மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 20 ஜூன், 2012

தொலைந்து போ துக்கமே !

                                                                                    
இன்பம்  எங்களின் எல்லை  கடந்து 
எளிதாய்ச்  செல்லும் போது
எரிக்கத்தெரிந்து  , எதிர்க்கத் துணிந்த
எங்களிடம்  "துன்பம் "

எத்தனை காலம்  இடிந்து  போகா திருப்பு க் 
கொள்ளல்  முடியும் ?
                                                                                             
தொலைந்து  போ  துக்கமே  !
மடிந்து போவோம் என
மனக்கோட்டை  கட்டாதே  !

உறுதியாய்  உன்னைத்  துரத்த
உண்ண மறுத்தும் , உறங்க  மறந்தும்
சடுதியாய்  அடைவோம்  விடியலை !
                                                                                               
உள்ளம்  அழுகின்ற  போது ,
உதடு சிரிக்கும்   போட்டியில்
உச்சப்பரிசு  பெற்றவர்கள்  நாங்கள்
!
எங்கள்   சட்டைப் பைகளில் ,
சில்லறை சேரா  சல்லடைக் கிழிசல்கள்
சகஜம்தான்  !        இருந்தும்  ,
                                                                                                         
எம் மக்களென்றும் ,
மக்கள் பெற்ற  மழலை என்றும் ,
உள்ளம் நிறைத்து  ஒய்யாரமாய்  அமர்ந்தபடி,

எங்கள் வீடு ,    வாசல்   நிறைத்து
வசந்தங்களாய்  வலம் வருது , அதில்
பல  வண்ணங்கள்  நிலை பெருது !
                                                                                                        
வறட்சியிலும்  வாழ்க்கை   இனிக்கிறது ,

வறுமையிலும்  பொறுமை  சிறக்கிறது !
இறுதியில்  நெறி நிறை  சீமானாக   இருந்து ,
இறைநெறி  ஈமானோடு  இறப்போம்  என்ற  

 நம்பிக்கை    பிறக்கிறது  ....! 
                                                                                                           
-------~: இவன் > பிறைத்தமிழன் :~------

சனி, 5 மே, 2012

பொறுமை >

  
தீங்கை  தீண்டாமல்  களைவது
============================================
  பண்பு >         அது ,  
பிறரிடத்துப் பேணும்  மனித  ஒழுக்கம் ...! 
பார்வை       அது ,    
பிரபஞ்சத்தை உருவகப்படுத்துவது ...!
 பிறப்பு >     அது ,     
இறப்பதற்கான  இன்றைய தயாரிப்பு ..!
பீதி >             அது ,     
அச்சத்தின் அடுத்தசகோதரன்...!
  புன்னகை >   அது 
 சத்தம் குறைந்த சந்தோசம்.....!
   பூக்கள் >       அது , 
தாதுக்களையும் , தாவரங்களையும் வேறுபடுத்துவது....!
    பெண் >          அது ,
ஆணில்    தோன்றிய  ஆணுக்கான  அற்ப்புதம் ...!
பேதமை >     அது ,  
 தாழ்வு தனை தனித்துவத்துடன் வேறுபடுத்துவது.... ! 
பைந்தமிழ்  >  அது ,
  மொத்தமாய்  செறிந்து , சிறந்த  முத்தமிழ் ...! 
பொறுமை >   அது , 
 தீங்கை தீண்டாமல்  களைவது ...!
 போர் >          அது  ,     
செயற்கைப் பேரழிவின்   செல்லப் பெயர் ...!
 பெளத்தம் >     அது ,
கடவுளுக்கான மனித முயற்சி ...! 
=============================================================
        >>   இவன்  >>   பிறைத்தமிழன் ..........!
-------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கானல் நீர் >

                                        கானல் நீர்                                            
                                                                                                        
கற்ப்பு >     அது  ,
 பவித்திரத்தை பறைசாற்றும் கலாச்சாரம் ..............!
கானல் நீர் >  அது ,
ஒருங்கிணைந்த உயர் வெப்பம் .....................................!
கிளர்ச்சி >     அது ,
அடங்கமறுக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடு..........!
கீழ்ப்படிதல் >  அது  
அதிகாரங்களை ஆமோதிக்கும் செயல் .....................!
குடை  >         அது ,
கைக்குள்  அடங்கிய  காருண்யம் ..................................!
கூப்பாடு >     அது ,  
செய்வதறியாச் சொல்லும் சேதி ....................................!
கெடுதல்  >     அது ,     
பிறருக்கென பெற்ற குழந்தை ..........................................!
கேள்வி  >      அது ,  .
அறிதலைச் செய்யும் ஆராய்ச்சி .....................................!
கைமாறு  >     அது ,        
நன்றிக் கடன் ..............................................................................!
கொள்கை  >    அது ,  
மாற்றத்திற்கு  உட்படாத   விருப்பம் .............................!
கோட்டை >  அது ,
நினைவுகூரும் பெயரிடப்பட்ட பிரம்மாண்டம் .......!
கெளரவம்  >  அது ,
உயர்த்தப்பட்ட  பெருமைமிக்க தனித்தன்மை ........!
க் >>இது ,  
பொருள்பட்ட   புள்ளியல்   நிறுத்தம் ............................!
                                                                                                                                    
                                                                                                                                    
                                     இவன் >>     பிறைத்தமிழன்                                         

சனி, 3 மார்ச், 2012

நட்பென்றும் , கற்ப் பென்றும் ,


   தூசி ,  புகை   துளியுமின்றி , ஒரு 
   துயில்  கலைந்த  தூரத்து கிராமம்  !
                                                ...........அங்கே 
   பனித்துளி     போர்த்திய 
   பசும்புல்       நுனி   !
                                        .....................அதில்  
   பரவசம்    பொங்க  
   பாதம்  பதித்தேன்  !

  ஒவ்வ   மறுத்த 
   உள்ளுருப்  பனைத்தும் ,

   சில்லென்று   சிலிர்த்து  ,
   சேதி  யொன்றைச் சொன்னதே !
                                          ......................ஆம் 

நகரத்து    வீதிகளில்   ,    
நான் நடக்கும் போதெல்லாம்  !     

தகிக்கின்ற  சாலைகள் ,    
தார்ப்  பாலை  போலன்றோ !     

அல்லும்  ,   பகலும்  ,    
அனல்  காற்று  வீச !     

உள்ளும் ,  புறமும்   ,    
உருகிய   மேனி  !     

 சொல்லும் , செயலும்   ,    
சோர்ந்தே  போக !     

வாழும்    வாழ்வில்   ,    
வசந்தங்கள்  யாவும் !     

வந்து  , வந்து  போகின்ற  ,    
வண்ணக்கனவே  !    
...............என     

சில்லென்று   சிலிர்த்த மேனி   ,   
சேதி  யொன்றை  சொன்னதே  !    

   சொர்க்கமாய்    நகரத்தைச்  சமைத்து   ,    
சுலபமாய்   நரகத்தில்   வாழ்வதை   விட  !    

சுமைகளில்  இருக்கின்ற  ,    
சோகத்தை  தாங்கி  !    
கடமைகள்   நிறைவேற்றும் ,    
கனவுகள்   வேண்டி !    
     
   கானகமும்  ,காடுகளும்     
விதை  இட்டு   மிதிக்கின்ற ,    
தடமாகும்  !      
............. அதில்   ,      


நட்பென்றும்   ,  கற்ப்  பென்றும்  ,     

விளைகின்ற  நாற்றுக்கு      
  இடுகின்ற   உரமாகும்  !     
.............அதுவே      
   
தேவையும்   , தேடுதலும்  ,    
கிடைக்கப்     பெறுகின்ற      
உயர்   கிராமத்துக்      
களமாகும்  ..........!!!      
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 
இவன்   >>>   பிறைத்தமிழன்   
       
  

சனி, 18 பிப்ரவரி, 2012

சீற்றம் >

 
ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை 
                           இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .
            ========================================================                         
         சக்தி > அது        
         வலிமை   கூறும்   திறன்   ..............................................!
         சாந்தம் >  அது   
         கருணையின்  காந்தக்  குறியீடு ................................!
         சினம் > அது  
         ஒடுக்கவும் , அடக்கவும்  ஒவ்வாநிலை ...............!
         சீற்றம் >  அது  
         இயற்கையும் , இயற்றலும்  எல்லை  கடப்பது .!
         சுழற்ச்சி > அது  
         மாற்றங்கள் , மாறாமல்   நிகழ்வது.........................!
         சூழ்ச்சி > அது       
         பிறரை  தாக்கும்  பேராயுதம் .....................................!
         செருக்கு >  அது  
         செல்வத்தால்   சிறப்புற  வல்லது ...........................!
         சேவகம் >  அது  
         ஊதிய  வரம்பைக்  கடந்த  ஊழியம் ........................!
         சைகை > அது  
         உலக  மொழியின்   உயர் இலக்கணம் ..................!
         சொர்க்கம் > அது  
         சொல்லிலடங்கா  இன்பத்தைச்  சுகிப்பது...........!
         சோதனை > அது  
         நெறிப்படுத்த  நீட்டப்படும்  விரல் ...........................!
          செளவ்கர்யம் > அது  
          வசப்படுத்தப்   பட்ட   வசதி .........................................!
         (இ )ச்சை  > அது  
         ஈடற்ற   சுய   விருப்பம் ..................................................! 
---------------------------------------------------------------------------------------
            இவன் >>   >>>பிறைத்தமிழன்

சனி, 4 பிப்ரவரி, 2012

என்ன தவம் செய்தோமோ ,


{லாஇலாஹ   இல்லல்லாஹு    முஹம்மதுர்  ரசூலுல்லாஹி }
=============================================================
            உள்ளங்கள்   ஒன்றிணைந் திருக்க !
            உயர்  ஈகை  எங்கும்  பொழிந் திருக்க \ 
உலகம்  ஒரு  கொடியின் கீழ்        
உறுதிபெற   நிலைத் திருக்க !      
           வல்லோன்   வகுத்த  வான் - 
           மறை   எங்கும்  செழித் திருக்க !
ஆலங்களின்  அதிபதியாம்  வல்ல ,  
அல்லாஹ்வின்  தூது   வராய் !            
          அழகிய  முன்  மாதிரியாய் ,
          அற்புதத்தின்  பொற்பயனாய் !
 நேர்த்தி மிகு    தலைவருமாய்  ,   
நீதி மிகு     அரசருமாய்  !                  
           காடுகளில்  பாலைகளில் ,
           பணி  படர்ந்த  நாடுகளில் !
சோலைகளில்  தீவுகளில் ,             
சொல்லாற்றும்   நாயகராம் !          
           அறிவு   மலர்ச் சோலை ,
           அறவழி     சாலை ! நபி 
அஹமதை  அள்ளித்   தந்தது ,         
அரபு   மணர்ப்  பாலை !                        
            வல்லோன்   வகுத்த  வான் -
            மறை ,  எங்கும்  செழித் திருக்க !
மனித  னெனும்  பிறவிக்  கடன் ,  
தீராதென    மிகைத் திருக்க !            
            மாநபி  உம்மத் தெனும் உயர் ,
            மகிழ்ச்சியும்  சேர்ந்திருக்க !
என்ன  தவம்  செய்தோமோ ,          
ஏந்தல்  நபி  வழி  நடக்க !                   
           உத்தமத்   திரு நபியின் ,
           உதய  தின   செய்தியாய் !   இது 

உலக  மக்களின்  உணர்வோடு ,
ஒன்றாய்  கலந்திருக்க --> பிரியமுடன் 
------------>> பிறைத்தமிழன் <<--------------

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

* முடிவற்ற சுழற்ச்சி *

      மகரந்தம் சிந்தா மலர்      
 ======================
    மமமமமமமமம         
மமமமமமமமமம
    மமமமமமம    
    மமமமமமமமமம   
    மமமமமமமமமம    
    மமமமமமமமமம    
   மமமமமமமமமமம  
======================================
மல்லிகை > அது 
மகரந்தம் சிந்தா மலர் .................................!
மார்கழி > அது
மணம் சிலிர்க்கும் குளிர் ..........................!
மின்னல் > அது
மேகம் கிழிக்கும் வாள் ...........................!
மீன் > அது
வான் அளக்கும் கோள் ............................!
முகம் > அது
முன்னவர்களின் அடையாளம் ................!
மூப்பு >;அது
முடிவுக்கான முடிவற்ற சுழற்ச்ற்சி.............!  
 மெட்டு >:அது
சங்கீத  ஒலிகளின்  சாரம்..............................!
 மேன்மை > அது
மெருகுடை பொருளின் மிகைத்தல் ..........!
மையல் > அது
சிதறலற்ற உணர்வுக் குவியல் ..................!
மொட்டு > அது
மலர்களின் மகரந்தக் கருவறை ................!
மோகம் > அது
அளவற்ற ஆசைச் சிதறல் .............................!
மெளனம் > அது
பிணக்குகளை பிற்ப்படுத்தும் யுக்தி .........!
ம்................> அது
இதழ் பிரியா இசைவு...................................!
----------------------------------------------------------------------
இவன் :பிறைத்தமிழன் .