வெட்கமில்லை
சட்டத்தில் சத்தியமில்லை
அதை காப்பவரிடம் கண்ணியமில்லை
அச்சடித்த புதுநோட்டு உளரவில்லை
ஆட்சியாளர் தவிர நாடு இன்னும் வளரவில்லை
உலகம் சுற்றும் தலைவர்களால்
ஒரு  பலனும் கிடைக்கவில்லை 
ஊரை அடித்து உலையில் போடும்
உச்ச பணக்காரர்கள் மட்டுமே
அவர்களின் செல்லப் பிள்ளை
செத்துப்போன பின்னாலும்
குற்றவாளியை கொண்டாடுவது
குறையவில்லை அந்த மூதேவி
செய்த புண்ணியத்தால்
முதல்வர்களுக்குப்  பஞ்சமில்லை
=====================================
   இவன்: பிறைத்தமிழன்..