மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

"உழவர் திருநாள் "

வான் அழுதாள் மண் சிரிக்கும்
மண் செழித்தால் மனு சிறக்கும்
இயற்கை சீற்றத்தில்
சிதைந்துவிட்ட  உழவனே
எனதருமை தமிழனே  நீ
செழிக்கும் காலம்தான் எப்போது?
வேரோடும் வேரடி மண்ணோடும்
வீழ்த்தப்பட்ட உன் விவசாயத்தால்
தேரோடும் திருவிழாக்களுக்கு
இங்கே பஞ்சம் உன்னை சாய்க்க
சதி செய்வோரின் சாம்ராஜ்யம்
சரிந்தே போகாதென
சலித்துப் போகாதே சிலிர்த்து எழு
மண் உழுது மனம் குளிரா  உன்னை
மார்கழி விடை கொடுத்து மறுபடி
"தை"பிறந்து குளிர்விக்கட்டும் என
உலகெங்கிலும் வாழும் 
என் தமிழனுக்கு
பிறைத்தமிழனின்
உளம் கனிந்த உழவர் தின
வாழ்த்துகள் ===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக